உள்ளடக்கத்துக்குச் செல்

திலிப் சின்ஹா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலிப் சின்கா
ஐ.நா சபைக்கான இந்தியத் தூதர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மார்ச்சு 2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 நவம்பர் 1954 (1954-11-08) (அகவை 70)
இந்தியா
துணைவர்சிரீமி சின்கா
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிபாட்னா பல்கலைக்கழகம்
தொழில்அரசுப் பணியாளர் (வெளியுறவுத் துறை)

திலிப் சின்ஹா இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிரந்த தூதராவார். இவரது பதவிக்காலம் மார்ச்சு 20, 2012 இல் தொடங்கியது. இவர் 1978 இல் இந்திய வெளியுறவுத் துறைப் பணியில் சேர்ந்தார். இவரது சொந்த ஊர் கான்பூர். இவர் பாட்னா பலகலைக்கழகத்தில் அரசியல் பயின்றவர். [1]. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திற்கான இந்தியத் தூதராகவும் செயல்படுகிறார்.

பதவிகள்

[தொகு]

1978  : இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார்[2]

1980-1983 : இந்தியத் தூதரக அலுவலர், பான்

1983-1986 : இந்தியத் தூதரக அலுவலர், கெயிரோ

1986-1990 : இந்திய ஆணையம், இசுலாமாபாத்

1990-1991 : வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர்

1992-1995 : தலைமை அலுவலர் அமைச்சகத்தின் இயக்குனர்

1995-1999 : இந்திய குறிக்கோள் அலுவலர், ஜெனீவா

1999-2002 : இந்தியத் தூதரக அலுவலர், பிரேசிலியா

2002-2004 : இந்திய ஆணைய துணை அலுவலர், தாக்கா

2005-2007 : வெளியுறவுத் துறை அலுவலர் (பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், ஈரான்)

2007-2010 : எல்லினிக் குடியரசிற்கான இந்தியத் தூதர்

2010-2012 : பன்னாட்டு அமைப்புகள் மற்றும் சூழல் விவகாரங்கள் துறை கூடுதல் அலுவலர்

2012-2012 : பன்னாட்டு அமைப்புகள் மற்றும் சூழல் விவகாரங்கள் துறை சிறப்பு அலுவலர்

2012  : ஐ.நா விற்கான இந்தியத் தூதர்

வாழ்க்கை

[தொகு]

இவர் சிரீமி சின்ஹா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர் இந்தி, ஆங்கிலம், ஜெர்மன் (டாய்ச்சு) ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவதில் வல்லவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.unog.ch/80256EDD006B9C2E/(httpNewsByYear_en)/14FADE256D7EBE95C12579C70038D4AD?OpenDocument
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-03-19.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலிப்_சின்ஹா&oldid=3791688" இலிருந்து மீள்விக்கப்பட்டது