பென்சோகுவானமைன்
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
6-பீனைல்-1,3,5-டிரையசீன்-2,4-டையமீன் | |
வேறு பெயர்கள்
டையமினோ-6-பீனைல்-1,3,5-டிரையசீன்
| |
இனங்காட்டிகள் | |
91-76-9 | |
ChEMBL | ChEMBL337319 |
ChemSpider | 6797 |
EC number | 202-095-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7064 |
வே.ந.வி.ப எண் | XY700000 |
| |
UNII | B9E2Q3VTUB |
பண்புகள் | |
C9H9N5 | |
வாய்ப்பாட்டு எடை | 187.21 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 1.42 கி செ.மீ−3 |
உருகுநிலை | 227–228 °C (441–442 °F; 500–501 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H331, H332, H412 | |
P261, P264, P270, P271, P273, P301+312, P304+312, P304+340, P311, P312, P321, P330, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பென்சோகுவானமைன் (Benzoguanamine) என்பது (CNH2)2(CC6H5)N3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெலமீன் சேர்மத்துடன் இச்சேர்மம் தொடர்பு கொண்டுள்ளது. ஆனால் அதிலுள்ள ஓர் அமினோ குழு பீனைல் குழுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும். மெலமீன் பிசின்கள் தயாரிப்பில் பென்சோகுவானமைன் பயன்படுத்தப்படுகிறது. மெலமீனைப் போல அல்லாமல் இது ஒரு குறுக்கிணைப்பி அல்ல. பென்சோ முன்னொட்டு வரலாற்றுடன் தொடர்பு கொண்டதாகும். இச்சேர்மத்தில் பென்சோ குழு இடம்பெறவில்லை ஆனால் பீனைல் குழு இடம்பெற்றுள்ளது. அசிட்டோகுவானமைன் சேர்மம் பென்சோகுவானமைனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது [1]. சயனோகுவானிடினுடன் பென்சோநைட்ரைலைச் சேர்த்து ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தினால் பென்சோகுவானமைன் தயாரிக்க முடியும்[2]
- (H2N)2C=NCN + PhCN → (CNH2)2(CPh)N3
பாதுகாப்பு
[தொகு]எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கப்படும்போது பென்சோகுவானமைனின் உயிர் கொல்லும் அளவு கிலோகிராமுக்கு 1470 மி.கி ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amino Resins". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2012). Wiley-VCH. DOI:10.1002/14356007.a02_115.pub2.
- ↑ J. K. Simons, M. R. Saxton (1953). "Benzoguanamine". Org. Synth. 33: 13. doi:10.15227/orgsyn.033.0013.