பண்டைய தெசலி
Thessalia
Θεσσαλία | |
---|---|
பண்டைக் கிரேக்க பிராந்தியம் | |
பண்டைய தெசலியின் வரைபடம் | |
Location | தெசலி |
பெரிய நகரங்கள் | லாரிசா, பெரே |
பேச்சுவழக்குகள் | ஏயோலிக் கிரேக்கம் |
முக்கிய காலம் | பெரேயன் ஆதிக்கம் |
தெசலி (Thessaly or Thessalia, அட்டிக் கிரேக்கம் : Θεσσαλία , Thessalía அல்லது Θετταλία , Thettalía [1] ) என்பது பண்டைக் கிரேக்கத்தின் பாரம்பரிய பகுதிகளில் ஒன்றாகும். மைசீனியன் காலத்தில், தெசலி அயோலியா என்று அறியப்பட்டது. இது கிரேக்கத்தின் முக்கிய பழங்குடியினரான ஏயோலியன்களும், கிரேக்க மொழியான ஏயோலிக் மொழியும் தொடர்ந்து தொடர்புடைய இடமாக இருந்தது.
நிலவியல்
[தொகு]பண்டைய தெசலி ஒலிம்பசு மலையிலிருந்து வடக்கே ஸ்பெர்சியோஸ் பள்ளத்தாக்கு தெற்கே மிகப் பெரிய அளவில் பரவிய ஒரு பகுதி ஆகும். தெசலியானது புவியியல் ரீதியாக வேறுபட்ட பகுதியாக, மலைகளால் சூழப்பட்ட பரந்த சமவெளிகளைக் கொண்டுள்ளது. சமவெளிகளின் மேற்கில் பிண்டோஸ் மலைகள், தெற்கே ஓத்ரிஸ் மலைகள், கிழக்கில் பெலியன் மற்றும் ஒஸ்ஸா மலைகள், வடக்கே ஒலிம்போஸ் மலைகள் போன்றவற்றால் சூழப்பட்டுள்ளன. இச்சமவெளிகள், லாரிசா படுகை மற்றும் கார்டிட்சா படுகை ஆகிய இரண்டு படுகைகளைக் கொண்டிருக்கின்றன. இங்கு பினியோஸ் ஆற்று பாய்கிறது. தென்கிழக்கு தெசலியில் உள்ள பகாசெட்டிக் வளைகுடா, இப்பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு ஏற்ற ஒரே நீர்நிலையாகும்.
குறிப்பாகச் சொன்னால், தெசலி என்பது பழங்காலத்தில் தெசலியர்கள் வாழ்ந்த மத்திய சமவெளிகளைக் குறிக்கிறது. இச்சமவெளிகள் பழங்காலத்தில் டெட்ராட்ஸ் எனப்படும் நான்கு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவை பெலாஸ்ஜியோடிஸ், பிதியோடிஸ், தெசலியோடிஸ் ஹிஸ்டியாயோடிஸ் என்பனவாகும். தெசலியானது பரந்த பொருளில், பெரியோய்கோய் என்று அழைக்கப்படும் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியது, அவை வெவ்வேறு இனக்குழுக்கள் வசிக்கும் பகுதிகளாக இருந்தன. அவர்கள் தெசாலியர்களுடன் நெருக்கமாக இணைந்தவர்களாகவும், சார்ந்தவர்களாகவும் இருந்தனர். புற்றியுள்ள பெரியோய்கோயானது பெர்ரைபியா, மக்னீசியா, அக்கேயா ஃபிதியோடிஸ், டோலோபியா, ஐனிஸ், மாலிஸ், ஒய்தாயா ஆகிய பகுதிகளால் ஆனது. தெசலியின் மூன்று பெரிய நகரங்களாக லாரிசா (பெலாஸ்கியோடிஸ்), பெராய் (பெலாஸ்கியோடிஸ்) பார்சலோஸ் (பிதியோடிஸ்) ஆகியவை இருந்தன.
தெசலியன் சமவெளிகள் தானியங்கள் மற்றும் கூளவகைகளை பயிரிடுவதற்கு மிகவும் பொருத்தமானவையாக இருந்தன. மேலும் பழங்காலத்தில் குதிரை வளர்ப்புக்காக அறியப்பட்டது. பேரரசர் அலெக்சாண்டரின் குதிரையான, புசெபெலஸ் பார்சலோசைச் சேர்ந்தது. சுற்றியுள்ள மலைப்பகுதிகள் வேளாண்மைக்கு பொருத்தமானவை அல்ல. அதனால் கால்நடை வளர்ப்பையே பெரிதும் நம்பியிருந்தனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Derived from tessares/pettares "four", from a division into four parts (Thessalian tetrarchy; Phthiotis, Thessaliotis, Histiaeotis and Pelasgiotis), according to G. N. Khatzidaki, "Koskylmatia", Athena 8 (1896), p. 119 εκ του πέτταρες ( = τέτταρες, δια την εις τετράδας διαίρεσιν της χώρας, ἤτοι εις Θεσσαλιώτιδα, Φθιώτιδα, Πελασγιώτιδα και Ἱστιαιώτιδα). Daniēl Magnēs, Lexikon historikomythikon kai geōgraphikon (1834), 161f..