உள்ளடக்கத்துக்குச் செல்

டி. கே. அலெக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. கே. அலெக்ஸ்
வாழிடம்பெங்களூர், கர்நாடகம்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துறைமின் பொறியியல் மற்றும் விண்வெளிப் பொறியியல்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்கேரள பல்கலைக்கழகம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
இந்திய அறிவியல் கழகம்
விருதுகள்இந்திய விண்வெளிப் பயணக் கழக விருது (2002)

தெக்கத்தில் கோச்சாண்டி அலெக்சு (Thekkethil Kochandy Alex) ஓர் இந்திய விண்வெளி விஞ்ஞானி ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராகவும், விண்வெளி ஆணையத்தில் உறுப்பினராகவும் இவர் இருந்தார்.[1] முதல் இந்திய செயற்கைக்கோளான ஆர்யபட்டாவில் தொடங்கி இவர் மின்-ஒளியியல் அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அனைத்து இந்திய செயற்கைக்கோள்களிலும் உள்ள உணரி அமைப்புகளுக்கு பொறுப்பு வகித்தார். டி. கே. அலெக்சு தலைமையில் மின்-ஒளியியல் அமைப்பு ஆய்வகம் நிறுவப்பட்டது. 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை இவர் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்தார். இவருக்கு 2011 ஆம் ஆண்டில் முனைவர் விக்ரம் சாராபாய் சிறப்புப் பேராசிரியர் தகுதி வழங்கப்பட்டது.[2]

இவரது சாதனைகளைப் பாராட்டி 2007 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ISRO (30 May 2008). "Press Release". Indian Space Research Organisation. Archived from the original on 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2013-06-06.
  2. Astronautical Society of India, 2002 ASI Award winner Biography
  3. PIB (26 January 2007). "Padma Awards for 2007 announced". Press Information Bureau. Government of India. பார்க்கப்பட்ட நாள் 2013-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._அலெக்ஸ்&oldid=4044211" இலிருந்து மீள்விக்கப்பட்டது