புளூஸ்கை
புளூஸ்கை (Bluesky) என்பது பரவலாக்கப்பட்ட சமூக வலைப்பின்னல் நெறிமுறையை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகும். டுவிட்டரால் ஓர் இலாப நோக்கற்ற முன்முயற்சியாக ஒழுங்கமைக்கப்பட்டது. இது 2019 இல் அறிவிக்கப்பட்டது. 2022இல் ஆராய்ச்சிக் கட்டத்தில் உள்ளது. இதில் டுவிட்டரின் கட்டுப்படுத்தும் பங்குகள் எதுவும் இல்லை. இது முழுவதுமாக புளூஸ்கை குழுவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. [1]
விளக்கம்
[தொகு]புளூஸ்கை என்பது பரவலாக்கப்பட்ட சமூக வலைப்பின்னல் நெறிமுறையை உருவாக்குவதற்கான ஒரு முன்முயற்சியாகும், அதாவது பல சமூக வலைப்பின்னல்கள், ஒவ்வொன்றும் மற்ற சமூக வலைப்பின்னல்களுடன் திறந்த தரநிலை மூலம் தொடர்பு கொள்ளலாம். நெறிமுறையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சமூக வலைப்பின்னலும் ஒரு "செயலி" ஆகும்.
வளர்ச்சி
[தொகு]டுவிட்டரின் முதன்மை செயல் அலுவலர் ஜேக் டோர்சி முதன்முதலில் ப்ளூஸ்கை பற்றிய அறிவிப்பினை 2019 இல் டுவிட்டரில் அறிவித்தார். நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பராக் அகர்வால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணிக்குழு உறுப்பினர்களை அழைத்தார். பரவலாக்கப்பட்ட வலைப்பின்னல்களான மாஸ்டோடன் மற்றும் ஆக்ட்விட்டி பப்பின் பிரதிநிதிகளுடன் பணியாளர்களுடன் இந்தக் குழு விரிவடைந்தது. எலமெண்ட் சேட்மென்பொருள் மூலம் குழு ஒருங்கிணைக்கப்பட்டது. டுவிட்டர், தொழில்நுட்ப மதிப்பாய்வை உருவாக்க ஜே கிராபரை நியமித்தது. [2] 2021 இல் ப்ளூஸ்கை திட்டத் தலைவராக அவர் பணியமர்த்தப்பட்டார்.
டுவிட்டரின் பிளாக்செயின் பிரிவு,நவம்பர், 2021இல் புதிதாக அறிவிக்கப்பட்டது, அதில் புளூஸ்கையுடன் இணைந்து செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. [3]
மார்ச் 2022 இல், புளூஸ்கை முதல் மூன்று பணியாளர்களது பெயரை அறிவித்தது. முன்பு கூகுள் மற்றும் டுவிட்டரில் பணியாற்றிய ஆரோன் கோல்ட்மேன், பாதுகாப்புப் பொறியாளராக பணியமர்த்தப்பட்டார். பால் ஃப்ரேஸி மற்றும் டேனியல் ஹோல்ம்கிரென் ஆகியோர் நெறிமுறைப் பொறியாளர்களாக பணியமர்த்தப்பட்டனர். [4]
ஏப்ரல் 15, 2022 அன்று, திட்ட நிரலாளர்கள் தங்களது பணிகளை ஆரம்பித்ததாக ஜேக் டோர்சி ஒப்புக்கொண்டார். [5]
ஏப்ரல் 26, 2022 அன்று, புளூஸ்கை ஓர் அறிக்கையை வெளியிட்டது, அதில் எலான் மசுக் டுவிட்டரை கையகப்படுத்தியதன் மூலம் இந்தத் திட்டமானது பாதிக்கப்படாது என்றும் பிப்ரவரி முதல் இது பொதுப்பயன்பாட்டிற்காக சுயாதீனமாக இயங்கும் என்று கூறினார். இது புளூஸ்கை, பங்குதாரர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயம் இல்லாமல், தங்கள் பணியில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை உறுதிசெய்தது. [6]
சான்றுகள்
[தொகு]- ↑ "What Elon Musk's Twitter Takeover Means for Developers". The New Stack (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-30. பார்க்கப்பட்ட நாள் 2022-05-01.
- ↑ Matney, Lucas (2021-08-16). "Twitter taps crypto developer to lead 'bluesky' decentralized social network effort". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on September 6, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.
- ↑ Lyons, Kim (2021-11-10). "Twitter is launching a dedicated crypto team, part of its push toward decentralization". The Verge (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-16.
- ↑ Dang, Sheila (2022-03-31). "Social media interoperability project Bluesky names first employees" (in en). Reuters. https://www.reuters.com/business/media-telecom/social-media-interoperability-project-bluesky-names-first-employees-2022-03-31/.
- ↑ "Bluesky Funding to Be Reviewed If Twitter Owners Change: Dorsey". Bloomberg (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-05-11.
- ↑ "Bluesky Unaffected by Elon Musk Twitter Takeover". Coinspeaker (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-26. பார்க்கப்பட்ட நாள் 2022-04-26.
மேலும் படிக்க
[தொகு]- Palmer, Annie (திசம்பர் 11, 2019). "Twitter CEO Jack Dorsey has an idealistic vision for the future of social media and is funding a small team to chase it". CNBC (in ஆங்கிலம்). Archived from the original on மார்ச்சு 29, 2021. பார்க்கப்பட்ட நாள் செப்டெம்பர் 6, 2021.
- Robertson, Adi (சனவரி 21, 2021). "Twitter's decentralized social network project takes a baby step forward". The Verge (in ஆங்கிலம்). Archived from the original on ஆகத்து 19, 2021. பார்க்கப்பட்ட நாள் செப்டெம்பர் 6, 2021.