உள்ளடக்கத்துக்குச் செல்

படவணு அடர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படவணு அடர்த்தி என்பது கணினித் திரைகள், தொலைக்காட்சித் திரைகள், எண்ணிமப் படப்பிடிக் கருவிகள், படிம வருடிகள் போன்றவற்றின் பிரிதிறனை அளக்கப் பயன்படும் ஒரு அளவீடு ஆகும்.

ஒரு படத்தின் பிரிதிறனை ஓர் அங்குலத்தில் உள்ள படவணுக்கள் (Pixels per inch (PPI - பிபிஐ) கொண்டு வரையறை செய்யலாம். எ.கா 100 x 100 படவணுக்கள் கொண்ட ஒரு படம், ஒரு அங்குல சதுரத்தில் அச்சிடப்பட்டால், அது 100 புள்ளிகளை ஓர் அங்குலத்தில் கொண்டுள்ளது (dots per inch (DPI)) எனக் கூறலாம். பொதுவாக ஒரு படம் அச்சிடப்பட 300 புள்ளிகள் ஓர் அங்குலத்துக்குத் தேவை.

திரைத் தெளிவுத்திறனும் படவணு அடர்த்தியும் ஒன்றல்ல. உண்மையில் படவணு என்பது தனக்கேயுரித்தான ஒரு அளவையோ அல்லது அலகையோ கொண்டிராத ஒரு பண்புக்கூறு மட்டுமே. ஆனால் அச்சிடப்படும்போதும், திரையிடப்படும்போதும் படிமவருடலின்போதும் மட்டுமே படவணுக்கள் உருவத்தையும் அடர்த்தியையும் கொண்டிருக்கின்றன.[1]

சான்றுகள்

[தொகு]
  1. Alvy Ray Smith (11 Nov 1996). "A Pixel Is Not A Little Square" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=படவணு_அடர்த்தி&oldid=3496202" இலிருந்து மீள்விக்கப்பட்டது