பள்ளி உணவு
பள்ளி உணவு (School meal) அல்லது பள்ளி மதிய உணவு (பள்ளி இரவு உணவு அல்லது பள்ளி காலை உணவு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது பள்ளி மாணவர்களுக்கும் சில சமயங்களில் ஆசிரியர்களுக்கும் பொதுவாக பள்ளி நாளின் மத்தியில் அல்லது தொடக்கத்தில் வழங்கப்படும் உணவாகும் . உலகெங்கிலும் உள்ள நாடுகள் பல்வேறு வகையான பள்ளி உணவு திட்டங்களை வழங்குகின்றன. ஒவ்வொரு வாரமும், அனைத்து தரநிலைகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான குழந்தைகள் அந்தந்த பள்ளிகளில் உணவைப் பெறுகிறார்கள். பன்னிரெண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் பள்ளி உணவுகள் உயர் ஊட்டச்சத்து மதிப்புகள் கொண்ட உயர் ஆற்றல் உணவுகளை இலவசமாக அல்லது சிக்கனமான விலையில் வழங்கப்படுகின்றன.[1]
பள்ளி உணவின் பன்கள் நாட்டுக்கு நாடு மாறுபடும். வளர்ந்த நாடுகளில் பள்ளி உணவு சத்தான உணவாக இருந்தாலும், வளரும் நாடுகளில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், அவர்களின் கல்வியைத் தொடரவும் ஊக்கமளிக்கிறது. வளரும் நாடுகளில், பள்ளி உணவுகள் பொருளாதார நெருக்கடியின் போது உணவுப் பாதுகாப்பை வழங்குகின்றன மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட பெமுதிர் அகவையர்களாக மாற உதவுகின்றன, இதனால் வறுமை மற்றும் பசியின் அளவை குறைக்க உதவுகிறது.
வரலாறு
[தொகு]முதல்முதலாக பள்ளியில் மதிய உணவு 1790 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள முனிச்சில் அமெரிக்காவில் பிறந்த இயற்பியலாளர் பெஞ்சமின் தாம்சன் (கவுண்ட் ரம்ஃபோர்ட் எனவும் அழைக்கப்படுகிறார்) அவர்களால் வழங்கப்பட்டது.தாம்சன் தனது ஆரம்ப நாட்களில் நியூ இங்கிலாந்தில் இருந்தார், ஆனால் அமெரிக்கப் புரட்சிப் போரின் போது ஒரு அரசவாதியாக அவநம்பிக்கை அடைந்து 1784 இல் இங்கிலாந்திற்குச் சென்றார். முனிச்சில், தாம்சன் ஏழை மக்களுக்கான நிறுவனத்தை நிறுவினார், இது ஜெர்மன் இராணுவத்திற்கான சீருடைகளை உருவாக்க பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரையும் வேலைக்கு அமர்த்தியது. அவர்களின் வேலைக்காக அவர்களுக்கு உணவும், உடைகளும் வழங்கப்பட்டன, குழந்தைகள் படிக்கவும், எழுதவும், எண்கணிதமும் கற்றுக் கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தாம்சன் இலண்டனில் ஒரு நாளைக்கு 60,000 பேருக்கு அன்னதானம் அளித்தார் [2][3] பெஞ்சமின் தாம்சன் ஏழைகளுக்கு நிறுவன ரீதியாக உணவளிப்பதில் முன்னோடியாக இருந்தார் மற்றும் ஐரோப்பிய ஏழைகளின் உணவில் உருளைக்கிழங்கை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராக இருந்தார்.[4] இரட்டை கொதிகலன், பேக்கிங் அடுப்பு, அழுத்தேனம், காழநீராக்கி ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். நீராவிக் கெண்டி, மற்றும் வணிக போறணை ஆகியன பள்ளி உணவு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.[2]
ஐக்கிய இராச்சியத்தில், 19 ஆம் நூற்றாண்டில் பள்ளி உணவு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் தேசிய பள்ளி உணவுக் கொள்கை 1941 இல் ஐக்கிய இராச்சியம் முழுவதும் வெளியிடப்பட்டது. பள்ளி மதிய உணவுகளுக்கான முதல் ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களை இந்தக் கொள்கையில் அமைந்திருந்தது, இதில் சரியான அளவு புரதம், கொழுப்பு மற்றும் கலோரிகள் அடங்கிய சமச்சீர் உணவு அவசியம் எனக் குறிப்பிடப்பட்டது.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ Aliyar, Ruzky; Gelli, Aulo; Hamdani, Salha Hadjivayanis (5 August 2015). "A Review of Nutritional Guidelines and Menu Compositions for School Feeding Programs in 12 Countries". Frontiers in Public Health 3: 148. doi:10.3389/fpubh.2015.00148. பப்மெட்:26301209.
- ↑ 2.0 2.1 The National School Lunch Program: Background and Development.
- ↑ History of Soybeans and Soyfoods in Austria and Switzerland (1781-2015): Extensively Annotated Bibliography and Sourcebook.
- ↑ School Lunch Politics: The Surprising History of America's Favorite Welfare Program.
- ↑ Evans, C. E. L.; Harper, C. E. (April 2009). "A history and review of school meal standards in the UK". Journal of Human Nutrition and Dietetics 22 (2): 89–99. doi:10.1111/j.1365-277X.2008.00941.x. பப்மெட்:19302115.