உள்ளடக்கத்துக்குச் செல்

பறையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பறையர்
ஆதி திராவிடர்
மதராசு மாகாணத்தில் உள்ள பறையர்களின் குழு, 1909
மதங்கள்
மொழிகள்தமிழ் தெலுங்கு மலையாளம்
நாடு இந்தியா
 இலங்கை
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி
இனம்ஆதி திராவிடர்
மக்கள் தொகை9,462,985
உட்பிரிவுகள்மறையர், சாம்பான், சாம்பவர், கோலியர், வள்ளுவர்]]
தொடர்புடைய குழுக்கள்தமிழர்
நிலைபட்டியல் இனத்தவர்கள்

பறையர் (Paraiyar) அல்லது பெறவா, சாம்பவர்[1] எனப்படுவோர் கேரளா, தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வசிக்கும் ஓர் இனக்குழுவினர் ஆவர்.[2]

தொடக்கம்

பறையர், மறையர், சாம்பவர் என்பவர்கள், இந்தியாவில் வசிக்கும் ஒரு சமூக குழுவினர், இவர்கள் அதிகமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும், தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை மறையர், வள்ளுவர், ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.[சான்று தேவை]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி பறையர் மற்றும் ஆதி திராவிடர்களின் மக்கள் தொகை 9,064,700 ஆகும், இது தமிழ்நாடு மக்கள் தொகையில் 12% ஆகும்.[3]

இச்சமூகக்குழுவினது பெயர் "பறை" என்பதில் இருந்து தோன்றியதாகும். பறை என்பது பறை (இசைக்கருவி) அடித்து செய்தி கூறுவதைக் குறிக்கும். 21 ஆம் நூற்றாண்டில் (சில காலம் முன் வரை), இவர்கள், வட ஆற்காடு மாவட்டத்தில் பறையறிந்து செய்தி கூறிவந்தார்கள். மறை ஓதிய(பறைந்த)வர்கள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. மேலும் பௌத்த தர்மத்தை பறைந்தவர்கள் என்பதாலே இப்பெயர் ஏற்பட்டது என்று அயோத்தி தாசர் குறிப்பிடுகின்றார். ஒப்பிடுக: பெறவா எனும் இலங்கையினர் பௌத்த கொள்கைகளை பின்பற்றுபவர்கள். சேர நாட்டில் (கேரளா) இன்று வரை பறை என்பது 'சொல்' என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றது.

வரலாறு

சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் பறையர்கள் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி அடைந்தார்கள், பின்னர் பிற்கால பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர்.

கிளய்டன் கூற்றிலிருந்து, பறையர்கள் தமிழகத்தில் நீண்டதொரு வரலாறு அமையப்பெற்றதும், துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர் என்பதற்கும் சான்று பகர்கின்றார். பிரான்சிஸ் அவர்கள் 1901 ஆம் ஆண்டின் மெட்ராஸ் சென்சஸ் பட்டியலை இயற்றியவர். அவர் கூற்றின்படி, கிறித்தவ ஆதிக்கம் தழைத்தோங்கிய பண்டைய தமிழ் படைப்புகளில் "பறையர்" என்னும் சொலவடை உபயோகத்தில் இல்லை எனவும், ஆனால் தனித்ததொரு இயல்பினையும், கிராமங்களில் அல்லாது கோட்டைகளில் வாழும் பழங்குடியின மக்களைப் ("Eyivs") பற்றிய செய்திகள் நிரம்பியிருப்பதாக கூறுகின்றார். ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர்.

தஞ்சை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள சிவன் விழாக்களில் பறையர்கள் வெண்குடை ஏந்தி சிவனுக்கு முன்பு செல்லும் மரபு வழி உரிமை உடையவர் ஆவர்.[4]

பறையர் குடியிருப்பு

'ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதிமங்கலத்து தென்பிடாகை மணற்க்குடியிலிருக்கும் ஊர்ப்பறையன் மண்டை சோமனான ஏழிசைமோகப்படைச்சன் என்பவர் கோவில் ஒன்றிற்க்கு கொடை அளித்ததாக, தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண் 794 கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் மூலம் பறையர்கள் சதுர்வேதி மங்கலங்களில் குடியிருந்ததை அறிய முடிகின்றது.

பறையர் குடியிருப்பு, சேரி என்றும் காலனி என்றும் அழைக்கப்படுகின்றது. பொருளாதாரத்தில் கடுமையாக பின்தங்கிய பறையர்கள் வசிக்கும் சேரிகள் இன்று அவர்களின் பொருளாதார சூழலை பிரதிபலிப்பதால் இன்றை சூழலில் அச்சேரிகள் அழுக்கான என்ற பொருளுடைய Slum என்ற ஆங்கிலச்சொல்லோடு பொருத்திப் பார்க்கப்படுகின்றது. ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும். இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.[5] சோழர் கால கல்வெட்டானது பறைச்சேரியும் கம்மாணங்சேரியும் ஊரின் நடுபட்ட குளமும் புலத்திற்குளமுங்கரையும் இவ்வூர்திருவடிகள் என்று குறிப்பிடுகின்றது.[6] இதன் மூலம் கம்மாளர்கள் வாழ்ந்த கம்மாளஞ்சேரியும் பறைச்சேரியும் அருகருகே இருந்தன என்பதை அறிந்துகொள்ளலாம். ஆக சேரி என்பது தமிழர்கள் வாழும் பகுதிக்கான ஒரு பெயரேயாகும்.

பறையர் அரசுகள்

வரலாற்றில் சிற்றரசர்களாக பறையர்கள் இருந்துள்ளனர்.[சான்று தேவை]

பறையூர்

இன்றைய கேரளாவில் உள்ள பறூர் என்றழைக்கப்படும் பறையூரில் வசித்த மக்கள் பறையர்கள் எனவும் அவர்களின் அரசன் தாந்திரீகத்தை நன்குணர்தவர் என்றும், நம்பூதிரிகள் ஒரு போட்டியில் பறையூர் தலைவனை வீழ்த்தி பறையூருக்கு அரசன் ஆனதாக நாட்டார் கதை வழக்கொன்று உள்ளது.[7] சிலப்பதிகாரத்திலும் 'பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்'[8] என்ற பாடல் வரி வருகின்றது, அந்த சாக்கையன் கூத்து இன்று வரை கேரளாவில் பறையன் துள்ளல் என்ற பெயரில் ஆடப்பட்டு வருகின்றது.

வில்லிகுலப் பறையர்கள்

இலங்கையில் இருந்த அடங்காப்பதத்தில் நான்கு அரசுகள் இருந்தன அதில் கணுக்கேணியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் வில்லிகுலப்பறையர்கள் எனவும், இவர்கள் ஆதிக்குடிகள் எனவும், யாருக்கும் அடங்காதவர்களாக இருந்ததனால் அந்த பகுதிக்கு அடங்காப்பதம் என்று பெயர் வந்ததாகவும் வையாப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. இவர்களை ஒடுக்க திடவீரசிங்கன் என்ற வன்னியர் வந்ததாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.[9]

நந்தன் என்ற சிற்றரசன்

சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பட்டுச்சுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் நடுவே இருந்த சோழ மாளிகையைத் தலைமையிடமாகக் கொண்டு நந்தன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். பிறகு மறவர்களால் நந்தனும் அவனது ஆட்சியும் அழிக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் ஆட்சியில் விளாரியில் இருந்த நந்தன் கோட்டையும் அழிக்கப்பட்டது.[10]

தொழில்

கோலியர் (நெசவு தொழில்)

நெசவு செய்த பறையர் வகுப்பினர்‌ கோலியர்கள் ஆவார்கள்.[11] சிலர் விவசாயக்கூலிகளாகவும் இருந்தனர். இவர்கள் நெசவுப்பறையர்/கோலியப்பறையர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை,சிவகங்கை போன்ற பகுதிகளில் மிகுதியாக காணப்படுகின்றனர், இவர்களுக்கென்று நாடு (territory) உள்ளது.உதாரணமாக பட்டுக்கோட்டை பகுதிகளில் "அம்புநாடு","வாராப்பூர்நாடு". சில நெசவுப்பறையருக்குச்‌ சாம்பான்‌ என்னும்‌ பட்டப்‌பெயருண்டு. ஈசன்‌ என்பதும்‌ அவர்களின்‌ பட்டப்பெயர்‌களுள் ஒன்று.திருமணக்‌ காலங்களில்‌ இவர்களின்‌ பட்டப்பெயர்‌ சொல்லப்‌படுதல்‌ வேண்டும்‌. மாப்பிள்ளையின் சகோதரி மணப்பெண்ணுக்குத்‌ தாலி கட்டுவாள்[12].

கடம்பன், செவந்தான், குடியான், காலாடி, கோப்பாளி, சேவுகன், கருமாலி, தேவேந்திரன், வெறியன், வலங்கான், மோயன், சுக்கிரன், களவடையர், சாத்தன் போன்ற பல பட்டங்கள் உள்ளது. இது போல பட்டங்கள் பெயருக்கு பின்னாளும் திருமணத்தின் போது உறவு முறையை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர் என எட்கர் தர்ஸ்டன் தனது ஆய்வு நூலான South Indian Caste and Tribes (Vol 3, Page 302) இல் பதிவு செய்துள்ளார்[13]

இவர்கள் இலங்கையில் சாலியர் என்று அறியப்படுகின்றனர்.[14]

கோலியர் குல பட்டங்கள்/கிளை (வகையறாக்கள்)

  • அகத்தோழியார்
  • அங்கன்
  • அச்சுகாரன்
  • அச்சுதன்
  • அச்சுத்தறியார்
  • அஞ்சன்
  • அஞ்சான்
  • அடங்காப்பரயர்
  • அடியான்
  • அடைக்கலம்காத்தான்
  • அடைக்கன்
  • அண்ணமார்
  • அத்திவெட்டி
  • அந்தணன்/அந்தநாட்டார்
  • அம்பலப்புலி
  • அம்பலம்
  • அம்புநாட்டார்
  • அரசகண்டன்
  • அரசகுடி
  • அரசுக்குடையார்
  • அரமனார்
  • அருகப்பணிந்தான்
  • அருமறைக்கொடி
  • அழகன்
  • அறந்தன்
  • ஆசாரி
  • ஆணைக்கட்டி
  • ஆணைநடையன்(ஆணையன்)
  • ஆணையர்
  • ஆணையேறி
  • ஆண்டான்
  • ஆண்டி
  • ஆதன்
  • ஆதிவெட்டி
  • ஆத்தாபறையன்
  • ஆப்பநாட்டார்
  • ஆவுடைப்பணிந்தான்
  • இச்சவாகு
  • இந்திரன்
  • இருங்களன்
  • இருங்கோலன்
  • இருப்பரயன்
  • இழைக்கட்டி
  • இழையான்
  • இளந்திரையன்
  • இளமான்
  • ஈசனார்
  • ஈசன்
  • ஈமத்தாடி
  • உஞ்சையார்
  • உடையான்
  • உலகங்காத்தான்
  • உலகன்
  • உவச்சன்
  • ஊமாண்டி
  • ஊமையன்
  • எட்டிப்பிரியன்
  • ஏகவேணி
  • ஐயன்
  • ஒட்டன்
  • ஒண்டிப்புலி
  • ஒண்டியர்
  • ஒலையன்
  • ஓதன்
  • கங்காணி
  • கச்சிரன்
  • கடம்பன்
  • கடுக்கன்
  • கடையர்
  • கட்டகுப்பன்
  • கட்டவெட்டி
  • கட்டையன்
  • கணக்கர்
  • கணக்கன்
  • கன்னிகைக்குறியான்
  • கன்னியார்
  • கண்டபிள்ளை
  • கண்டப்புலி
  • கண்டியர்
  • கண்டியன்
  • கரியர்
  • கருக்கன்
  • கருக்கி
  • கருங்குண்டி
  • கருப்பன்
  • கருமங்குறியார்
  • கருமாலி
  • கரும்பரயன்
  • கரும்புலி
  • கருத்தான்
  • கல்யாணி
  • கழுவெட்டி
  • கழுவேத்தியார்
  • களஞ்சியர்
  • களப்பறையன்
  • களவடையர்/களப்படையார்
  • கள்ளக்கரையன்
  • கனியர்
  • கனியன்
  • கன்னான்
  • கன்னிமான்
  • காக்கையன்
  • காடுவெட்டி
  • காணியான்
  • காதமறவர்
  • காத்தவராயன்
  • காந்தாரி
  • காரியர்
  • காரியாண்டி
  • காருகன்
  • காலமதி
  • காலாடி
  • காலாடிப்பறையன்
  • காலிங்கராயன்
  • காலிங்கன்
  • காவல்காத்தான்
  • காவாலி
  • கானன்
  • கானியாள்(கானியான்)
  • கிழவன்
  • கிழான்
  • கீழக்குடையான்
  • குச்சிரர்
  • குஞ்சாண்டி
  • குடியான்
  • குண்டர்
  • குதிரைக்காரன்
  • குரும்பன்
  • குழிவெட்டி
  • குறையான்
  • கூத்தப்பரயன்
  • கூத்தாண்டான்
  • கூத்திரார்
  • கூப்புழையார்
  • கூலச்சியார்/கோலோச்சியார்
  • கொங்கன்
  • கொஞ்சிலியர்
  • கொடும்பறையர்
  • கொண்டைகட்டி
  • கொண்டைபுலி
  • கொம்புக்காரன்
  • கொல்லன்
  • கோட்டவெரி
  • கோட்டாச்சியன்
  • கோட்டாளி
  • கோட்டைபுரியார்
  • கோதண்டபரயர்
  • கோப்பாளி
  • கோமட்டி/கோனமட்டி
  • கோலர்
  • கோலி
  • கோலிஞான்
  • சங்கரன்
  • சடையன்
  • சண்டியர்
  • சம்பன்
  • சம்பு
  • சம்புகன்
  • சம்புரான்
  • சம்மட்டியார்/சம்பட்டியார்
  • சரக்கவரையர்/சர்க்கார்பரையர்
  • சன்னாசி
  • சாக்கியர்
  • சாக்கை
  • சாக்கையர்
  • சாஞ்சாடி
  • சாத்தன்
  • சாம்பமுதலி
  • சாம்பாச்சி
  • சாம்பான்
  • சாலி
  • சாலியன்
  • சாளுவன்
  • சிங்கப்புலி
  • சித்தன்
  • சித்திரர்
  • சிலுக்கவெட்டி
  • சிவந்தான்
  • சிவன்(ஈசன்)
  • சிறியான்
  • சின்னநாட்டான்
  • சீலியன்
  • சீவுலி
  • சீனான்
  • சுக்கிரபரயன்
  • சுக்கிரன்
  • சுண்டன்
  • சுத்தன்
  • சுந்தரன்
  • சுரத்தான்
  • சுருக்கட்டை
  • சூரப்புலி
  • சூரன்
  • சூரியகுலத்தான்
  • சூரியகுலம்
  • சூரியமுதலி
  • சூரியர்
  • செகுடன்
  • செங்காப்பரத்தான்
  • செங்கான்
  • செங்கோலி
  • செண்டைபிரியர்
  • செம்பரையர்
  • செம்பன்
  • செம்பியன்
  • செம்பொன்மாரி
  • செம்மான்
  • செருமாடன்
  • செருமான்
  • செவந்தான்
  • சென்னியர்
  • சேரியர்
  • சேர்வை
  • சேர்வைக்காரன்
  • சேவுகன்
  • சேனாதிபதி
  • சேனையன்
  • சைவன்
  • சொக்கரன்
  • சொக்கன்,சொக்கமட்டை
  • சொரப்பரையர்
  • சொலகுவெட்டி/சோழகவெட்டி/சோழகன்வெட்டி
  • சோழகன்
  • சோழப்பரையர்
  • ஞானவெட்டி
  • தங்கலான்
  • தஞ்சிரன்/தஞ்சிராயர்
  • தட்டார்
  • தட்டான்
  • தண்டன்
  • தண்டையர்
  • தம்பிரான்
  • தலைக்கோலி
  • தலையாட்டி/தலைவெட்டி
  • தறிக்கட்டுப்பரையன்
  • தறிக்காரன்
  • தறியான்
  • தாசன்
  • தாண்டவராயர்
  • தாதன்
  • திருகுதேடி
  • திருவெட்டியான்
  • தீர்த்தார்
  • துங்கன்
  • துடியான்
  • துண்டன்
  • துரியன்
  • துருத்தன்
  • தெற்கத்தியான்
  • தென்னன்/தென்னதிரையன்/தென்னவன்
  • தேவமுதலி
  • தேவன்
  • தேவேந்திரன்
  • தையல்காரன்
  • தைலான்
  • தொக்கிலவன்
  • தொங்கன்-(துங்கன்)
  • தொந்தியன்/தொவந்திரன்
  • தொழந்திரியர்
  • தோட்டி
  • தோட்டிக்கரான்
  • தோல்வெட்டி
  • நக்கன்
  • நந்தன்
  • நந்திக்கொடியன்
  • நம்பாளி
  • நம்புடையார்
  • நயினார்
  • நயினான்
  • நரியன்
  • நரிவெட்டி
  • நல்லான்
  • நாகர்
  • நாகமதி
  • நாச்சாரன்
  • நாச்சியார்
  • நாட்கமையன்
  • நாட்டான்
  • நாயனார்
  • நீர்க்கட்டி
  • நெக்குத்தி/நெக்கத்தி
  • நெசவுக்காரன்
  • நெடுமான்
  • நெடும்பிரியர்
  • நெப்பன்
  • நெய்கோலி/நெவலி
  • நெய்க்காரன்
  • நெற்கட்டான்
  • நெற்கத்தியான்
  • நொண்டியான்
  • நோக்கன்
  • பக்கட்டி
  • பஞ்சன்
  • பஞ்சிபறையன்
  • பஞ்சுப்புலி
  • படியான்
  • படைவெண்றான்
  • பட்டங்கட்டி
  • பட்டரையர்
  • பட்டவர்
  • பட்டன்
  • பட்டிக்காரர்/பட்டக்காரன்
  • பட்டுக்கட்டி
  • பட்டுநூலான்
  • பணிகொண்டான்
  • பணிக்கர்
  • பணிச்சன்
  • பணிபூண்டான்
  • பணியான்
  • பண்டவெட்டி
  • பண்டாரபறையன்
  • பண்டாரி
  • பண்டிதன்
  • பத்தன்
  • பத்துப்புலியார்
  • பந்தல்முட்டி
  • பரங்கியர்
  • பரதேசி
  • பருத்திக்கரான்
  • பலாக்காய்வெட்டி
  • பழவெட்டி/பழவேட்டிராயர்
  • பறைசைவன்
  • பனையன்
  • பாண்டுரான்
  • பாப்பரையர்
  • பார்ப்பான்
  • பிச்சயன்
  • பிச்சன்
  • பிடாரன்
  • பிடாரி
  • பிரமன்/பரமன்/வர்மன்
  • பிள்ளை
  • புஞ்சைபுலி
  • புலயன்
  • புலவன்
  • புலிக்கி
  • புலியன்
  • புள்ளான்
  • புறவெட்டி
  • பூசன்/பூசகலரையன்
  • பூணூலான்
  • பூனையன்
  • பெண்டாட்டி
  • பெரியகோட்டையார்
  • பெரியநாட்டான்
  • பெரியநாயனன்
  • பெரியான்
  • பெரும்படையான்/பெருவுடையான்
  • பேயன்
  • பேரையன்
  • பொக்கான்
  • பொட்டவளயன்
  • பொட்டவெள்ளையன்
  • பொட்டுக்கட்டி
  • பொதியன்
  • பொந்தையன்
  • பொய்உரையான்
  • பொய்க்காரன்
  • பொய்யன்
  • பொரவியர்
  • பொரவியார்
  • பொரையர்
  • பொன்கோலி
  • பொன்னன்
  • பொன்னாளி
  • போக்கன்
  • போத்தன்
  • மசக்கி
  • மசக்கியர்
  • மடஞ்சன்
  • மடைவெட்டி/மடைகட்டி
  • மணிக்கிரான்
  • மணிக்கிரிவன்
  • மணியக்காரன்
  • மண்ணையன்
  • மத்தாளியர்
  • மந்தி
  • மயிலட்டி(மயிலாடி)
  • மயிலாடி
  • மருதன்
  • மலையான்
  • மழவன்/மழவரையர்
  • மன்றாடி
  • மாகாளி
  • மாடன்
  • மாப்பிரியர்
  • மாராயன்
  • மான்கொண்டான்
  • மானம்காத்தான்
  • முகவெட்டி/முக்கட்டி
  • முசுகுந்தன்
  • முட்டுகாரன்
  • முட்டுக்காரன்
  • முதலி
  • மும்முடியர்
  • முன்னோடியான்
  • முனியன்
  • மூக்கப்பொரி
  • மூக்கன்
  • மூப்பன்
  • மெக்கினார்/மெய்க்கினார்
  • மெய்கொண்டான்
  • மைத்துவான்
  • மொக்கையன்
  • மொங்கட்டியர்
  • மோயன்
  • ராமாவரம்
  • வடுகன்
  • வடுங்கோலன்
  • வண்டியன்
  • வயக்காரன்
  • வயரர்
  • வயிரன்
  • வரதன்
  • வலங்காத்தான்
  • வலங்கான்
  • வலங்கை
  • வலங்கைமுகத்தான்
  • வலங்கொண்டான்
  • வலியவன்
  • வலுப்பன்
  • வல்லநாட்டார்
  • வல்லான்
  • வாக்கன்
  • வாணன்/வாணக்கன்
  • வாண்டான்
  • வாண்டையன்
  • வாதரையன்
  • வாபுலி
  • வாய்ப்புலி
  • வாராப்பூர்நாட்டார்
  • வாராவிநாயன்/வாராவினான்
  • வாரியன்
  • வார்கட்டி
  • வாவாசி/பாவாசி
  • விசலமுண்டார்
  • வித்தகாரன்
  • வித்தன்
  • விந்தன்
  • விரலியன்
  • விழுப்பரையன்
  • வினைதீர்த்தான்
  • வின்னவன்
  • வின்னி
  • வீரபத்திரன்
  • வீரபாகு
  • வீரன்
  • வீராண்டி
  • வீருடையான்
  • வெட்டன்
  • வெட்டிக்காரன்
  • வெட்டியான்
  • வெட்டுவான்
  • வெள்ளப்பிரமன்
  • வெள்ளாதி
  • வெள்ளானை
  • வெள்ளையன்
  • வெறியராண்டி
  • வெறியன்
  • வேங்கைப்புலியார்
  • வேசாலி
  • வேதியன்
  • வேம்பன்
  • வேலம்பட்டியான்/வேளப்படையான்
  • வேலன்

மன்றாடி

பறையர்களைப்பற்றிய நான்கு கல்வெட்டுக்கள் அவர்கள் சூத்திர ராயர்கள் என்று குறிப்பிடுகின்றது. அவற்றில் ஒன்று "மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ்நம்பி" என்று குறிப்பிடுகின்றது. ஆக இக்கல்வெட்டுக்களின் மூலம் பரையர்கள் பிரம்ம சூத்திரம் உட்பட சூத்திரங்கள் அறிந்த சூத்திர ராயர்கள்[15] என்பதும் மேலும் இவர்கள் பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது.[16][17][18][19]

மருத்துவம்

தென் இந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் கிளைட்டன் என்பவர் பிராமண பெண் ஒருவர் பறையரின் கோவிலுக்கு சென்று தன் பிள்ளையை குணப்படுத்த வேண்டியதாகவும், அங்கு பறையன் மந்திரங்கள் சொல்லியதாகவும் குறிப்பிடுகின்றார்.[20] அயோத்தி தாச பண்டிதர் போன்றோர் சித்த மருத்துவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதது. இதன் மூலம் பறையர்கள் மருத்துவம் பார்த்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

காவல்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.[21]

சாக்கைப் பறையனார் என்பவர் தனக்கு கீழ் இருந்த சில வீரர்களுக்கு கட்டளை இட்டபதைப்பற்றி செங்கம் நடுகல் ஒன்று குறிப்பிடுகின்றது.[22] இதன் மூலம் பரையர் ஒருவர் வீரர்களுக்கு கட்டளையிடும் பொறுப்பில் இருந்தமை தெரிகின்றது.

வெள்ளாளன்

"வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்"[23] என்றும், "வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்" [24] என்றும், "வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்"[25] என்றும் கோயம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

மீன் வியாபாரம்

மடிவலை, வாளை வலை, சாளை வலை, சணவலை, போன்ற வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு பணம் என்றும், அம்மீனை வாங்கி விற்க்கும் வியாபாரியான சாம்பானுக்கு ஒரு பணம் என்றும் வரி வசூலிக்கப்படுவதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனில் 15ஆம் நூற்றாண்டில் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீனை விற்பனை செய்யும் வியாபாரியாக கன்னியாகுமரி சாம்பவர்கள் இருந்துள்ளனர்.[26] [சான்று தேவை]

பறையர் உட்பிரிவுகள்

1881-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "CENSUS OF BRITISH INDIA" என்ற நூலில் "வேட்டுவ பறையன்", "திகிழு பறையன்", "மொகச பறையன்", "குடிமி பறையன்", "அத்வைத பறையன்" உட்பட "தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய" 84 பறையர் உட்பிரிவுகளை குறிப்பிடுகின்றது[27].

  1. அச்சக்காசினியூர் பறையன்
  2. அத்வைத பறையன்
  3. அய்யா பறையன்
  4. அழக காட்டு பறையன்
  5. அம்மக்கார பறையன்
  6. அங்கல பறையன்
  7. அங்கையன் பறையன்
  8. பூபு பறையன்
  9. சுண்ணாம்பு பறையன்
  10. தேசாதி பறையன்
  11. இசை பறையன்
  12. ககிமல பறையன்
  13. களத்து பறையன்
  14. கிழகத்து பறையன்
  15. கிழக்கத்தி பறையன்
  16. சோழிய பறையன்
  17. கீர்த்திர பறையன்
  18. கொடக பறையன்
  19. கொங்கு பறையன்
  20. கொடிக்கார பறையன்
  21. கொரச பறையன்
  22. குடிகட்டு பறையன்
  23. குடிமி பறையன்
  24. குளத்தூர் பறையன்
  25. மகு மடி பறையன்
  26. மா பறையன்
  27. மரவேதி பறையன்
  28. மிங்க பறையன்
  29. மொகச பறையன்
  30. முங்கநாட்டு பறையன்
  31. நர்மயக்க பறையன்
  32. நெசவுக்கார பறையன்
  33. பச்சவன் பறையன்
  34. பஞ்சி பறையன்
  35. பரமலை பறையன்
  36. பறையன்
  37. பறையக்காரன்
  38. பறையாண்டி
  39. பசதவை பறையன்
  40. பெருசிக பறையன்
  41. பொய்கார பறையன்
  42. பொறக பறையன்
  43. பொக்கி பறையன் கூலார்
  44. பிரட்டுக்கார பறையன்
  45. ரெகு பறையன்
  46. சம்மல பறையன்
  47. சர்க்கார் பறையன்
  48. செம்மண் பறையன்
  49. சங்கூதி பறையன்
  50. சேரி பறையன்
  51. சிதிகரி பறையன்
  52. சுடு பறையன்
  53. தங்கமன் கோல பறையன்
  54. தங்கம் பறையன்
  55. தங்கினிபத்த பறையன்
  56. தட்டுகட்டு பறையன்
  57. தென்கலார் பறையன்
  58. தெவசி பறையன்
  59. தங்கலால பறையன்
  60. தரமாகிப் பறையன்
  61. தாயம்பட்டு பறையன்
  62. தீயன் பறையன்
  63. தோப்பறையன்
  64. தொப்பக்குளம் பறையன்
  65. தொவந்தி பறையன்
  66. திகிழு பறையன்
  67. உழு பறையன்
  68. வைப்பிலி பறையன்
  69. வலகரதி பறையன்
  70. உறுமிக்கார பறையன்
  71. உருயாதிததம் பறையன்
  72. வலங்கநாட்டு பறையன்
  73. வானு பறையன்
  74. வேட்டுவ பறையன்
  75. விலழ பறையன்
  76. உடும பறையன்

தெலுங்கு பேசும் பறையர்கள்

  1. முகத பறையன்
  2. புள்ளி பறையன்
  3. வடுக பறையன்

மலையாளம் பேசும் பறையர்கள்

  1. ஏட்டு பறையன்
  2. மதராஸி பறையன்
  3. முறம்குத்தி பறையன்
  4. பறையாண்டி பண்டாரம்
  5. வர பறையன்

மேற்கோள்கள்

  1. நிர்மால்யா, ed. (ஜனவரி 2020). மகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி. காலச்சுவடு. p. 184. பறையன் என்கிற சாதிப் பெயர் தங்களை இழிவுப்படுத்துவதாக இருப்பதால் சாம்பவர் என்னும் சாதிப் பெயரைத் தங்களுடைய சாதியினருக்கு அனுமதிக்குமாறு 1918 இல் ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜாவிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்கள். அதற்கான காரணத்தையும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் சிவபக்தர்களான பறையர்களுக்குச் சாம்பவர் ' என்னும் சாதிப் பெயர் உள்ளது. {{cite book}}: Check date values in: |year= (help); no-break space character in |quote= at position 64 (help)
  2. Raman, Ravi (2010). Global Capital and Peripheral Labour: The History and Political Economy of Plantation Workers in India. Routledge. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-13519-658-5.
  3. "தமிழ்நாடு புள்ளி விபரம் ;— பட்டியல் இனத்தவர்கள்;— இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2001" (PDF). p. 1. பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.
  4. சீனிவாச ஐயங்கார் 1914-ல் எழுதிய "Tamil studies, or essays on the history of the Tamil people, language, religion and literature" என்ற நூலின் பக்கம் 81.
  5. உடையார்குடிக் கல்வெட்டு – ஒரு மீள்பார்வை/முனைவர்.குடவாயில் பாலசுப்ரமணியன்
  6. தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 2 பகுதி 1 கல்வெட்டு எண் 5 (பக்கம் 56, 66)
  7. A Social History of India Page 325
  8. சிலப்பதிகாரம் நடுகல் காதை வரி 76-77
  9. வையாபாடல்
  10. இடங்கை, வலங்கையர் வரலாறு - பக்.51-52 ( வேதநாயக சாஸ்திரி அவர்கள் கி.பி.1795-ல் எழுதிய நூல்)
  11. South Indian Caste and Tribes Vol 3 Page 302
  12. "தென்னிந்திய குடிகளும் குலங்களும் ஆசிரியர் ந.சி.கந்தையா பிள்ளை" (PDF). {{cite web}}: line feed character in |title= at position 33 (help)
  13. Rangachari, Edgar Thurston (1855-1935) K. "Castes and Tribes of Southern India: Volume III—K". www.gutenberg.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  14. Census Report of 1830 Based on Castes of Jaffna
  15. சூத்திரன் என்பதற்கு திட்பநுட்பம் அமைந்த மந்திராதிகாரமுடையவன் என்பது பொருளாம்
  16. "மன்றாடி பூசகரிலரைசன் பறையனான சூத்திர ராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.241), (1203–1204 A.D).
  17. "மன்றாடி பூசகர் அச்சன் பறையனான சூத்திலராயனான பொய்யாத தமிழன்" (S.I.I. Vol. XXVI, No.243), (1202–1203 A.D).
  18. "மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ் நம்பி" (S.I.I. Vol. XXVI, No.239), (12th – 13th century A.D).
  19. "பறையனான சூத்திரராயன்" (S.I.I. Vol. XXVI, No.240), (12th – 13th century A.D).
  20. தென் இந்திய குலங்களும் குடிகளும் தொகுதி 6 பக்கம் 84
  21. Sankarankovil Varalaaru
  22. செங்கம் நடுகற்க்கள், எண் 1971/96
  23. கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 144/2004
  24. கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 146/2004
  25. கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் - I : 94/2004
  26. கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுக்கள் எண் 487/2004
  27. "WELCOME TO CENSUS OF INDIA : Census India Library [1A-CENSUS OF BRITISH INDIA.Pdf]". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20. {{cite web}}: line feed character in |title= at position 50 (help)

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறையர்&oldid=3695794" இலிருந்து மீள்விக்கப்பட்டது