உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லி மான் பூங்கா

ஆள்கூறுகள்: 28°33′24″N 77°11′45″E / 28.5566°N 77.1959°E / 28.5566; 77.1959
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மான் பூங்கா
Deer Park
(ஆதித்ய நாத் ஜா பூங்கா)
பூங்காவில் மான்கள் கூட்டம்
Map
வகைஇயற்கைப் பகுதி
அமைவிடம்அவுசு காசு, தெற்கு தில்லி, இந்தியா
அண்மைய நகரம்அவுசு காசு கிராமம்
இயக்குபவர்தில்லி மேம்பாட்டு ஆணையம்
திறந்துள்ள நேரம்5:00 மு.ப-8:00பி.ப (கோடை)
5:30 மு.ப-7:00 பி.ப. (குளிர்காலம்)
நிலைஇயங்குகிறது.

மான் பூங்கா (Deer Park) இந்தியாவின் தெற்கு தில்லியில் அமைந்துள்ளது. பிரபல சமூக சேவகர் ஆதித்யா நாத் ஜா நினைவாக இப்பூங்கா ஏ.என். ஜா. மான் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. நடைபயிற்சி, மெல்லோட்டம் மற்றும் வார இறுதி பயணங்களுக்கு பூங்கா பிரபலமானது. வாத்து பூங்கா, சுற்றுலாப் புள்ளி, முயல் அடைப்பிடங்கள் போன்ற பல துணைப்பிரிவுகள் மான் பூங்காவில் உள்ளன. இந்த பூங்காவில் முகலாய காலத்தின் வரலாற்று கல்லறைகள் உள்ளன. சஃப்தர்சங் சுற்றுப்புற எல்லை மற்றும் பசுமை பூங்கா, [1] அவுசு காசுஸ் கிராமம் போன்ற இடங்களில் தொடங்கி பூங்காவை அணுகலாம். மான் பூங்கா மாவட்டப் பூங்காவுடன் இணைக்கப்பட்டுள்ளதால் தில்லி வலைப்பந்து சங்கத்தின் பக்கத்திற்கு அருகிலுள்ள ஆர்.கே. புரத்திலிருந்தும் இதை அணுகலாம்.

அமைவிடம்

[தொகு]

மான் பூங்கா மற்றும் அவுசு காசு ஏரி இணைக்கப்பட்ட மாவட்ட பூங்கா, தில்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் சப்தர்சங் மேம்பாட்டுப் பகுதியிலிருந்து அணுகக்கூடிய அருகிலுள்ள ரோசா தோட்டம் ஆகியவை புது தில்லியின் மிகப்பெரிய பசுமையான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் பகுதியாகும், மேலும் இவை கூட்டாக தில்லியின் நுரையீரல்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் இவை மாசுபட்ட சலசலப்பான பெருநகர தில்லியில் புதிய காற்றை வழங்குகின்றன. ஒரு மென்கொதிப்பு நீர்நிலை பூங்காவை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. இப்பூங்கா இயற்கை ஆர்வலர்களின் இரசணைக்கு உகந்த சரியான இடமாகும். அவுசு காசு கிராமம், சப்தர்சங் சுற்றுப்புற எல்லை மற்றும் தில்லி வலைபந்து சங்கம் பக்கத்திற்கு அருகிலுள்ள ஆர்.கே. புரத்திலிருந்தும் இந்த பூங்காவிற்கு எளிதாக வந்து சேரலாம்.

பல்லுயிர் பூங்கா

[தொகு]

பூங்கா நான்கு வெவ்வேறு பகுதிகளாக அதாவது ரோசா தோட்டம், மான் பூங்கா, நீரூற்று & மாவட்ட பூங்கா, பழைய நினைவுச்சின்னங்கள் மற்றும் அவுசு காசு கலை சந்தை என்று பிரிக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்குள் நுழைந்தவுடன் அனைத்துப் பிரிவுகளையும் கண்டு மகிழலாம். தில்லியின் மையப்பகுதியில் இருக்கிறோம் என்பதை அவர்களால் நம்ப முடியாது. மேலே உள்ளவற்றைத் தவிர பூங்காவில் ஒரு அழகான "பார்க் பலுச்சி" என்ற உணவகம் உள்ளது. ஒரு நாள் சுற்றுலா பயணத்தை அனுபவிக்க தில்லி மான் பூங்கா சரியான இடமாகும்.

பூங்காவிற்குள் அதிக எண்ணிக்கையிலான மான்கள் இருப்பதால் இது மான் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. பூங்காவில் மான்கள் சுற்றித் திரிவதற்கும், ஒன்றுடன் ஒன்று விளையாடுவதற்கும், எப்போதாவது நட்பு ரீதியாக சண்டையிடுவதற்கும், பார்வையாளர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு கற்றல் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதற்கும் ஒரு பெரிய உறைவிடமாக உள்ளது. மான் பூங்காவிற்கும் அதைச் சுற்றியுள்ள பசுமைப் பூங்காவிற்கும் நுழைவு இலவசம் மற்றும் இது அக்டோபர் வரை கோடையில் தினமும் காலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும், குளிர்காலத்தில் காலை 5:30 மணி முதல் மாலை 7:00 மணி வரையிலும் திறந்திருக்கும். [2]

படக்காட்சி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Green Park Delhi". Archived from the original on 3 March 2011.
  2. "Deer Park, Delhi". indfy.com. பார்க்கப்பட்ட நாள் 18 October 2014.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_மான்_பூங்கா&oldid=3320083" இலிருந்து மீள்விக்கப்பட்டது