உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"நான் உங்களைக்கண்டு பெருமை கொள்கிறேன்!", அமெரிக்க கடற்படை வெளியீடு, 1944 ஜான் விட்கோம்பு (Jon Whitcomb).
புனித ஆம்புரோஸின் உயிர்வடிவ சிலை, முன் மிலான் பல்கலைக்கழகம், இத்தாலி.வார்ப்புரு:Relevance note[தெளிவுபடுத்துக]

பெருமை (pride) என்ற உணர்வு ஒருவர் தான் நினைத்ததனையோ அல்லது அதற்கும் மேலான ஒன்றையோ அடைந்து விட்டால் அவரது வெற்றி தரும் இன்பம். வெற்றி கண்டதனால் உண்டாகும் பல உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் (வானில் பறப்பது போலத்தோன்றும் எண்ணங்கள் உட்பட) உள்ளடக்கியதாகும்.

ஒருவர் பெருமை கொள்ளும் அளவினை வைத்து ஒருவரின் சமூக நிலையைக்குறிக்க இயலும் என்று சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்[1].

நன்மை தரும் நேர்மறை

[தொகு]

ஒரு சில செயல்களைச் செய்துவிட்டு வெற்றி பெற்ற திருப்தியின் காரணத்தினால் பின்நோக்கிப் பார்த்து தன்பால் உள்ள நம்பிக்கையை கூட்டுதல் நன்மை பயக்கும். பெருமை என்பது ஒருவர் உபயோகிக்கும் சொற்றொடரிலிருந்து இன்பம் மற்றும் சந்தோசத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட இயலும்[2].

நன்மை அளிக்கா எதிர்மறை

[தொகு]

ஒருவர் தன்பால் கொண்ட கருத்தினை மெருகேற்றுவது. இதனால் தான் தன்னைச் சுற்றியிருப்போரை விடவும் அதிகம் சாதித்ததாக எண்ணிப் பெருமிதம் கொண்டு, மற்றோரை மதிக்காதிருத்தல். தன்னைத்தானே புகழ்வது நன்மையெனினும் அதனையே கடமையாக எப்போதும் செய்து கொண்டிருத்தல் நல்லதில்லை.

பெருமை என்பது உண்மைக்குப் புறம்பாக தற்புகழ்ச்சி என்றும் கண்டறிந்துள்ளனர்[3].

வேறு பெயர்கள்

[தொகு]
  1. பெருமிதம்
  2. தற்பெருமை
  3. பாராட்டு
  4. தன்சிறப்பினை உணர்தல்

மேலும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Shariff AF, Tracy JL. (2009). Knowing who's boss: implicit perceptions of status from the nonverbal expression of pride. Emotion. 9(5):631–9. PubMed
  2. Sullivan, GB (2007). Wittgenstein and the grammar of pride: The relevance of philosophy to studies of self-evaluative emotions. New Ideas in Psychology. 25(3). 233–252 http://dx.doi.org/10.1016/j.newideapsych.2007.03.003
  3. "Est autem superbia amor proprie excellentie, et fuit initium peccati superbia."[1] பரணிடப்பட்டது 2008-11-05 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமை&oldid=3418079" இலிருந்து மீள்விக்கப்பட்டது