ஜங் பகதூர் ராணா
ஜங் பகதூர் ராணா ஜங் பகதூர் குன்வர் ராணா | |
---|---|
श्री ३ महाराजा जङ्ग बहादुर कुँवर राणाजी | |
மகாராஜா ஜங்பகதூர் ராணா | |
நேபாள இராச்சியத்தின் எட்டாவது பிரதம அமைச்சர் | |
கஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மகாராஜா | |
பதவியில் 15 செப்டம்பர் 1846 - 1 அகஸ்டு 1856 | |
ஆட்சியாளர் | ராஜேந்திர விக்ரம் ஷா |
முன்னையவர் | பதே ஜங் ஷா |
பின்னவர் | பம் பகதூர் குன்வர் |
பதவியில் 28 சூன் 1857 - 25 பிப்ரவரி 1877 | |
ஆட்சியாளர் | சுரேந்திர விக்ரம் ஷா |
முன்னையவர் | பம் பகதூர் குன்வர் |
பின்னவர் | ரணதீப் சிங் குன்வர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வீர நரசிங்க குன்வர் 18 சூலை 1817 |
இறப்பு | 25 பெப்ரவரி 1877 பதார்காட் | (அகவை 59)
குடியுரிமை | நேபாளம் |
தேசியம் | நேபாளி |
பிள்ளைகள் | ஜெகத் ஜங் பகதூர் ராணா
|
பெற்றோர் | தந்தை பால நரசிங்க குன்வர் |
உறவினர் | தாய்மாமன் மாதாபார் சிங் தாபா |
அறியப்படுவது | நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சர் |
ஸ்ரீ ஜங் பகதூர் குன்வர் ராணா श्री ३ महाराज जङ्गबहादुर कुँवर राणा | |||||
---|---|---|---|---|---|
கஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மகாராஜா | |||||
ஆட்சிக்காலம் | 6 ஆகஸ்டு 1856 – 25 பிப்ரவரி 1877 | ||||
முடிசூட்டுதல் | 6 ஆகஸ்டு 1856[2] | ||||
முன்னையவர் | established | ||||
பின்னையவர் | ரணதீப் சிங் குன்வர் | ||||
துணைவர் | இரண்யகர்ப தேவி கைலா மகாராணி கங்கா மகாராணி சித்தி கஜலெட்சுமி புத்தலி மகாராணி மிஸ்ரி மகாராணி மீனா மகாராணி தக்சோக் ராணி | ||||
குழந்தைகளின் பெயர்கள் | பீமா பிரதாப் ஜங் ராணா ஜெகத் ஜங் பகதூர் ராணா ஜித் ஜங் பகதூர் ராணா பத்ம ஜங் பகதூர் ராணா பபெர் ஜங் ராணா ரணவீர ஜங் ராண மற்றும் 7 மகன்கள் பதான் குமாரி ராணா தாரா இராச்சிய லெட்சுமி லலிதா இராஜேஸ்வரி சோமகர்வ திவ்வியேஷ்வரி | ||||
| |||||
அரச மரபு | ராணா வம்சம் | ||||
தந்தை | பால நரசிங்க குன்வர் | ||||
தாய் | கணேஷ் குமாரி தாபா குன்வர் | ||||
மதம் | இந்து சமயம் |
ஜங் பகதூர் ராணா (Jung Bahadur Kunwar Ranaji)[3] (இயற்பெயர்: வீர நரசிங் குன்வர் (Bir Narsingh Kunwar) (நேபாளி: वीर नरसिंह कुँवर), (பிறப்பு:18 சூன் 1817 - இறப்பு:25 பிப்ரவரி 1877), நேபாள் இராச்சியத்தில் ராணா வம்சத்தை நிறுவியரும், ஷா வம்ச மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் படைத்தலைவராக இருந்தவர் ஆவார். பின்னர் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, ஜங் பகதூர் ராணாவும், அவரது வம்சத்தினரும் நேபாள இராச்சியத்தை, 1856 முதல் 1951 முடிய ஆண்டனர்.
கஸ்கி மற்றும் லம்ஜுங்கின் குறுநில மன்னராக இருந்த ஜங் பகதூர் ராணா, பின்னர் நேபாள இராச்சியத்தின் பரம்பரை தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் பணியாற்றியவர்.
தற்கால கர்நாடகா மாநிலததின் குடகு நாட்டின் மன்னர் சிக்க வீர ராஜேந்திரனின் மகள் கங்காதேவியை, ஜங் பகதூர் ராணா, வாரணாசியில் திருமணம் செய்து கொண்டவர்.
நேபாள இராச்சியத்தின் ஷா வம்ச குடும்பத்தில் அரசியல் பிணக்குகள் ஏற்பட்ட போது, ஜங் பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, அனைத்து ஆட்சி அதிகாரத்தை தானே எடுத்துக் கொண்டு, நாட்டை இருபதாண்டுகள் ஆண்டவர்.
நேபாள வரலாற்றில் கொடுங்கோல் மன்னர் எனப் பெயர் பெற்ற ஜங் பகதூர் ராணா, ராணா வம்சத்தை நிறுவினார். ஜங் பகதூர் ராணாவும் ராணா வம்சத்தினர் நேபாளத்தை கி பி 1856 முதல் 1951 முடிய ஆண்டனர்.[4][5]
ஜங் பகதூர் ராணாவின் தாத்தா ராமகிருஷ்ண குன்வர், பிரிதிவி நாராயணன் ஷா நிறுவிய நேபாள இராச்சியத்தின் பெரும் படைத்தலைவராக பணியாற்றியவர்.
இவரது தந்தை பால நரசிங் குன்வர், ராணா பகதூர் ஷாவின் அரசவையில் செல்வாக்குடன் விளங்கியவர்.
கிபி 1857ல் நேபாள மன்னர் சுரேந்திர விக்ரம் ஷா, ஜங் பகதூர் குன்வருக்கு, ராணா என்ற பட்டம் வழங்கினார். இவரது வம்சத்தினரும் ராணா என்ற பட்டதுடன் அழைக்கப்பட்டனர்.
இதனையும் காண்க
[தொகு]- நேபாள இராச்சியம்
- ஷா வம்சம்
- பிரிதிவி நாராயணன் ஷா
- ராணா வம்சம்
- சேத்திரி
- குடகு இராச்சியம்
- சிக்க வீர ராஜேந்திரன்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Google Books
- ↑ Royal Ark
- ↑ http://www.royalark.net/Nepal/lamb3.htm
- ↑ Rana, Purushottam S.J.B. (1998). Jung Bahadur Rana: the story of his rise and glory. Book Faith India. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7303-087-1.
- ↑ Dietrich, Angela (1996). "Buddhist Monks and Rana Rulers: A History of Persecution". Buddhist Himalaya: A Journal of Nagarjuna Institute of Exact Methods. http://ccbs.ntu.edu.tw/FULLTEXT/JR-BH/bh117536.htm. பார்த்த நாள்: 17 September 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Library of Congress
- Mc Findia பரணிடப்பட்டது 2007-04-30 at the வந்தவழி இயந்திரம்
- Royal Ark
- Gautam, Prawash. (2011-10-02). Kot legacy and lessons பரணிடப்பட்டது 2011-10-03 at the வந்தவழி இயந்திரம். www.ekantipur.com. Retrieved: 26 December 2011.
மேலும் படிக்க
[தொகு]- Regmi, D. R. (1958). A century of family autocracy in Nepal: being the account of the condition and history of Nepal during the last hundred years of Rana autocracy, 1846–1949. Kathmandu: Nepali National Congress. p. 326.