தி ஜங்கிள் புக்
தி ஜங்கிள் புக் (The Jungle Book 1894) என்பது ஆங்கில எழுத்தாளர் இரட்யார்ட் கிப்ளிங்கின் கதைத் தொகுப்பாகும். இதில், ஓநாய்களால் வளர்க்கப்படும் மௌக்லி எனும் சிறுவன் முதன்மைக் கதாப்பத்திரமாக இருந்தாலும், சேர்கான் எனும் புலி, பலூ எனும் கரடி ஆகிய விலங்குகளே பெரும்பான்மையாக முதன்மைக் கதாப்பாத்திரங்களாக உள்ளன. இந்தியக் காட்டில் நடைபெறும் வகையில் இந்தக் கதை அமைக்கப்பட்டிருக்கும். மத்தியப் பிரதேசத்தில் உள்ள சியோனி எனும் இடம் பலமுறை குறிப்பிடப்படுகிறது.
இந்தக் கதையின் நாயகரான மௌக்லியின் வாழ்க்கை இதன் எழுத்தாளரான கிப்ளிங்கின் இளம் வாழ்க்கையினைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. ரிக்கி-டிக்கி-தவி மற்றும் தி ஒயிட் சீல் உள்ளிட்ட கதாநாயகர்கள் தங்கள் எதிரிகள் மீதும், மோக்லியின் மீதும் பெற்ற வெற்றி இதன் கருப்பொருளாக உள்ளது. சட்டம் மற்றும் விடுதலை ஆகியனவும் இதன் முக்கியக் கருப்பொருளாக இருந்தபோதிலும் விலங்கின நடத்தையியல், டார்வினிய கொள்கை ஆகியன குறைவாகவே இடம்பெறுகிறது. அதிகாரத்திற்கு மதிப்பளித்தல், கீழ்ப்படிதல் மற்றும் சமூகத்தில் மனிதர்களுக்கான அங்கீகாரம் ஆகியனவற்றை காட்டில் இருக்கும் சட்டங்கள் மூலம் வாசிப்பாளர்களுக்கு கற்பிக்கின்றன. மௌக்லி காட்டில் இருந்து, நகரத்திற்கு இடம்பெயர்வதன் மூலம் இருவேறு உலகங்களுக்கு இடம்பெயர்தல் குறித்தான உரிமையினையும் கையாள்கிறது.
இந்த நூலினை அடிப்படையாக வைத்து பல திரைப்படங்கள் மற்றும் பல ஊடகங்கள் வெளியானதால் தற்போதும் இந்த நூல் பரவலாக அறியப்படுகிறது. இவரது கதைசொல்லும் விதம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளதாக சுவாதி சிங் எனும் விமர்சகர் தெரிவித்துள்ளார்.[1] இந்த நூல் சாரணர் இயக்கத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளது, அதன் நிறுவனர் ராபர்ட் பேடன் பவல் கிப்லிங்கின் நண்பராக இருந்தார். [2]
சூழல்
[தொகு]இதன் கதைகள் முதன்முதலில் 1893-94 இல் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. சில வெளியீடுகளில் ஆசிரியரின் தந்தையான ஜான் லாக்வுட் கிப்ளிங்கின் விளக்கப்படங்கள் இடம்பெற்றன. பிறப்பு முதல், ஆறு ஆண்டுகள் வரை இரட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் இருந்தார். பத்துவருடங்கள் இங்கிலாந்தில் இருந்த பின்னர் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று சுமார் ஆறரை ஆண்டுகள் பணியாற்றினார். இந்தக் கதைகள் கிப்ளிங் அமெரிக்காவில் உள்ள டம்மர்சுடனில், வெர்மான்ட்டில் அவர் கட்டிய நௌலாகாவில் வாழ்ந்தபோது எழுதப்பட்டது. [3] 1899 ஆம் ஆண்டு 6 வயதில் நிமோனியா நோயால் இறந்த தனது மகள் ஜோசபினுக்காக கிப்ளிங் கதைகளின் தொகுப்பை எழுதினார் என்பதற்கான சான்றுகள் உள்ளன; [4] இங்கிலாந்தின் கேம்பிரிட்சயரில் உள்ள தேசிய அறக்கட்டளையின் விம்போல் மண்டபத்தில் தனது இளம் மகளுக்காக கையால் எழுதப்பட்ட குறிப்புடன் இருந்த நூலின் முதல் பதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
விளக்கம்
[தொகு]இந்த நூல் 1895 இல் வெளிவந்த தி செகண்ட் ஜங்கிள் மற்றும் மோக்லி பற்றிய ஐந்து கதைகள் உட்பட மேலும் எட்டு கதைகளை உள்ளடக்கியது, கட்டுக்கதைகள் மற்றும் மாந்தவுருவக முறையில் விலங்குகளைப் பயன்படுத்தி ஒழுக்கம் தொடர்பான பாடங்களை இந்த நூல் கற்பிக்கின்றது. உதாரணமாக, "காட்டின் சட்டம்" குறித்தான வசனங்கள், தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் பாதுகாப்பிற்கான விதிகளை வகுத்துள்ளதைக் குறிப்பிடுகின்றன. கிப்ளிங், "தனக்குத் தெரிந்த அல்லது இந்தியக் காட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட அல்லது கனவு கண்ட" அனைத்தையும் இந்த நூலில் இடம்பெறச் செய்தார். [5] மற்ற வாசகர்கள் இந்த படைப்பை அக்கால அரசியல் மற்றும் சமூகத்தின் உருவகங்களாக விளக்கியுள்ளனர். [6]
தோற்றம்
[தொகு]தி ஜங்கிள் புக்கில் உள்ள கதைகள் பஞ்சதந்திரம் மற்றும் ஜாதக கதைகள் போன்ற பண்டைய இந்திய புனைகதை நூல்களால் பகுதியளவு ஈர்க்கப்பட்டன. [7] எடுத்துக்காட்டாக, கிப்லிங்கின் " ரிக்கி-டிக்கி-தவி " கதையின் கீரிப்பிள்ளை மற்றும் பாம்பு பதிப்பு பஞ்சதந்திரத்தின் ஐந்தாவது நூலில் காணப்படுகிறது. [8]
சுமார் 1895இல் கிப்ளிங் தனது கடிதத்தில் இந்த நூலின் மையக் கரு மற்றும் கதைகள் பிற படைப்புகளின் தழுவல் தான் என்பதனை ஒப்புக்கொண்டார் எனவும், ஆனால் யாருடைய கதைகளைத் திருடினேன் என்பது நினைவில்லை எனவும் அவர் எழுதியுள்ளதாக தி கார்டியனில் அலிசன் பிளட் குறிப்பிட்டுள்ளார்.[9]
கதை மாந்தர்கள்
[தொகு]பல கதாபாத்திரங்கள் (குறியிடப்பட்ட *) அவற்றின் இனங்களின் இந்துசுத்தானி பெயர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ளது: எடுத்துக்காட்டாக, பாலு என்பது இந்துஸ்தானி भालू/بھالو Bhālū, "கரடி" என்பதன் ஒலிபெயர்ப்பாகும். "தி ஒயிட் சீல்" (^ குறியிடப்பட்டது) பிரிபிலோஃப் தீவுகளின் ரஷ்ய மொழியின் ஒலிபெயர்ப்பாகும்.
- அகேலா * - ஓநாய்
- பகீரா - கருஞ்சிறுத்தை
- பலூ* - கரடி
- பந்தர்-லாக் - குரங்குகளின் பழங்குடி
- ரிக்கி-டிக்கி-டவி = கீரிப்பிள்ளை
- மௌக்லி - சிறுவன்
- சேர்கான் - புலி
சான்றுகள்
[தொகு]- ↑ Singh, Swati (2016). Secret History of the Jungle Book. The Real Press. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9935239-2-2.
- ↑ "History of Cub Scouting". Boy Scouts of America. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.
A strong influence from Kipling's Jungle Book remains today. The terms "Law of the Pack," "Akela," "Wolf Cub," "grand howl," "den," and "pack" all come from the Jungle Book.
- ↑ Rao, K. Bhaskara (1967). Rudyard Kipling's India. Norman, Oklahoma: University of Oklahoma Press.
- ↑ "Kipling first edition with author's poignant note found". 8 April 2010. http://news.bbc.co.uk/1/hi/entertainment/arts_and_culture/8609766.stm.
- ↑ Gilmour, David (2003). The Long Recessional: the Imperial Life of Rudyard Kipling. Pimlico. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-6518-8.
- ↑ Hjejle, Benedicte (1983). "Kipling, Britisk Indien og Mowglihistorieine". Odense Universitetsforlag.
- ↑ Kaori Nagai; Caroline Rooney; Donna Landry; Monica Mattfeld; Charlotte Sleigh; Karen Jones (2015). Cosmopolitan Animals. Palgrave Macmillan. p. 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-137-37628-2.
- ↑ Jan Montefiore (2013). In Time's Eye: Essays on Rudyard Kipling. Manchester University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5261-1129-6.
- ↑ Flood. "Rudyard Kipling 'admitted to plagiarism in Jungle Book'". https://www.theguardian.com/books/2013/may/29/rudyard-kipling-admitted-plagiarism-jungle-book.
புற இணைப்புகள்
[தொகு]- த ஜங்கிள் புக் கலெக்சன்: ஒரு வலைத்தளம் தி ஜங்கில் புக்கின் புத்தகம் மற்றும் திரை வடிவத்தை பல்வேறு வகையான வாணிகச் சரக்கு விற்பனை தொடர்பானவற்றை எடுத்துக்காட்டிகொண்டிருப்பது.
- The Jungle Book at குட்டன்பேர்க் திட்டம்
- பூம் கட் டான்ஸ் பரணிடப்பட்டது 2008-09-07 at the வந்தவழி இயந்திரம்: எ வெப்சைட் டிஸ்கிரைபிங் தி டான்ஸ் அடாப்சன் ஆப் தி ஜங்கிள் புக் பை பூம் கட் டான்ஸ் கம்பெனி.