உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பாய்வு மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பாய்வு மெய்யியல் என்பது மெய்யியலின் ஒரு வகை ஆகும். இது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆங்கில மொழி பேசும் நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய மெய்யியலின் ஒரு பகுதியாகும். ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஸ்காண்டினேவியா ஆகிய பகுதிகளில் பெரும்பாலான பல்கலைக்கழக தத்துவ துறைகள் "பகுப்பாய்வு" துறைகள் என்றே தங்களை அடையாளம் காட்டுகின்றன.[1]

"பகுப்பாய்வு மெய்யியல்" என்ற வார்த்தை பல விசயங்களில் ஒன்றைக் குறிக்கலாம்:

  • ஒரு மெய்யியல் நடைமுறை[2][3]
  • ஒரு வரலாற்று வளர்ச்சி

வரலாறு

[தொகு]

எஃப். எச். பிராட்லி (1846-1924) மற்றும் தாமஸ் ஹில் கிரீன் (1836-1882) ஆகிய மெய்யியலாளர்களால் கற்பிக்கப்பட்ட பிரித்தானிய கருத்துவாதம் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கில மெய்யியலில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த அறிவார்ந்த அடிப்படையில் பகுப்பாய்வு மெய்யியலைத் தொடங்கிய ஜி. ஈ மூர் மற்றும் பெர்ட்ரண்டு ரசல் ஆகியோர் ஆரம்ப பகுப்பாய்வு மெய்யியலிலை தெளிவாகப்பேச ஆரம்பித்தனர்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Without exception, the best philosophy departments in the United States are dominated by analytic philosophy, and among the leading philosophers in the United States, all but a tiny handful would be classified as analytic philosophers. Practitioners of types of philosophizing that are not in the analytic tradition—- such as phenomenology, classical pragmatism, existentialism, or Marxism—- feel it necessary to define their position in relation to analytic philosophy." John Searle (2003), Contemporary Philosophy in the United States in N. Bunnin and E. P. Tsui-James (eds.), The Blackwell Companion to Philosophy, 2nd ed., (Blackwell, 2003), p. 1.
  2. See, e.g., Avrum Stroll, Twentieth-Century Analytic Philosophy (Columbia University Press, 2000), p. 5: "[I]t is difficult to give a precise definition of 'analytic philosophy' since it is not so much a specific doctrine as a loose concatenation of approaches to problems." Also, see Stroll (2000), p. 7: "I think Sluga is right in saying 'it may be hopeless to try to determine the essence of analytic philosophy.' Nearly every proposed definition has been challenged by some scholar. [...] [W]e are dealing with a family resemblance concept."
  3. See Hans-Johann Glock, What Is Analytic Philosophy (Cambridge University Press, 2008), p. 205: "The answer to the title question, then, is that analytic philosophy is a tradition held together both by ties of mutual influence and by family resemblances."
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பாய்வு_மெய்யியல்&oldid=3925320" இலிருந்து மீள்விக்கப்பட்டது