உள்ளடக்கத்துக்குச் செல்

பசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஸ்ரா
البصرة
அல் பசுரா
பஸ்ரா நகரம்
பஸ்ரா நகரம்
அடைபெயர்(கள்): கிழக்கின் வெனீஸ்[1]
நாடு ஈராக்
மாகாணம்பாஸ்ரா மாகாணம்
நிறுவிய ஆண்டுகிபி 636
அரசு
 • வகைமாநகராட்சி மன்றம்
 • மேயர்கெலாப் அப்துல் சமத்
பரப்பளவு
 • மொத்தம்181 km2 (70 sq mi)
ஏற்றம்
5 m (16 ft)
மக்கள்தொகை
 (2012)[2]
 • மொத்தம்27,50,000
நேர வலயம்+3 GMT
இடக் குறியீடு(+964) 40
இணையதளம்http://www.basra.gov.iq/

பசுரா (Basra, also written Basrah) (அரபு மொழி: البصرة‎; BGN: Al Başrah) என்பது பசுரா மாகாணத்தின் தலைநகரமாகும். இது ஈரானின் தென்மேற்கில் சாட் அல்-அராப் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது குவைத்திற்கும், ஈரானிற்கும் இடையிலமைந்துள்ளது. 2012இன் மக்கள்தொகை கணிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1.5 மில்லியன் ஆகும்.[2] பசுரா ஈராக்கின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.

அமைவிடம்

[தொகு]

பசுரா பாரசீகக் குடாவிற்கு கீழ் நோக்கி அமைந்துள்ள சாட் அல்-அராப் நீர்வழியில் அமைந்துள்ளது. சாட் அல்-அராப் நீர்வழி பசுராவின் கிழக்கு எல்லையும் மற்றும் பசுரா நீர்வழி பசுராவின் மேற்கு எல்லையையும் வரையறுக்கின்றன. இந்நகரம் நீர்ப்பாசனம் மற்றும் வேறு விவசாயப் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட நீரோடைகள் மற்றும் கால்வாய்களைக் கொண்ட ஒரு சிக்கலான வலையமைப்பால் ஊடுருவப்பட்டுள்ளது. இவ்வோடைகள் பொருட்களையும் மற்றும் மக்களையும் நகரம் முழுவதும் கொண்டு செல்ல போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த இரு தசாப்தங்களாக இந்த நீரோடைகள் மாசடைந்ததாலும், தொடர் நீர்மட்ட வற்றலாலும் போக்குவரத்து செய்வது சாத்தியமாக இல்லை. பசுரா பாரசீகக் குடாவிலிருந்து 110 km (68 mi)இல் அமைந்துள்ளது.

காலநிலை

[தொகு]

கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் பசுரா சூடான பாலைவனக் காலநிலையைக் கொண்டுள்ளது. கடற்கரை ஓரமாக அமைந்துள்ளதன் காரணமாக பசுராவை சூழவுள்ள பிரதேசங்களை விட பசுரா அதிக மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. சூன் தொடக்கம் ஆகத்து வரையான கோடை கால மாதங்களில், பசுரா தொடர்ந்து உலகில் அதிக சூடான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. சூலை தொடக்கம் ஆகத்து வரையில் 50 °C (122 °F) வெப்பநிலையைக் கொண்டு அதிக சூடாக காணப்படும். குளிர்காலத்தில் பசுரா சராசரி வெப்பநிலையாக 20 °C (68 °F) கொண்டு மிதமாக காணப்படும். குளிர்கால இரவுகளில் குறைந்த வெப்பநிலையாக 0 °C (32 °F) காணப்படும். இந்நகரம் சதுப்பு பாரசீக வளைகுடா அருகாமையில் இருப்பதன் காரணமாக சில வேளைகளில் 90%க்கும் அதிகமான ஈரப்பதத்தைக் கொண்டிருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், பசுரா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 17.7
(63.9)
20
(68)
24.5
(76.1)
30.6
(87.1)
36.8
(98.2)
39.7
(103.5)
41.3
(106.3)
41.8
(107.2)
39.9
(103.8)
34.9
(94.8)
27.1
(80.8)
20.3
(68.5)
31.22
(88.19)
தினசரி சராசரி °C (°F) 12.2
(54)
14.2
(57.6)
18.3
(64.9)
23.9
(75)
30.2
(86.4)
32.9
(91.2)
34.3
(93.7)
33.9
(93)
31.2
(88.2)
26.4
(79.5)
20.4
(68.7)
14.5
(58.1)
24.37
(75.86)
தாழ் சராசரி °C (°F) 6.8
(44.2)
8.4
(47.1)
12.2
(54)
17.2
(63)
23.6
(74.5)
26.2
(79.2)
27.4
(81.3)
26.1
(79)
22.6
(72.7)
18
(64)
13.7
(56.7)
8.7
(47.7)
17.58
(63.64)
பொழிவு mm (inches) 31
(1.22)
21
(0.83)
19
(0.75)
17
(0.67)
5
(0.2)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
3
(0.12)
23
(0.91)
33
(1.3)
152
(5.98)
சராசரி மழை நாட்கள் 6 5 5 4 2 0 0 0 0 1 4 5 32
Source #1: Climate-Data.org[3]
Source #2: Weather2Travel for rainy days and sunshine[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sam Dagher (18 September 2007). "In the 'Venice of the East,' a history of diversity". The Christian Science Monitor. http://www.csmonitor.com/2007/0918/p11s02-wome.html. பார்த்த நாள்: 2 January 2014. 
  2. 2.0 2.1 "Basra Governorate Profile" (PDF). UN Joint Analysis Unit. பார்க்கப்பட்ட நாள் 5 December 2014.
  3. "Climate: Basra - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 22 August 2013.
  4. "Basra Climate and Weather Averages, Iraq". Weather2Travel. பார்க்கப்பட்ட நாள் 22 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுரா&oldid=3063862" இலிருந்து மீள்விக்கப்பட்டது