நீத்தா அம்பானி
நீத்தா அம்பானி (Nita ambani 1 நவம்பர் 1964) என்பவர் ரிலையன்சு பவுண்டேசன் என்னும் அறக்கட்டளையின் தலைவர் ஆவார். இவர் ரிலையன்சு இண்டஸ்ட்ரீஸ் என்ற குழுமத்தின் தலைவர் முகேசு அம்பானியின் மனைவி ஆவார்.[1] இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகளுள் ஒருவர் ஆவார். இவரது சொத்தின் மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மும்பை இந்தியன்ஸ் எனும் துடுப்பாட்ட அணியின் உரிமையாளர் ஆவார். இவர் கலைப் பொருள் சேகரிப்பாளராகவும் அறியப்படுகிறார். மும்பையில் அமைந்துள்ள தீருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் ஆவார்.
பிறப்பும் படிப்பும்
[தொகு]நீத்தா அம்பானி மும்பையில் ஓர் நடுத்தர குஜராத்திய குடும்பத்தில் பிறந்தவர். ரவீந்திர தலால், பூர்ணிமா தலால் இணையருக்குப் பிறந்தார். வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பரத நாட்டியமும் கற்றுக் கொண்டார்.
தொழில்
[தொகு]ஜாம்நகர்
[தொகு]1997 ல் ஜாம்நகரில் ரிலையன்சு ஊழியர்களுக்காக தங்குமிடம் கட்டிக்கொடுக்கும் தொழிலில் ஈடுபடலானார். இத்திட்டமானது மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒன்றாகும். மேலும் இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டது. 17,000 அதிகமான குடியிருப்புகளுடன் கட்டப்பட்டது. இன்று ஜாம்நகர் குடியிருப்பு 1,00,000 மாங்காய் மரங்களுடன் காணப்படுகிறது.
ரிலையன்ஸ் உதவித் திட்டம்
[தொகு]2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ரிலையன்ஸ் பவுண்டேசன் நீத்தா அம்பானியால் நடத்தப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இது இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பவுண்டேசன்களுள் இதுவும் ஒன்றாகும். கல்வி, விளையாட்டு, உடல்நலம், அவசரக்கால உதவி, பெண்கள் முன்னேற்றம் ஆகிய துறைகளில் இது செயல்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ்
[தொகு]இந்தியன் ப்ரீமியர் லீக் துடுப்பாட்ட அணிகளுள் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் இவர் ஆவார். இவ்வணி சேம்பியன் விருதினை 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பெற்றது. மேலும் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் 2013,2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றது. அனைவருக்கும் கல்வி (Education for All) எனும் திட்டத்தினையும் மும்பை இந்தியன்ஸ் அணி முன்னெடுத்துச் செய்கிறது. வாய்ப்புக்கிடைக்காத 70,000 குழந்தைகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நவீன வழிக் கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேசப் பள்ளி
[தொகு]தீருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியினை உருவாக்கி நிருவகித்து வருகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது. என்.டி.டி.வி, இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற இதழ்கள் இப்பள்ளியை இந்தியாவின் தரவரிசையில் முதலிடம் பெறும் பள்ளி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு
[தொகு]சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் உறுப்பினராகவும் நீத்தா அம்பானி உள்ளார். 3 ஜூன் 2016 அன்று உறுப்பினராக நியமிக்கப்பட்ட எண்வரில் நீத்தா அம்பானியும் ஒருவர். சர்வதேச ஒலிம்பிக் அமைப்பி 129 வது கூட்டத்தில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 4 ஆகஸ்ட் 2016 உறுப்பினராக இவர் அறிவிக்கப்பட்டார். இந்தியாவிலிருந்து இப்பதவியைப் பெற்ற முதல் பெண்மணி இவராவார்.
பணிகளும் பதவிகளும்
[தொகு]- 2014 ஆம் ஆண்டில் நீத்தா அம்பானி ரிலையன்சு இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இவர் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக ஆன முதல் இந்திய பெண்மணி ஆவார்.[2]
- மும்பை இந்தியர்கள் என்னும் இந்தியன் பிரீமியர் லீக்கின் துடுப்பாட்ட மும்பை அமைப்பை நடத்தினார்.
- எல்லாருக்கும் கல்வி என்னும் அமைப்பைத் தொடங்கி 70000 ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி பற்றிய விழிப்புணர்வைப் பரப்பி உதவிகளும் செய்தார்.
மேற்கோள்
[தொகு]- ↑ http://economictimes.indiatimes.com/magazines/panache/nita-ambani-celebrates-her-50th-birthday-with-family-in-kashi/articleshow/45017154.cms
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-10-14.