டவுன்-ரவுன் டொராண்டோ
Appearance
டவுன்-டவுன் டொராண்டோ (Downtown Toronto) என்பது டொராண்டோ நகரின் நடுப்பகுதியாகும். வடக்கில் புளூவர் வீதியும் தெற்கில் ஒண்டாரியோ ஏரியும் கிழக்கில் டான் ஆறும் மேற்கில் பாத்தர்சுட் வீதியும் எல்லைகளாக உள்ளன. நிறைய கனேடிய நிறுவனங்களின் தலைமையகங்கள் இப்பகுதியில் உள்ளன. இப்பகுதியில் குடியிருப்போரின் எண்ணிக்கையும் மிகுதி.