தமிழ் வளர்ச்சி இயக்ககம்
Appearance
தமிழ்நாடு அரசு அரசின் நிர்வாகத்தில் ஆட்சி மொழியாகிய தமிழ் மொழியின் பயன்பாட்டை விரிவாக்கவும், மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள 1957 ஆம் ஆண்டில் ஆட்சி மொழிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இக்குழு ஆற்றிய பணிகளை அடிப்படையாகக் கொண்டு 1968 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சி இயக்ககம் அமைக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த இயக்ககத்தின் மூலம் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கப் பணிகளும், தமிழ் வளர்ச்சி தொடர்பான வேறு சில பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.