பிரதீப் குமார் சின்கா
பிரதீப் குமார் சின்கா | |
---|---|
2017இல் சின்கா | |
இந்தியப் பிரதமரின் முதன்மை ஆலோசகர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 செப்டம்பர் 11 | |
நியமிப்பு | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
பிரதமர் | நரேந்திர மோதி |
31வது இந்திய அமைச்சரவைச் செயலாளர் | |
பதவியில் 2015 சூன் 13 – 2019 ஆகத்து 30 | |
நியமிப்பு | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
முன்னையவர் | அஜித் சிங் |
பின்னவர் | இராஜிவ் கௌபா |
இந்திய மின்துறை செயலாளர் | |
பதவியில் 2013 சூலை 1 – 2015 சூன் 1 | |
நியமிப்பு | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
இந்திய கப்பல் துறை செயலாளர் | |
பதவியில் 2012 பிப்ரவர் 29 – 2013 சூன் 31 | |
நியமிப்பு | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரதீப் குமார் சின்கா 18 சூலை 1955 தில்லி, இந்தியா[1] |
தேசியம் | இந்தியா |
முன்னாள் கல்லூரி | செயின்ட். ஸ்டீபன் கல்லூரி, தில்லி டெல்லி பொருளாதாரப் பள்ளி |
வேலை | இந்திய ஆட்சிப் பணியாளர் |
தொழில் | ஆட்சி அலுவலர் |
பிரதீப் குமார் சின்கா (Pradeep Kumar Sinha) (பிறப்பு: 1955 சூலை 18) இவர் இந்தியாவின் 31 வது இந்திய அமைச்சரவைச் செயலாளராக இருந்தவர். இவர் 1977 ஆண்டின் உத்தரப் பிரதேச இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இந்த நியமனத்திற்கு முன்னர் இவர் இந்தியாவின் மின்துறைச் செயலாளராக பணியாற்றினார். அதற்கு முன்னர் இந்திய கப்பல் துறைச் செயலாளராகவும் இருந்தார் .[2]
2019 ஆகத்து 30, அன்று பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு கடமைக்கான அதிகாரியாக சின்கா நியமிக்கப்பட்டார். 2019 செப்டம்பர் 11 அன்று , இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் பிரதமரின் பதவிக்காலத்துடன் அல்லது மேலதிக அறிவிப்பு வரும் வரை, எது முந்தையதோ அதனுடன் இணைந்திருக்கும் [3] .
கல்வி
[தொகு]சின்கா ஒரு பொருளாதாரப் பட்டதாரியாவார். மேலும் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் முதுதத்துவமானி பட்டத்தையும் பெற்றுள்ளார்.[4]
தொழில்
[தொகு]சின்கா இந்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசு இரண்டிலும் முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். முதன்மைச் செயலர் (நீர்ப்பாசனம்), வாரணாசி பிரிவு ஆணையர், உத்தரப் பிரதேச முதலீட்டு ஆணையர், நொய்டா பெருநகரின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி, கூடுதல் குடியிருப்பு ஆணையர் போன்றஆகிய முக்கிய பதவிகளில் சின்கா பணியாற்றியுள்ளார். ஆக்ரா மற்றும் ஜான்பூர் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித்தலைவர், உத்தராஞ்சல் மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் மற்றும் உத்தரபிரதேச அரசாங்கத்தில் மீரட் மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[4] மேலும் இந்திய அமைச்சரவைச் செயலாளராகவும், மத்திய மின்துறைச் செயலாளராகவும், கப்பல் துறைச் செயலாளராகவும், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் மற்றும் நிதி ஆலோசகராகவும், இந்திய அரசாங்கத்தில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் இணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் .
கப்பல் துறைச் செயலாளர்
[தொகு]2012 பிப்ரவரியில் பிரதம மந்திரி தலைமையிலான நியமனக் குழுவால் மத்திய கப்பல் துறைச் செயலாளராக சின்கா நியமிக்கப்பட்டார். இவர் 2012 பிப்ரவரி 1, அன்று பதவியேற்றார்.[4] 2013 சூன் 31, அன்று அதிலிருந்து வெளியேறினார்.
மின்துறைச் செயலாளர்
[தொகு]சின்கா 2013 சூன் மாதம் நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவால் இந்திய அரசின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[5] 2013 சூலை 1 அன்று பதவியேற்றார்.[4] பின்னர் இந்திய அமைச்சரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டு 2015 சூன் 1 அன்று அதிலிருந்து வெளியேறினார். .
அமைச்சரவைச் செயலாளர்
[தொகு]சின்கா 2015 மே 29 அன்று இந்திய அமைச்சரவை செயலாளராக அஜித் சேத்திற்கு பிறகு நியமிக்கப்பட்டார்.[6][7][8][9] சேத் ஓய்வு பெறும் வரை அமைச்சரவை செயலகத்தில், செயலாளர் பதவியில், சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார்.[10] 2015 சூன் 13 அன்று அமைச்சரவை செயலாளராக முறையாக பொறுப்பேற்றார்.[11][12]
2016 செப்டம்பரில் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிக்கான வேட்பாளர்களை குறுகிய பட்டியலுக்காக அமைச்சரவை செயலாளர் பி. கே. சின்கா தலைமையிலான தேர்வுக் குழுவை மத்திய அரசு அமைத்தது. 2016 செப்டம்பர் 4, முதல் அமல்படுத்தப்பட்டு உர்சித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2017 25 ஏப்ரல் அன்று, சின்காவுக்கு அமைச்சரவை செயலாளராகப் பணிபுரிய ஓராண்டு நீட்டிப்பு கிடைத்தது.[13][14][15][16] 2018 மே மாதம் சின்காவுக்கு நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவால் இன்னொரு நீட்டிப்பு வழங்கப்பட்டது .
அமைச்சரவை செயலாளராக இருந்த காலத்தில், சின்கா, இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக பரவலாக கருதப்பட்டார்.[8][17][18]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Gradation list of Uttar Pradesh Cadre IAS officers - 2016" (PDF). Department of Appointment and Personnel, உத்தரப் பிரதேச அரசு. p. 13. Archived (PDF) from the original on 21 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
- ↑ "Pradeep Kumar Sinha appointed new Cabinet secretary". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 May 2015. http://timesofindia.indiatimes.com/india/Pradeep-Kumar-Sinha-appointed-new-Cabinet-secretary/articleshow/47470553.cms. பார்த்த நாள்: 13 August 2017.
- ↑ "Pradeep Kumar Sinha appointed Advisor to PM". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 11 September 2019. https://www.business-standard.com/article/news-ani/pk-sinha-appointed-principal-advisor-to-pm-119091100691_1.html. பார்த்த நாள்: 11 September 2019.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "P.K. Sinha - Executive Sheet". Department of Personnel and Training, இந்திய அரசு. பார்க்கப்பட்ட நாள் 13 August 2017.
- ↑ "Government appoints PK Sinha as power secretary". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. New Delhi. 28 June 2013. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
- ↑ "Shri P.K. Sinha appointed Cabinet Secretary". Press Information Bureau of India. 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
- ↑ "P.K. Sinha appointed Cabinet Secretary". 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
- ↑ 8.0 8.1 "PK Sinha to be next cabinet secretary: All you should know about India's most powerful bureaucrat". Firstpost. 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
- ↑ "PK Sinha appointed cabinet secretary by Narendra Modi". தி எகனாமிக் டைம்ஸ். 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
- ↑ "Pradeep Kumar Sinha Appointed as New Cabinet Secretary". என்டிடிவி. 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
- ↑ "Cabinet secretary Pradeep Kumar Sinha takes charge". Livemint. HT Media Ltd. 13 June 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
- ↑ "Pradeep Kumar Sinha assumes charge as cabinet secretary". NewsX. 13 June 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
- ↑ Langa, Mahesh (25 April 2017). "Cabinet Secretary Sinha gets extension". பார்க்கப்பட்ட நாள் 19 August 2017.
- ↑ "Cabinet Secretary P K Sinha gets one year extension". Daily Excelsior. 24 April 2017. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
- ↑ "Cabinet Secretary Pradeep Kumar Sinha Gets 1-Year Extension". என்டிடிவி. 24 April 2017. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
- ↑ "Cabinet Secretary P K Sinha gets one year extension". Press Trust of India. New Delhi. 24 April 2017. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
- ↑ "From Power Secretary to the most powerful bureaucrat". 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
- ↑ Unnithan, Sandeep (13 April 2017). "The game changers". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]