உள்ளடக்கத்துக்குச் செல்

பிளைண்ட் சான்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளைண்ட் சான்ஸ்Blind Chance
இயக்கம்கிறிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி
தயாரிப்புஜேசக் சில்லிகோவ்ஸ்கி
கதைகிறிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி
இசைவோஜீக் கில்லர்
நடிப்புபோகுசுவா லிண்டா
ஒளிப்பதிவுகிர்ஷ்சிஃப்ஃப் பால்குல்ஸ்கி
படத்தொகுப்புElżbieta Kurkowska
விநியோகம்கினோ இன்டர்நேஷனல் (அமெரிக்கா)
வெளியீடு10 சனவரி 1987
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுபோலந்து
மொழிபோலிஷ்

பிளைண்ட் சான்ஸ் (Blind Chance) (போலிய: Przypadek) என்பது ஒரு போலந்து திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் கிறிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி ஆவார். இப்படத்தில் போகுஸ்லா லிண்டா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.   இந்தப் படம் மூன்று தனித்தனி கதைகளைக் கொண்டதாக உள்ளது. ஒரு தொடருந்தைப் பிடிக்க ஓடும் நாயகனின் வாழ்க்கைப் பாதையானது சூழ்நிலைகளால் எவ்வாறெல்லாம் மாறுதலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது என மூன்று கதைகளாக காட்டப்பட்டுள்ளது.[1]  1981 ஆம் ஆண்டு படமாக்கப்பட்ட இந்தப் படமானது, சில காரணங்களால் பல ஆண்டுகள் கழித்து போலந்தில் 1987 சனவரி 10 அன்று தாமதமாக வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

[தொகு]
படத்தில் முதன்மைப் பாத்திரத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் லாட்ஸ் பேப்ரிக்கனா தொடருந்து  நிலையம்.

விடேக் என்வர் ஒரு மருத்துவ மாணவர். அவர் தன் தந்தையின் கட்டாயத்தின் பேரில் மருத்துவம் படித்து வருகிறார். தன் மருத்துவ படிப்பைத் தொடர வார்சா நகரத்துக்கு செல்ல போலந்தில் உள்ள லாட்ஸ் பேப்ரிக்கனா தொடருந்து நிலையத்துக்கு தொடருந்தைப் பிடிக்கச் செல்கிறார். இந்தச் சூழலில் இயக்குநர் விடேகின் கதையில் மூன்று சாத்தியங்களை உருவாக்குகிறார். அதன்வழியாக மூன்று கதைகள் உருவாகின்றன.

முதலாவதில், நடைமேடையில் இருந்து புறப்பட்டுவிட்ட தொடருந்தை ஓடிச்சென்று விடேக் பிடித்து ஏறிவிடுகிறார். அந்தத் தொடருந்தில் அவருடன் பயணிக்கும் ஒரு பொதுவுடமைத் தோழரின் கருத்துகளால் கவரப்பட்டு, பொதுவுடமை இயக்கத்தில் சேர முடிவெடுக்கிறார். இரண்டாவது சாத்தியத்தில் தொடருந்தை தவறவிடும் விடேக் அங்கு ஏற்படும் குழப்பத்தினால் காவல் துறையால் தண்டிக்கப்பட்டு, பொதுவுடைவாதிகளை எதிர்க்கும் போராளியாக மாறுகிறார். மூன்றாவது சாத்தியத்தில் தொடருந்தை தவறவிட்டாலும் அவரது தந்தையின் விருப்பப்படி மருத்துவராக ஆகும் விட்டேகின் வாழ்வு ஒரு வானூர்தி விபத்தினால் முடிவுக்கு வருகிறது.

விருதுகள்

[தொகு]
  • 1987 போலந்து திரைப்பட விழாவில் வெள்ளி சிங்க விருது: கிறிஸ்டோப் கீஸ்லோவ்ஸ்கி
  • 1987 பேலந்து திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது: போகுஸ்லா லிண்டா[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Blind Chance". Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் 14 February 2012. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Awards for Blind Chance". Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் 14 February 2012. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளைண்ட்_சான்ஸ்&oldid=3850704" இலிருந்து மீள்விக்கப்பட்டது