உள்ளடக்கத்துக்குச் செல்

பஜாவு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஜாவு மொழி
Sama–Bajaw Language
Bahasa Bahasa Bajau
நாடு(கள்) மலேசியா
 இந்தோனேசியா
 பிலிப்பீன்சு
பிராந்தியம்சூலு தீவுக்கூட்டம் பிலிப்பீன்சு, சபா, கலிமந்தான், சுலாவெசி, மலுக்கு தீவுகள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.3 மில்லியன்  (2023[1])
ஆஸ்திரோனீசிய
ஆரம்ப வடிவம்
Proto-Sama–Bajaw
  • பஜாவு மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புsama1302[2]

பஜாவு மொழி, (மலாய்: Bahasa Bahasa Bajau; ஆங்கிலம்: Sama–Bajaw Language); என்பது மலேசியா. இந்தோனேசியா, பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் பேசப்படும் மொழியாகும். கலிமந்தான், சூலு தீவுக்கூட்டம், சுலாவெசி, மலுக்கு தீவுகள் ஆகிய தீவுகளிலும் இந்த மொழி பேசப்படுகிறது.

இந்த மொழி போர்னியோவில் வாழும் பெரும்பான்மை பஜாவு மக்களின் (Bahau People) முதன்மை மொழியாகவும் விளங்குகிறது. சபா மாநிலத்தில் வாழும் பஜாவு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பஜாவு மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.

பஜாவு மக்கள்

[தொகு]
செம்பூர்ணாவில் ஒரு பஜாவு பெண்மணி. சூரிய ஒளி தாக்கத்தைத் தவிர்க்க 'போராக்' எனும் முக மாவைப் பயன்படுத்தி உள்ளார்.

பஜாவு மக்கள் என்பவர்களைப் பொதுவாக சாமா பஜாவு (Sama-Bajau) மக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்தோனேசியாவின் சுலாவெசி தீவைச் சுற்றியுள்ள பண்டா கடல், சுலாவெசி கடல்,

மலுக்கு கடல் பகுதிகளில் வாழும் இவர்கள்; உலகின் இறுதிக் கடல் நாடோடி இன மக்கள் ஆவார். அத்துடன் இவர்கள் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகியவற்றின் கடல் நீரோட்டங்களில் முதன்மையாக வசிக்கின்றனர்.

பஜாவு மக்கள் ஆஸ்திரேலினிசிய இனத்தினர் ஆவார். கடல் ஓரங்களில் மூங்கில் வீடுகளை கட்டிக் கொண்டு வாழும் இவர்கள், லெப்சா எனும் நீண்ட படகுகளில் கடலைக் கடந்து செல்வது பாரம்பரிய வழக்கமாகும். அவ்வாறு கடல கடந்து சென்று மீன்கள், பவழங்கள், அரிய கடல் பொருட்களைக் கண்டுபிடித்து, கடற்கரையில் கொண்டு வந்து விற்று வாழ்கின்றனர்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "Bajau people were the second-largest ethnic group in Sabah". study.com. பார்க்கப்பட்ட நாள் 4 September 2024.
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Sama–Bajaw". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.

மேலும் படிக்க

[தொகு]
  • Richards, Anthony (1981). An Iban-English Dictionary. New York: Oxford University Press.
  • Asmah Haji Omar (1969). The Iban Language of Sarawak: A Grammatical Description (PhD thesis). SOAS University of London.
  • Indigenous Communities and Languages of Sarawak, Malaysia; Coauthored by ASMAH HAJI OMAR dan NORAZUNA NORAHIM (2020); ISBN: 9789834926144

வெளி இணைப்புகள்

[தொகு]

‎‎

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜாவு_மொழி&oldid=4085491" இலிருந்து மீள்விக்கப்பட்டது