உள்ளடக்கத்துக்குச் செல்

டட்டு பாபன் போகனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டட்டு பாபன் போகனால்
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்5 ஏப்ரல் 1991 (1991-04-05) (அகவை 33)
பிறந்த இடம்மகாராட்டிரம், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுதுடுப்புப் படகோட்டம்

டட்டு பாபன் போகனால் (Dattu Baban Bhokanal) இந்திய துடுப்புப் படகோட்ட மெய்வல்லுநர் ஆவார். இவர் 2016 இரியோ கோடைக்கால ஒலிம்பிக்கில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளார்.[1][2][3] தென்கொரியாவின் சுங்-ஜுவில் நடந்த பிசா ஆசிய, ஓசியானிய ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றதை அடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றார்; சிறுபடகோட்டத்தில் 7 நிமி 07.63 விநாடிகளில் போட்டித் தூரத்தைக் கடந்தார்.[3] இரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்ற ஒரே இந்திய படகோட்ட மெய்வல்லுநராக விளங்குகின்றார்; இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒன்பதாவது படகோட்ட விளையாட்டாளர் ஆகும்.

தனி வாழ்க்கை

[தொகு]

மகாராட்டிரத்தின் டாலேகாவ்ன் என்ற சிற்றூர் ஒன்றில் 1991ஆம் ஆண்டு கல்லுடைக்கும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆஷா பாவனா போகனால் ஆகும். 2012 முதல் இந்திய படைத்துறையில் பணிபுரிகிறார்.

படகோட்ட வாழ்க்கை

[தொகு]

தனது 14ஆம் அகவையிலிருந்தே கடகு வலிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது சிற்றூரிலிருந்த கோதாவரியாற்றில் பயிற்சியைத் தொடங்கினார். 2012இல் இந்தியப் படைத்துறையில் சேர்ந்து புனேயின் கிர்க்கியிலுள்ள பம்பாய் இஞ்சினியர் குரூப் & சென்டரில் பயிற்சியைத் தொடர்ந்தார். பின்னர் 2013இல் புனேயிலிருந்த படைத்துறை படகுவலிப்பு மையத்தில் (ARN) மேலும் சிறப்புப் பயிற்சிப் பெற்றார். இவரது முதல் பயிற்றுநர் குசரத் அலி ஆவார். தற்போது துரோணாச்சார்யா விருது பெற்றவரும் தலைமை தேசிய பயிற்றுநருமான இசுமாயில் பெய்கிடம் பயிற்சி பெற்று வருகின்றார்.

ஒலிம்பிக் பதக்கம் பெற வாய்ப்புள்ள மெய்வல்லுநர்களின் பயிற்சிக்கும் தயார்படுத்தலுக்கும் நிதியுதவி வழங்கும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் (ஒலிம்பிக் பதக்க மேடையே இலக்கு) என்ற அமைப்பு டட்டுவிற்கு ஆதரவளித்து வருகின்றது.

சாதனைகள்

[தொகு]
  • தேசிய படகோட்டப் போட்டிகளில் படைச்சேவைகளின் சார்பாக கலந்து கொண்டு 2014ஆம் ஆண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.
  • சீனாவில் நடந்த 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தை எட்டினார்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Indian Olympic Association Link" (PDF). Archived from the original (PDF) on 2016-08-12.
  2. "It was a hard row to hoe for him to reach Rio" (in en-IN). The Hindu. 2016-05-04. http://www.thehindu.com/sport/other-sports/rio-olympics-2016-qualification-indian-rower-dattu-bhokanal-braves-odds-to-qualify/article8555658.ece. 
  3. 3.0 3.1 "India's #RioOlympics Rower Dattu Baban Bhokanal Comes From A Village Without Water". பார்க்கப்பட்ட நாள் 2016-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டட்டு_பாபன்_போகனால்&oldid=3556407" இலிருந்து மீள்விக்கப்பட்டது