பள்ளி நூலகம்
பள்ளி நூலகம் (school library) அல்லது பள்ளி நூலக ஊடக மையம் என்பது பள்ளிக்குள் இருக்கும் ஒரு நூலகமாகும், இதனை மாணவர்கள், ஊழியர்கள் , பொதுமக்கள் அல்லது பெற்றோர்கள் பல்வேறு தகவல்களுக்காக அனுகலாம். பள்ளி நூலக ஊடக மையத்தின் குறிக்கோள், பள்ளிச் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் "நூல்கள் மற்றும் வாசித்தல், தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியனவற்றில் அனைவருக்கும் சமமான அணுகலை உறுதி செய்வதாகும்". [1] பள்ளி நூலக ஊடக மையம் அனைத்து வகையான ஊடகங்களையும் பயன்படுத்துகிறது. தானியங்கி முறையில் இயங்குகிறது, மேலும் தகவல் சேகரிப்பதற்காக இணையத்தையும் புத்தகங்களையும் பயன்படுத்துகிறது. [2] பள்ளி நூலகங்கள் பொது நூலகங்களிலிருந்து வேறுபட்டவை, ஏனெனில் அவை "பள்ளியின் பாடத்திட்டத்தை ஆதரிக்கும், விரிவுபடுத்தும் மற்றும் தனிப்பயனாக்கும் கற்றல் சார்ந்த ஆய்வகங்களாகவே செயல்படுகின்றன. பள்ளி நூலகம் பள்ளியில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களுக்கும் மையமாகவும் ஒருங்கிணைப்பு முகவராகவும் செயல்படுகிறது." [3]
அமெரிக்காவின் 19 மாநிலங்கள் மற்றும் ஒரு கனேடிய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 60 க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மூலம் பள்ளி நூலகங்கள் மாணவர்களின் சாதனைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இந்த ஆய்வுகளின் முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், தகுதிவாய்ந்த பள்ளி நூலக ஊடக நிபுணருடன் கூடிய பள்ளி நூலக ஊடகத் திட்டத்தை அணுகக்கூடிய மாணவர்கள் சமூக மற்றும் பொருளாதார அளவில் பின்தங்கி இருந்த போதிலும் வாசித்தல் மதிப்பீடுகளில் சிறப்பான திறனைப் பெற்றிருந்தனர். ஓஹியோவில்[4] நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 99.4% தங்கள் பள்ளி நூலகர்கள் மற்றும் பள்ளி நூலக ஊடக நிகழ்ச்சிகள் பள்ளித் தேர்வில் வெற்றிபெற உதவியது என்று நம்பினர்.
பள்ளி நூலகத்தின் பணியாளர்கள்
[தொகு]பல பள்ளிகளின், பள்ளி நூலகங்களில் நூலகர்கள், ஆசிரியர்-நூலக வல்லுநர்கள் அல்லது குறிப்பிட்ட நூலக அறிவியல் பட்டம் பெற்ற பள்ளி நூலக ஊடக வல்லுநர்கள் அல்லது ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பணிபுரிகின்றனர். சில அதிகார வரம்புகளில் அங்கு பணிபுரிவதற்கு, பள்ளி நூலகர்கள் குறிப்பிட்ட சான்றிதழ் மற்றும்/அல்லது கற்பித்தல் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும். [5]
குறிப்புகள் மற்றும் சான்றுகள்
[தொகு]- ↑ The goals of the school library program should support the mission and continuous improvement plan of the school district.Standards for the 21st Century Learner
- ↑ Morris, B. (2013). Administering the school library media center. Westport, CT: Libraries Unlimited. (p.32).
- ↑ Morris, 2013, p.32
- ↑ Todd, R., Kuhlthau, C., & OELMA. (2014). Student Learning through Ohio School Libraries : The Ohio Research Study. Available online at: "Archived copy". Archived from the original on 2004-08-29. பார்க்கப்பட்ட நாள் 2008-12-06.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Morris, 2004; Thomas, M. J. & Perritt, P.H. (2003, December 1). A Higher standard: Many states have recently revised their certification requirements for school librarians. School Library Journal. Available online at http://www.schoollibraryjournal.com/article/CA339562.html?industryid=47056