உள்ளடக்கத்துக்குச் செல்

நோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Knol
வலைத்தள வகைகுறிப்புதவி
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம், கொரியம், அரபு, இடாய்ச்சு, டச்சு, இத்தாலியம், பிரெஞ்சு, எசுப்பானியம், யப்பானியம், உருசியம், எபிரேயம், போர்த்துக்கேயம், இந்தி
உரிமையாளர்கூகுள்
உருவாக்கியவர்கூகுள்
மகுட வாசகம்Knol, a unit of knowledge
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்ஆம்
வெளியீடுயூலை 23, 2008
தற்போதைய நிலைநிறுத்தப்பட்டது
உரலிknol.google.com


நோல் (knol), என்பது பயனர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை சேமிக்கும் பொருட்டு கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. பன்மொழிகளில், பல தலைப்புகளில் பயனர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை ஒன்றிணைக்கும் திட்டமான இது ஏறத்தாழ விக்கிப்பீடியா போன்றதே எனினும் இது எந்தக் கொள்கைகளையும் கொண்டிருக்கவில்லை. கட்டுரைகள் குறித்த கருத்துகளை பயனர்கள் இடுவதும், உரையாசிரியர்கள் நடுநிலை இன்றி எழுதியதும் இதற்கும் விக்கிப்பீடியாவிற்கும் உள்ள சில வேறுபாடுகள். சில நூறாயிரம் பேரால் பயன்படுத்தப்பட்டு, ஏறத்தாழ நூறாயிரம் கட்டுரைகளைக் கொண்டிருந்தது. சில மருத்துவம் குறித்த கட்டுரைகளையும் கொண்டிருந்தது. 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இச்சேவை நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக வேறொரு தளத்திற்கு மாற்றவும் பரிந்துரைத்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோல்&oldid=1370143" இலிருந்து மீள்விக்கப்பட்டது