உள்ளடக்கத்துக்குச் செல்

நெல்வயல் நெட்டைக்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெல்வயல் நெட்டைக்காலி
இந்தியா, மேற்கு வங்காளம், கொல்கத்தாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஆ. ரபுலசு
இருசொற் பெயரீடு
ஆந்தசு ரபுலசு
(வையோலாட், 1818)
வேறு பெயர்கள்

கோரிடாலா ரபுலா

நெல்வயல் நெட்டைக்காலி (Paddy field pipit அல்லது Oriental pipit)[2] (ஆந்தசு ரபுலசு) என்பது ஒரு சிறிய பாசரிபாரம்சு பறவை ஆகும். இந்தப் பறவைக்கு காட்டுப்புல் குருவி, மரத்தவிட்டுக் குருவி, மரப்பிப்பிட்டு, வயல் சிட்டு என்ற வேறு பெயர்களும் உண்டு. இது வாலாட்டிக் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இவை ஒரு பகுதியிலேயே வாழக்கூடியன (வலசை போகாதவை). இவை திறந்த வெளிகளிலும், புல்வெளிகளிலும் வாழக்கூடியன, தெற்கு ஆசியா, கிழக்குப் பிலிப்பீன்சு போன்ற பகுதிகளில் உள்ளன. பிற மற்ற இனங்கள் ஆசியாவின் பிற பகுதியில் காணப்படுகின்றன. ஆசிய பிராந்தியத்தில் குளிர்காலத்தில் இவ்வகைப் பறவைகளை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும். இனங்களின் வகைப்பாட்டில் சிக்கலான மற்றும் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

விளக்கம்

[தொகு]
குஞ்சுகளுக்கு உணவு எடுகத்தல் (கல்கத்தா, மேற்கு வங்கம்)

இந்த நெட்டைக்காலிகள் 15 செ.மீ உள்ளவை. இவை முதன்மையாக சாம்பல் பழுப்பு நிறத்தோடும், மார்புப் பகுதி வெளிறி இருக்கும். இதன் வால் நீண்டும், கால்கள் நீண்டும் இருக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும் நீலகிரி நெட்டைக்காலிகள் தோற்றத்தில் இவற்றோடு ஒத்துக் காணப்படும்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Anthus rufulus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Paddyfield pipit on Avibase
  3. Rasmussen PC; JC Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Volume 2. Smithsonian Institution & Lynx Edicions. p. 318. {{cite book}}: Unknown parameter |lastauthoramp= ignored (help)
  4. Baker, ECS (1926). Fauna of British India. Birds. Volume 3 (2 ed.). Taylor and Francis, London. pp. 290–291.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anthus rufulus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்வயல்_நெட்டைக்காலி&oldid=3769769" இலிருந்து மீள்விக்கப்பட்டது