நங்கூரச் செடி
நங்கூரச் செடி (Colletia cruciata) கோல்லிட்டியா குருசியேடா எனவும் அறியப்படும் இது ஐந்து வகையான முள்ளந்தண்டு புதர்களைக் கொண்ட ராம்னேசியீ குடும்பத்தில் பூக்கும் தாவரங்களின் ஒரு இனமாகும்.[1][2] இந்த இனத்தின் அனைத்து இனங்களும் தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவை. [3]
செடியின் அமைவு
[தொகு]இச்செடி 3 முதல் 4 அடி உயரம் வளரக் கூடியது. இதன் விநோதமான தோற்றத்தால் இதை வீடுகளில் வளர்க்கிறார்கள். இதனுடைய கிளைகள் பட்டையாகவும் இதிலிருந்து வரும் முற்களும் பட்டையாகவும், முக்கோண வடிவத்திலும் இருக்கும். இது உண்மையில் மாற்றம் அடைந்த தண்டுகளே. இவற்றில் வரும் முற்கள் ஜோடி ஜோடிகளாக இருக்கும். மேலும் சரியாக கோணத்தில் ஒன்றோடு ஒன்று அருகில் உள்ளது. முற்கள் மிகக் கூறாக இருக்கும். முள்ளின் அடிப்பகுதியில் மிகச்சிறிய இலைகள் உள்ளது. இது உதிரக் கூடியது. இந்த முற்களின் அடிப்பகுதியில் சிவப்புபூக்கள் உள்ளன. இவை குழாய் வடிவிலும், வெளுத்த மஞ்சள் நிறத்திலும் இருக்கிறது.
இச்செடியை முதல் முதலில் பிரஞ்சு தாவரவியல் அறிஞர் பிலிபர்ட் கொல்ட் (1643-1718) என்பவர் விளக்கினார். இதனால் இச்செடிக்கு இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இச்செடி தெற்கு பிரேசில் மற்றும் உருகுவை போன்ற நாடுகளில் வளர்கிறது.
மேற்கோள்
[தொகு]- ↑ "The Plant List entry for Colletia". The Plant List, v.1.1. Royal Botanic Gardens, Kew and the Missouri Botanical Garden. September 2013. பார்க்கப்பட்ட நாள் 14 December 2020.
- ↑ Govaerts R. "Colletia Comm. ex Juss.". Plants of the World Online. Board of Trustees of the Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 15 December 2020.
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
- Pink, A. (2004). Gardening for the Million. Project Gutenberg Literary Archive Foundation.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் நங்கூரச் செடி தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Strange Wonderful Things: Colletia paradoxa