உள்ளடக்கத்துக்குச் செல்

தாவரத்தோல் நார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவரத்தோல் நார் (BF)

தாவரத்தோல் நார் (ஆங்கிலம்:Bast fibre (அ) Skin fibre (அ) Surface fibre ) என்பது தடித்த மேற்றோலைக் கொண்ட தாவர நார்களைக் குறிக்கிறது. இவைகள் தாவரத்தின் ஸ்கிளீரன்கைமா என்ற எளிய உயிரணுத்தொகுதியின் இருவகைகளில் ஒன்றாகும். மற்றொன்று தடித்தோலணு எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான தாவரத்தின் தோலில் இவைகள் காணப்படுகின்றன.[1]

தோற்றம்

[தொகு]

ஒரு தாவரத்தில் எண்ணிக்கையில் பெருகும் உயிரணுக்கள் வேறுபாடடைந்து, பலவகையான நிலைத்த உயிரணுத்தொகுதிகளை உண்டாக்குகின்றன. இத்தகைய உயிரணுக்கள் பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழக்கின்றன. இந்நிலைத்த உயிரணுத்தொகுதியில் காணப்படும் உயிரணுக்கள், உருவத்தாலும், இயல்பாலும் வேறுபடுகின்றன. அவ்வேறுபாட்டினைப் பொருத்து, அவை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

  • எளிய உயிரணுத்தொகுதி (அ) எளியத்திசு : ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆனவை இது மூன்று வகைப்படும். அவை பாரன்கைமா(Parenchyma), கோலன்கைமா (Collenchyma), ஸ்கிளீரன்கைமா(Sclerenchyma) என்பனவாகும்.
  • கூட்டு உயிரணுத்தொகுதி (அ) கூட்டுத்திசு : வேறுபட்ட அமைப்பு உடையவை. ஆனால், ஒத்த பணியை மேற்கொள்ளுபவை ஆகும். இவை இரண்டு வகைப்படும். காழ் (xylum), உரியம் (Phloem)

இயல்புகள்

[தொகு]
Melaleuca
காகிதமரம்
Melaleuca
காகிதமரத் தண்டு
Gossypium
மேற்பரப்பு நார்கள்

இவைகள் இறந்த உயிரணுக்கள் ஆகும். இவை நீளமாகவும். குறுகலான உயிரணு அறையுடனும், கூர்மையான முனைகளுடனும் காணப்படுகின்றன. குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நார்கள், பலகோணமுடையவையாகவும், குறுகலான உயிரணு அறையுடனும் காணப்படுகின்றன. உயிரணுச்சுவரின் இரண்டாம் அடுக்கு, 'லிக்னைன்'(Lignin) என்ற வேதிப்பொருள் படிவதன் காரணமாக, உயிரணுச்சுவர் தடித்துக் காணப்படுகிறது. செல்சுவரில் காணப்படுகின்ற குழிகள், எளியவையாகவே உள்ளன. பெரும்பாலும் இவை உரியம் பகுதியில் இருந்து உருவாகின்றன.

இந்த தாவரநார்களின் இயல்புக்கு முக்கிய காரணி யாதெனில், அந்நார்களிலுள்ள கணுக்களே(fibre node) ஆகும். இதனால் தான் இவை வலுதன்மையை தன்னகத்தே தக்க வைத்துக் கொள்கின்றன. இந்நார்கள் தாவரத்தின் தாங்கு உயிரணுத்தொகுப்பு ஆகும். இவை தாவரத்திற்கு உறுதியளித்து, பலமான காற்றில் முறிந்து விடாமல் காக்கிறது. சில தாவர விதைகளின் விதையுறையிலிருந்து தோன்றுகின்ற நார்கள், மேற்பரப்பு நார்கள் (Surface fibres) என அழைக்கப்படுகின்றன. (எ.கா.) பருத்தி. சிறப்பான முறைகளிலிலே, நார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அம்முறைக்கு அழுக வைத்தல் அல்லது நார் உரிக்க ஊறவைத்தல் (retting) என்பது பெயராகும்.

பயன்கள்

[தொகு]

ஆடைகளுக்கானத் துணி உற்பத்தியிலும், கம்பளி உருவாகத்திலும், கயிறு, நூலிழைத் தயாரிக்கவும், தோல் பதப்படுத்துதலிலும் பயனாகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Evert, Ray F; Eichhorn, Susan E. Esau's Plant Anatomy: Meristems, Cells, and Tissues of the Plant Body: Their Structure, Function, and Development. Publisher: Wiley-Liss 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471738435
  2. "Production of Russia Leather" (PDF). The Honourable Cordwainers' Company. 1807. p. 2. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-11-19. {{cite web}}: External link in |publisher= (help)

புற இணைய இணப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவரத்தோல்_நார்&oldid=3585257" இலிருந்து மீள்விக்கப்பட்டது