தோமஸ் முன்ரோ
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சிறு நாயகம் (Major-General) தோமஸ் முன்ரோ பிரபு | |
---|---|
சென்னை மாகாண ஆளுநர் | |
பதவியில் 16 செப்டம்பர் 16, 1814 – 10 சூலை 1827 | |
தலைமை ஆளுநர் | மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் ஆம்ஹர்ஸ்ட் பிரபு |
முன்னையவர் | சார்ஜ் பார்லோ பிரபு |
பின்னவர் | ஸ்டீபன் ரம்போல்டு லஸ்சிங்டன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 மே 1761 கிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து |
இறப்பு | 6 சூலை 1827 பட்டிகொண்டா, சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியா (தற்போதைய பட்டிகொண்டா, கர்னூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்)[1] | (அகவை 65)
தேசியம் | பிரித்தானியர் |
முன்னாள் கல்லூரி | கிளாஸ்கோ பல்கலைக்கழகம் |
விருதுகள் | KCB |
Military service | |
பற்றிணைப்பு | ஐக்கிய இராச்சியம் |
கிளை/சேவை | Madras Army |
சேவை ஆண்டுகள் | 1779-1827 |
தரம் | சிறு நாயகம் (Major-general) |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் மூன்றாவது ஆங்கில மைசூர் போர் மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர் |
பிறப்பு
[தொகு]கிளாஸ்கோ நகரில் 27.05.1761 அன்று மன்றோ பிறந்தார். நான்கு சகோதரர்களையும் இரண்டு சகோதரிகளையும் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. தந்தை அலெக்ஸாண்டர் மன்றோ. தாய் மார்கரெட் ஸ்டார்க்.
வாழ்க்கை குறிப்பு
[தொகு]- 1789 அவர் சென்னையில் உள்ள ஒரு காலாட்படையில் பயிற்சி அலுவலராக நியமிக்கப்பட்டார்
- 1780-83 அவர் ஹைதர் அலிக்கு எதிரான போரில் பங்கேற்றார்
- 1790-92 திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் பங்கேற்றார், பின்னர் பாரமால் பகுதியின் ராணுவ அதிகாரியாக ஏழு வருடம் பணியாற்றி வருவாய் ஆய்வு மற்றும் மதிப்பீடு கொள்கைகளை கற்றார்
- 1800-1807 ஹைதராபாத் நிசாம் பகுதிக்களுக்கு பொறுப்பாளராக இருந்தார், பின்பு இங்கிலாந்து சென்றார்
- 1814 இந்திய திரும்பிய அவர் நீதிதுறை மற்றும் காவல்துறை சீரமைப்பில் ஈடுபட்டார்
- 1820ல் சென்னை, கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரால் நிறுவப்பட்ட வருவாய் மதிப்பீடு மற்றும் நிர்வாகத்தின் அமைப்புகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன
சிறப்பு
[தொகு]இவருக்கு சென்னையின் அண்ணா சாலையில் தீவுத் திடல் அருகே சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. சேணம் இல்லாத குதிரை மீது கம்பீரமாக மன்றோ அமர்ந்து இருக்கின்ற அந்தச் சிலையைச் செய்தவர் பிரான்சிஸ் சாண்டரி. அவர் ரயாட்வாரி நிலவரி அமைப்பின் தந்தை என கருதப்படுகிறார்.
முக்கிய நிகழ்வுகள்
[தொகு]1800ல் பெல்லாரி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் ஆக பணி புரியும் போது மதராஸ் அரசாங்கம் ராகவேந்திரர் மடத்திலிருந்தும் மற்றும் மந்த்ராலயத்திலிருந்தும் வரும் வருவாயை அரசுக்கு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. அப்போது அது குறித்த விசாரணைக்காக அங்கு சென்ற போது ராகவேந்திரர் அவரிடம் பேசியதாகவும் அவருக்கு தீட்சை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் தனது அறிக்கையை மடத்திற்கு சாதகமாக வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.[2]. இந்த ஆணை இன்றும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் மந்த்ராலயத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நூல் மற்றும் வெளியிணைப்பு மேற்கோள்கள்
[தொகு]- கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன்
- எனது இந்தியா ( காட்டன் காட்டிய அக்கறை! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்.
- கனவு நனவான கதை[3]
மேற்கோள்கள்
[தொகு]- V. Sriram (July 26, 2010). "Unsung hero of Madras". The Hindu இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 7, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111007183950/http://www.thehindu.com/arts/magazine/article534676.ece.
- ↑ Bradshaw, John (1893). Sir Thomas Munro and the British settlement of the Madras Presidency. London: Oxford University Press. pp. 210–212.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-06-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-18.
- ↑ http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20906:2012-08-22-17-40-52&catid=1505:2012&Itemid=749