உள்ளடக்கத்துக்குச் செல்

நிஹால் அலி அல்-அவ்லாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016இல் நிஹால் அலி அல்-அவ்லாகி

நிஹால் அலி அல்-அவ்லாகி (Nihal Naj Ali Al-Awlaqi) இவர் ஓர் யேமன் வழக்கறிஞர் ஆவார். [1] இவர் யேமனின் சட்ட விவகார அமைச்சராகவும் இருக்கிறார். [2] [3] 2016 ஆம் ஆண்டில் வர் சர்வதேச வீரதீரப் பெண் விருதைப் பெற்றார் . [4] [5]

வாழ்க்கை

[தொகு]

அல்-அவ்லாகி யேமனில் உள்ள ஷப்வா கவர்னரேட்டைச் சேர்ந்தவர். மொராக்கோவில் உள்ள முகமது வி பல்கலைக்கழகத்தில் சட்ட அறிவியலில் இளங்கலையும், சட்டத்தில் முதுகலையும் பெற்றார். [6] இவர் அரபு, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழி பேசுகிறார். [7]

அல்-அவ்லாகி, ஏடன் பல்கலைக்கழகத்தில் உதவி சட்டப் பேராசிரியரானார். அங்கு இவர் பெண்களின் நிலை குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சியில் பணியாற்றினார். 2013-14 ஆம் ஆண்டில் இவர் தேசிய உரையாடல் மாநாட்டின் மாநில கட்டட செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார். [6]2014 மார்ச்சில், இவர் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [8] பின்னர் அந்த அமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [9] ஜெனீவாவில் அரசாங்க பேச்சுவார்த்தை குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

2016 சனவரியில் இவர் சட்ட விவகார அமைச்சராக அறிவிக்கப்பட்டார். [10] 2016 செப்டம்பர் 9, அன்று, யேமன் அதிபர் அப்து ரபோ மன்சூர் ஹாடி, அப்போது 39 வயதாக இருந்த அல்-அவ்லாகியை சட்ட விவகார அமைச்சராக அதிகாரப்பூர்வமாக நியமித்தார். [11] [12] [13]

குறிப்புகள்

[தொகு]
  1. Historical Dictionary of Yemen. Rowman & Littlefield Publishers.
  2. "Biographies of 2016 Award Winners".
  3. "U.S. State Department honors 14 leaders from around the world". 29 March 2016.
  4. News, VOA. "2016 Women of Courage Award Winners". {{cite web}}: |last= has generic name (help)
  5. "الوزيرة اليمنية نهال العولقي بين أشجع نساء العالم (صور)". பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.
  6. 6.0 6.1 الرئيسية, الحدث برس -. "من هي "نهال ناجي علي العولقي" وزير الشؤون القانونية". Archived from the original on 31 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "جائزة المرأة الشجاعة من الخارجية الأميركية لوزيرة الشؤون القانونية - يمن 24".
  8. Amal Al Basha, Gender Equality Discourse in Yemini Constitutions பரணிடப்பட்டது 2017-01-16 at the வந்தவழி இயந்திரம், Danish Institute for Human Rights, 2014, p. 6
  9. Helen Lacker, Yemen’s ‘Peaceful’ Transition from Autocracy: Could it have succeeded?, International Institute for Democracy and Electoral Assistance, p.56
  10. Charles Schmitz. Historical Dictionary of Yemen. Rowman & Littlefield Publishers.
  11. Correspondent, Saeed Al Batati, (10 January 2016). "UN envoy in Yemen to nudge Al Houthis towards peace talks". பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  12. Agency, Qatar News. "Yemeni President Reshuffles Cabinet in Four Ministries". பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Issuance of decisions Republic (translated)". President Abed Rabbo Mansour Had. பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nihal Naj Ali Al-Awlaqi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஹால்_அலி_அல்-அவ்லாகி&oldid=3818835" இலிருந்து மீள்விக்கப்பட்டது