சோயா அக்தர்
சோயா அக்தர் (Zoya Akhtar) (பிறப்பு அக்டோபர் 14, 1972) இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராவார். இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் (NYU) திரைப்படத்துறையில் 'டிப்ளமோ' பட்டம் பெற்ற பின்னர், மீரா நாயர், டோனி கெர்பர் மற்றும் தேவ் பெனகல் போன்றோரிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்தார்.
இவர் "லக் பை சான்ஸ்" (2009), ஜிந்தகி நா மிலேகி டொபாரா" (2011), மற்றும் "ஷீலா கி ஜவானி"(2013) போன்ற படங்களை இயக்கியுள்ளார். "டலாஷ்" (2012) திரைப்படத்திற்கு ரீமா கங்டிலுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார். பின்னர், "தில் தடக்னெ டொ" (2015) என்கிற பஞ்சாபி குடும்ப பின்னணியைக் கொண்ட திரைப்படத்தை இயக்கினார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]சோயா அக்தர், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான ஜாவேத் அக்தர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான ஹனி இரானிக்கும் மகளாகப் பிறந்தார். சோயாவின் மாற்றாந்தாய் சபனா ஆசுமி. இவருடைய இளைய சகோதரர் பர்கான் அக்தார் நடிகர் மற்றும் இயக்குநராக உள்ளார். இவர் மும்பையிலுள்ள மேனேக்ஜி கூப்பர் நிறுவனத்தில் கலந்துகொண்டார். செயிண்ட் சேவியர் கல்லூரியில் பயின்று பி. ஏ. பட்டம் பெற்றார். பின்னர், படத் தயாரிப்பு பற்றிய துறையில் படிப்பதற்காக, 'நியூயார்க் பல்கலைக்கழக திரைப்பட பள்ளியில்' சேர்ந்தார்.
இவர் உருதுக் கவிஞர் முஜ்தார் கைராபடியின் கொள்ளுப்பேத்தி மற்றும் ஜான் நிசார் அக்தரின் பேத்தியாவார்.
எவருமே கடவுளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்று நம்பும் தந்தை மற்றும் சகோதரனுடன் வளர்ந்ததால், இவருக்கு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.[1][2]
தொழில் வாழ்க்கை
[தொகு]பென்டகிராம் நிறுவனத்திற்கு "ப்ரைஸ் ஆஃப் புல்லட்ஸ்" என்கிற பெயரில் வெளிவந்த இசை காணொளிக்கு உதவி இயக்குநராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர், "தில் சாத்தா ஹை", "ஸ்பிலிட் வைட் ஓப்பன்" மற்றும் பர்கான் அக்தாரின் "லக்சயா" போன்ற படங்களில் துணை இயக்குநராக பணிபுரிந்தார். ரீமா கங்டிலின் "ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட்"ற்கு நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தார். மேலும் "எக்சல் என்டெர்டெயிண்மென்ட்" தயாரிப்பையும் ஏற்றார்.[3]
பர்கான் அக்தர் மற்றும் கொங்கனா சென் சர்மா நடித்துள்ள "லக் பை சான்ஸ்"(2009) படத்தின் மூலம் சோயா அக்தர் இயக்குநராக அறிமுகமானார். இது தொழில்வர்ககத்தை முறியடிக்கும் போராளி நடிகனைப் பற்றிய கதையாகும். இப் படம் அதிக வசூலைப் பெறவில்லை என்றாலும் கூட விமரிசகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டது.[4][5]
2011 இல், "ஜிந்தகி நா மிலேகி டொபாரா" படத்தை இயக்கினார். இதில், கிருத்திக் ரோஷன், அபய் தியோல், பர்கான் அக்தார், கத்ரீனா கைஃப் மற்றும் கல்கி கோய்ச்லின் நடித்துள்ளனர்.[6] இத் திரைப்படம் வசூலில் சாதனை புரிந்து நல்ல வரவேற்பை பெற்றதுடன் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது.
2013 ல் அக்தர், பம்பாய் டாக்கீஸ் திரைப்படத்திற்காக அனுராக் காஷ்யப், திபக்கர் பானர்ஜி மற்றும் கரண் ஜோஹர் உடன் இணைந்தார். இது 100 வருட இந்திய திரைப்படங்களின் கொண்டாட்டமாகும்.[7][8]
பின்னர் இவர் 2015இல் "தில் தடக்னெ டொ" படத்தை இயக்கினார். இதில் அனில் கபூர்,ஷெபாலி ஷா, பிரியங்கா சோப்ரா, ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா மற்றும் பர்கான் அக்தார் நடித்துள்ளனர்.[9][10]
'தில் தடக்னெ டொ' படத்திற்குப் பின்னர், ரன்வீர் சிங் மற்றும் அலீயா பட். நடித்துள்ள "குல்லி பாய்" திரைப்படத்தை இயக்கினார்.[11],
பிற தோற்றங்கள்
[தொகு]இவர் பிப்ரவரி 14, 2007இல் நடைபெற்ற "கோன் பனேகா குரோர்பதி" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது சகோதரர் பர்கான் அக்தாருடன் கலந்துகொண்டார்.[12] மேலும், 'காம சூத்ரா' திரைப்படத்தில் மிகக் குறுகிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "10 Self-Proclaimed Celebrity Atheists | Entertainment | iDiva.com | Page 4". iDiva.com. பார்க்கப்பட்ட நாள் 16 December 2013.
- ↑ "Celebs who are atheist". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 16 September 2016.
- ↑ "Zoya Akhtar". Excel Entertainment.
- ↑ "Zoya Akhtar". Outlook. 9 February 2009. http://www.outlookindia.com/article.aspx?239688. பார்த்த நாள்: 28 March 2010.
- ↑ Adarsh, Taran. "Box office Top 5". Bollywood hungama. Archived from the original on 22 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Zindagi Na Milegi Dobara: Cast and Crew details". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 2 July 2011.
- ↑ "Bollywood directors join hands to pay homage to Indian cinema. She teamed up again with the same directorial squad, consisting of Anurag Kashyap, Dibakar Banerjee, and Karan Johar to a direct Lust Stories, a Netflix Original Indian anthology film, consisting of four short film segments". The Times of India. 7 May 2012 இம் மூலத்தில் இருந்து 22 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120622040500/http://articles.timesofindia.indiatimes.com/2012-05-07/news-interviews/31599052_1_cinema-karan-johar-indian-films. பார்த்த நாள்: 28 January 2012.
- ↑ Dubey, Bharati (25 January 2012). "Film industry to mark Phalke centenary". The Times of India இம் மூலத்தில் இருந்து 19 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130419031257/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-25/news-interviews/36527754_1_film-industry-dadasaheb-phalke-indian-cinema. பார்த்த நாள்: 28 January 2012.
- ↑ "'Dil Dhadakne Do' - Movie Review". மிட் டே. http://www.mid-day.com/articles/dil-dhadakne-do---movie-review/16265195. பார்த்த நாள்: 4 June 2015.
- ↑ "Zoya Akhtar's film is about a dysfunctional Punjabi family". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 February 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/Zoya-Akhtars-film-is-about-a-dysfunctional-Punjabi-family/articleshow/30851535.cms. பார்த்த நாள்: 23 February 2014.
- ↑ "Ranveer Singh to turn composer for Zoya Akhtar's Gully Boyz". Deccan Chronicle. 23 June 2017. http://www.deccanchronicle.com/entertainment/bollywood/230617/ranveer-singh-to-turn-composer-in-gully-boyz.html.
- ↑ "Discuss: A Shah Rukh Valentine". Rediff. 14 February 2007. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
- ↑ "Discuss: Zoya Akhtar's IMDB Profile".