ஜெய்சூர்யா (திரைப்படம்)
ஜெய்சூர்யா | |
---|---|
இயக்கம் | மனோஜ் குமார் |
தயாரிப்பு | மனோஜ் குமார் செல்வி மனோஜ் குமார் |
கதை | மனோஜ் குமார் |
இசை | தேவா |
நடிப்பு | அர்ஜுன் லைலா சாயா சிங் வடிவேலு |
ஒளிப்பதிவு | ஏ. கார்த்திக் ராஜா |
படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
கலையகம் | குரு பிலிம்ஸ் |
விநியோகம் | லட்சுமிப்ரியா கம்பைன்ஸ் |
வெளியீடு | 17 திசம்பர் 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜெய்சூர்யா 2004 ஆம் ஆண்டு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடித்து மனோஜ்குமார் இயக்கத்தில், தேவா இசையில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படத்தில் லைலா, சாயாசிங் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்தனர்.[1][2][3] இப்படம் தெலுங்கில் மொழிமாற்றப்பட்டு இதே பெயரில் வெளியானது.[4]
கதைச்சுருக்கம்
[தொகு]சூர்யா (அர்ஜுன்) சென்னை நகரத்தின் தாதாவாக இருந்து பல பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கிறான். அவனுடைய உதவியாளராக இருப்பவள் பேபி (லைலா). சூர்யாவும் பேபியும் காதலர்கள். சூர்யாவுக்குப் போட்டியான மற்றொரு தாதா பசுபதி (சோப்ராஜ்). சட்ட விரோதமாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் தவறான வழிகளில் பணம் சேர்க்கும் காவல் துணை ஆணையர் (இளவரசு) மற்றும் அவரின் சகோதரரான காவல்துறை அமைச்சர் (ராஜ் கபூர்) இருவரும் சூர்யாவின் திட்டத்தால் சிக்கிக் கொள்கின்றனர். இவர்களின் தவறுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கும் சூர்யாவால் அவர்களின் பதவி பறிபோகிறது. இதனால் அவர்கள் சூர்யாவின் எதிரியான பசுபதியின் உதவியுடன் சூர்யாவைக் கொல்லத் திட்டமிடுகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுபவர் ஜெய் ஆனந்த் (அர்ஜுன் 2). அவரைக் கடத்தத் திட்டமிடும் கொல்கத்தாவைச் சேர்ந்த தாதா (கோட்டா சீனிவாசராவ்) அதற்காக பசுபதியின் உதவியை நாடுகிறார். இவர்களின் திட்டத்தை அறிந்துகொண்ட சூர்யா ஆட்சியர் ஜெய்யைக் காப்பாற்ற முடிவு செய்கிறான். அவரைக் காப்பாற்றும் போது ஜெய்யை நேரடியாகக் காணும் சூர்யா அவரும் தன் முகத்தோற்றத்துடன் இருப்பதுகண்டு ஆச்சர்யம் கொள்கிறான். ஜெய்யின் காதலி பிரியா (சாயாசிங்) ஜெய்யின் கடந்தகாலம் பற்றி சூர்யாவுக்குச் சொல்கிறாள். இறுதியில் ஜெய்யும் சூர்யாவும் இணைந்து தங்கள் எதிரிகளை எப்படி வெல்கிறார்கள் என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
[தொகு]- அர்ஜுன் - சூர்யா / ஜெய் ஆனந்த்
- லைலா - பேபி
- சாயாசிங் - சாருபிரியா
- வடிவேலு - சூசை
- கோட்டா சீனிவாசராவ் - ஹைவேஸ் கோவிந்தன்
- சோப்ராஜ் - பசுபதி
- இளவரசு
- ராஜ்கபூர்
- மகாநதி சங்கர்
- பரவை முனியம்மா
- உதய் பிரகாஷ்
- டி. பி. கஜேந்திரன்
- ரவிக்குமார்
- துரை பாண்டியன்
இசை
[தொகு]படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் பா. விஜய்
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | ஜெயசூர்யா | டிம்மி, மாதங்கி ஜெகதீஷ் | 3:07 |
2 | கட்டுனா அவளை | கிருஷ்ணராஜ், வடிவேலு | 4:50 |
3 | கட்டுனா அவளை | அர்ஜுன், வடிவேலு | 4:50 |
4 | மத மத | திப்பு, அனுராதா ஸ்ரீராம் | 5:04 |
5 | தீக்குச்சிப் பெண்ணே | கிருஷ்ணராஜ், ஜெயலட்சுமி | 4:30 |
6 | வச்சிக்க சொல்லி | கார்த்திக், பெபி மணி | 4:02 |
.
வெளியீடு
[தொகு]நிதி பிரச்சனைகள் காரணமாக படம் நான்கு மாதங்கள் தாமதமாக வெளியானது.[5]
விமர்சனம்
[தொகு]- பிஸ்ஹட் : மனோஜ் குமார் தயாரித்து இயக்க இக்கதையை ஏன் தேர்வு செய்தார் என்ற வினா எழுகிறது?[6]
- திரைப்படம். காம்: இரட்டைவேடத் திரைப்படங்களில் கதாநாயகர்கள் சந்தித்தபிறகு திரைக்கதை வேகமெடுத்து ரசிக்க வைக்கும். ஆனால் இப்படத்தில் அது தலைகீழாக அமைகிறது.[7]
- இந்தியாக்ளிட்ஸ் : எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படம் முதல் காலம்காலமாக இரட்டைவேடப் படங்களில் உள்ள அதே திரைக்கதை மற்றும் காட்சிகள் இப்படத்திலும் உள்ளன.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஜெயசூர்யா".
- ↑ "ஜெயசூர்யா". Archived from the original on 2010-12-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
- ↑ "ஜெயசூர்யா".
- ↑ "ஜெயசூர்யா தெலுங்கு திரைப்படம்".
- ↑ "வெளியீடு தாமதம்". Archived from the original on 2017-09-07. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
- ↑ "விமர்சனம்". Archived from the original on 2018-06-28. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
- ↑ "விமர்சனம்". Archived from the original on 2007-09-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-26.
- ↑ "விமர்சனம்".