பாசுடன் பொதுப் பூங்கா
பாசுடன் பொதுப் பூங்கா | |
---|---|
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை | |
ஐ.அ. தேசிய வரலாற்று அடையாள மாவட்டம் | |
ஆர்லிங்டன் சாலையின் கிழக்கிலிருந்து பொதுப் பூங்கா; பின்னணியில் பாசுடனின் நிதிய மையம், 2007
| |
அமைவிடம்: | பாசுடன், மாசச்சூசெட்சு |
பரப்பளவு: | 24 ஏக்கர்கள் (97,000 m2)[1] |
கட்டியது: | 1837 |
நிர்வாக அமைப்பு: | Local |
தே.வ.இ.பவில் சேர்ப்பு: |
சூலை 12, 1972 (பாசுடன் காமனுடன் இணைந்து தேசிய வரலாற்று இடங்கள் பதிகையிலும்) February 27, 1987 (new, as NHL of Boston Public Garden alone)[2] |
வகை NHLD: | பெப்ரவரி 27, 1987[3] |
தே.வ.இ.ப குறிப்பெண் #: |
72000144 (original) 87000761 (new) |
பாசுடன் பொதுப் பூங்கா, அல்லது பரவலாக பொதுப் பூங்கா, மாசச்சூசெட்சின் பாசுடன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெரிய பூங்கா ஆகும். இது பாசுடன் காமனை அடுத்துள்ளது.
வரலாறு
[தொகு]1837இல் இந்தப் பொதுப் பூங்கா முன்னெடுக்கப்பட்டது. ஈகையாளர் ஓரேசு கிரே என்பார்[4] இங்கிருந்த நிலத்தை ஐக்கிய அமெரிக்காவின் முதல் பொது தாவரவியல் பூங்கா அமைக்கப் பயன்படுத்த விண்ணப்பித்தார். இந்த நிலத்தை விற்க பாசுடன் நகர மன்றம் எடுத்த முயற்சிகளை கிரே அரசியல் இயக்கங்கள் மூலம் போராடி இறுதியில் 1856இல் வெற்றி பெற்றார்.[5] இந்த நிலத்தை தாவரவியல் பூங்காவாகப் பயன்படுத்த ஏப்ரல் 26, 1856இல் மன்றதில் கொண்டுவரப்பட்ட சட்டம் 99 பேர் எதிர்வாக்களித்தும் நிறைவேற்றப்பட்டது.
அக்டோபர் 1859இல் ஆல்டர்மேன் கிரேன் இதற்கான வடிவமைப்பிற்கு ஒப்புதல் பெற்றார்.[6] அந்தாண்டு ஏரி கட்டமைக்கப்பட்டது; சுற்றிலும் தேனிரும்பு வேலி 1862 கட்டப்பட்டது. தற்போது ஏரியின் வடக்குப் பகுதியில் காணப்படும் தீவு துவக்கத்தில் தீபகற்பமாக இருந்தது. இந்தவிடம் காதலர்களுக்கு மிகவும் உகந்த இடமாக இருந்ததை விரும்பாத வனவியலாளர் ஜான் கால்வின், நிலத்துடன் இருந்த இணைப்பைத் துண்டித்துத் தீவாக்கினார்.[7]
24 ஏக்கர்கள் (97,000 m2) பரப்புள்ள உவர்ச் சதுப்பு நிலத்தில், ஜார்ஜ் எப். மீகெம் நிலக்காட்சியை வடிவமைத்தார். தடங்களையும் பூப்படுகைகளையும் நகரப் பொறியாளர் ஜேம்சு இசுலேடும் ஜான் கால்வினும் அமைத்தனர். பல நீரூற்றுகளும் சிலைகளும் கொண்ட திட்டம் உருவாக்கப்பட்டது. இங்கு நிறுவப்பட்ட முதல் சிலை எட்வர்டு எவரெட்டினுடையதாகும்; பூங்காவின் வட பகுதியில் வில்லியம் வெட்மோர் இசுடோரி என்பார் நவம்பர் 1867இல் இதனை அமைத்தார். தாமசு பால் வடிவமைத்த சியார்ச் வாசிங்டன் சிலை பூங்காவின் மேற்குப் பகுதியில் சூலை 3, 1869இல் திறக்கப்பட்டது. ஏரியின் நடுவிலுள்ள தொங்கு பாலம் 1867இல் கட்டப்பட்டது.
பாசுடன் நகர மேயர் அலுவலகம், நகரசபையின் பூங்கா துறை மற்றும் இலாபநோக்கற்ற பொதுப் பூங்கா நண்பர்கள் என்ற அமைப்பினர் இணைந்து பொதுப் பூங்காவை மேலாண்மை செய்தனர்.
1987இல் இது தேசிய வரலாற்று அடையாளமாக அறிவிக்கப்பட்டது.[1][3]
காட்சிப்பேழை
[தொகு]-
ஓரேசு கிரே, பாசுடன் பொதுப் பூங்காவிற்காக போராடியவர்
-
1901 குளிர்காலத்தில் பாசுடன் பொதுப் பூங்கா
-
சூலை 1915இல் வெண்டல் பிலிப்சு நினைவகத்தின் அர்ப்பணிப்பு விழா
-
லகூன் பாலம், 1989
-
பரப்புக்காட்சி, 2006
-
குதிரை மேலமர்ந்த சியார்ச் வாசிங்டன் சிலை
-
நுழைவுச் சின்னம், 2008
-
ஈதர் நினைவகம், 2008
-
வாத்துக் குட்டிகளுக்கு வழி விடுங்கள் என்ற சிறுவர் வரைகதையின் நாயகர்கள் பாசுடன் அடிப்பந்தாட்ட அணி ரெட் சாக்சு உடையில், அக்டோபர் 2013
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 James H. Charleton (November 1985), [[[:வார்ப்புரு:NRHP url/core]] National Register of Historic Places Inventory-Nomination: Boston Public Garden] (pdf), National Park Service
{{citation}}
: Check|url=
value (help) and வார்ப்புரு:NRHP url/corePDF (32 KB) - ↑ "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2007-01-23.
- ↑ 3.0 3.1 "Boston Public Gardens". National Historic Landmark summary listing. National Park Service. Archived from the original on 2012-09-29. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
- ↑ Horace Gray: Father of the Boston Public Garden
- ↑ Stevens p 345
- ↑ The New England magazine, Volume 24. p.346. New England Magazine Co., 1901
- ↑ Stevens p 347
மேற் படிப்பு
[தொகு]- "Boston Public Garden, as it should be". Gleason's Pictorial (Boston, Mass.) 4. 1853. http://archive.org/stream/gleasonspictoria04glea#page/137/mode/1up.
- Edwin G. Heath. From Round Marsh to Public Garden. The Bostonian, v.2, no.6, 1895.
வெளி இணைப்புகள்
[தொகு]- Friends of the Public Garden
- Public Garden. Fodors.com. May 22, 2005.
- The Swan Boats of Boston - The Public Garden பரணிடப்பட்டது 2005-04-04 at the வந்தவழி இயந்திரம். May 22, 2005.
- Photos of the Public Garden பரணிடப்பட்டது 2007-09-07 at the வந்தவழி இயந்திரம்
- CelebrateBoston: Boston Public Garden