உள்ளடக்கத்துக்குச் செல்

பெஞ்சமின் செக்கோவ்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஞ்சமின் செக்கோவ்சுகி
பிறப்பு1881
சென் பீட்டர்சுபெர்கு
இறப்பு20 மார்ச்சு 1975
பணிவானியல் வல்லுநர்
வேலை வழங்குபவர்
  • பாரிஸ் விண்காணகம்

பெஞ்சமின் செக்கோவ்சுகி (Benjamin Jekhowsky, உருசியம்: Вениамин Павлович Жеховский, பிறப்பு: 1881, புனித பீட்டர்சுபர்கு (உருசியா); இறப்பு: 1975, என்கவுசே-லெசு-தெர்மசு (பிரான்சு)) உருசிய-பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் இவர் ஓர் இருப்புவழித் தட்த்துறையின் அலுவலருக்கு மகனாக புனித பீட்டர்சுபர்கில் பிறந்தார்.

இவர் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பிறகு 1912 முதல் பாரீசு வான்காணகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். பின்னர் இவர் பிரான்சின் குடியேற்ர நாடான அல்ஜீரியாவில் இருந்த அல்ஜீயெர்சு வான்காணகத்தில் சேர்ந்து வான்கோள இயக்கவியலில் புலமை பெற்றார். இவர் 1934ஆம் ஆண்டுக்குப் பிறகு பெஞ்சமின் தெ ஜெகோவ்சுகி எனும் பெயரில் அறிவியல் கட்டுரைகளை எழுதினார். சிறுகோள் மையம் இவரது கண்டுபிடிப்புகளை "பி. ஜெகோவ்சுகி" ) எனும் பெயரில் பதிவு செய்துள்ளது. இக்கால ஆங்கிலத்தில் இவரது பெயர் இழ்செகோவ்சுகி என வழங்குகிறது.

இவர் பன்னிரு சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.[1] இவர் 190 க்கும் மேற்பட்ட வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். குறுங்கோள் 1606 இழ்செகோவ்சுகி இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.[2]

கண்டுபிடித்தகுறுங்கோள்கள்: 12 ;[1]
953 பைன்லேவா ஏப்பிரல் 29, 1921 953
976 பெஞ்சமினா மார்ச்சு 27, 1922 976
977 பிலிப்பா ஏப்பிரல் 6, 1922 977
988 அப்பெல்லா நவம்பர் 10, 1922 988
1013 தோம்பெக்கா ஜனவரி 17, 1924 1013
1017 ஜேக்குவிலின் பிப்ரவரி 4, 1924 1017
1037 தேவித்வெல்லா அக்தோபர் 29, 1924 1037
1040 கிளம்ப்கியா ஜனவரி 20, 1925 1040
1093 பிரெதா ஜூன் 15, 1925 1093
1181 இலிலித் பிப்ரவரி 11, 1927 1181
1328 தேவோதா அக்தோபர் 21, 1925 1328
3881 தவுமெர்குவா நவம்பர் 15, 1925 3881

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 June 2016. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
  2. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (1606) Jekhovsky. Springer Berlin Heidelberg. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 18 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்சமின்_செக்கோவ்சுகி&oldid=2734517" இலிருந்து மீள்விக்கப்பட்டது