பேச்சு:துருவ ஒளி
நல்ல ஒரு தலைப்பைத் துவங்கியுள்ளீர்கள். நன்றி கலை!--சிவக்குமார் \பேச்சு 07:46, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
- நன்றி சிவகுமார். ஏற்கனவே அறிந்திருந்த விதயங்களைக் கொண்டு இந்தப் பக்கத்தை ஆரம்பித்தேன். ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள தகவல்களை மொழிபெயர்ப்பதன் மூலம் இந்த கட்டுரையை மேலும் விரிவாக்கம் செய்யலாம்.
- பல சொற்களை தமிழில் மொழி பெயர்ப்பதிலுள்ள சிரமத்தால் விருப்பப்படும் அளவிற்கு இங்கே பங்களிக்க முடியாமலுள்ளது. --கலை 21:23, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
- கலை, மிக அருமையான ஒரு கட்டுரையை எழுதியுள்ளீர்கள்! பாராட்டுகள்! எச்சொற்களை மொழிபெயர்ப்பதில் இடர் உள்ளது என்று இங்கு பேச்சுப்பக்கத்தில் இடுங்கள் நானோ வேறு யாரேனுமோ வந்து உதவக்கூடும். --செல்வா 17:54, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- பாராட்டுக்களுக்கு நன்றி செல்வா. இனிமேல் சொற்களுக்கு ம்ழிபெயர்ப்பு தேவைப்படும்போது, நிச்சயமாக இங்கே அதைக் குறிப்பிடுகின்றேன். மேலும் மற்றவர்களும் இந்தப் பக்கத்தை மேம்படுத்துவார்கள்தானே :).--கலை 08:43, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
- கலை, மிக அருமையான ஒரு கட்டுரையை எழுதியுள்ளீர்கள்! பாராட்டுகள்! எச்சொற்களை மொழிபெயர்ப்பதில் இடர் உள்ளது என்று இங்கு பேச்சுப்பக்கத்தில் இடுங்கள் நானோ வேறு யாரேனுமோ வந்து உதவக்கூடும். --செல்வா 17:54, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
தலைப்பு
[தொகு]தலைப்பை வடமுனை ஒளி என்றோ வடமுனை ஒளிகோலம் என்றோ மாற்றினால் நன்றாக இருக்கும். --செல்வா 17:55, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- நான் எங்கேயோ பார்த்ததை தலைப்பாக வைத்தேன். நீங்கள் ”வடமுனை ஒளிக்கோலம்” என்று மாற்றுவது பொருத்தமாக இருக்குமெனக் கருதினால் அப்படியே மாற்றலாம். --கலை 08:43, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
ஒரு தகவல்
[தொகு]வடமுனையில் (Arctic) தோன்றுவது Aurora Borealis; தென்முனையில் (Antarctic) தோன்றுவது Aurora Australis. Tromsø, Abisko in Swedish Lapland, Luosto in Northern Finland, Þingvellir National Park, Denali and the Yukon Territory in Alaska, Lake Superior in Ontario, Kola Peninsula in Northern Russia, Faroe Island archipelago ஆகிய இடங்கள் வடதுருவ ஒளியை காண்பதற்கு வாய்ப்புள்ள இடங்களாக கருதப்படுகின்றன. - Uksharma3 (பேச்சு) 02:59, 7 சனவரி 2014 (UTC)
தலைப்பு மாற்றம்
[தொகு]இந்தக் கட்டுரை வடமுனையில் நிகழும் தோற்றப்பாட்டை மட்டுமல்லாமல், தென்முனை தோற்றப்பாட்டையும் சேர்த்தே குறிப்பதாலும், Aurora என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டிருப்பதாலும், இதற்கு வேறு பொருத்தமான தலைப்பிட வேண்டும் என்று தோன்றுகின்றது. தமிழ் விக்சனரியில் Aurora துருவ ஒளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கருத்துக்களைக் கூறினால், கட்டுரையை பொருத்தமான தலைப்புக்கு நகர்த்தலாம்.--கலை (பேச்சு) 11:05, 7 சனவரி 2014 (UTC)
- துருவ ஒளி --Anton·٠•●♥Talk♥●•٠· 11:34, 7 சனவரி 2014 (UTC)
- துருவம் தமிழ்ச் சொல் மாதிரித் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 12:04, 7 சனவரி 2014 (UTC)
- சென்னை பல்கலைகழக அகராதியில் வடதுருவம், தென்துருவம் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. இங்கே பார்க்கவும். அச்சொல் தொடர்பான மேலும் தகவல்கள் இங்கே
இந்தப் பக்கத்தையும் பார்க்கவும்.
Aurora = துருவ ஒளி, [aurora borealis = வடதுருவ ஒளி, aurora australis = தென்துருவ ஒளி
விக்கி ஆங்கில கட்டுரையின் மூன்றாம் நான்காம் பந்திகளில் இரண்டும் தெளிவாக பிரித்துக் கூறப்பட்டுள்ளது.
கட்டுரைக்கு துருவ ஒளி என்று பெயரிடலாம் என்பது என் பணிவான கருத்து. கட்டுரையின் முதலாவது பந்தி திருத்தி எழுதப் பட வேண்டும். Aurora Borealis, aurora australis என்பனவே விஞ்ஞானப் பெயர்கள். Celestial Phenomenon என்பது வான நிகழ்வு (வானத்தில் நிகழ்வது) என பொருள்படும். - Uksharma3 (பேச்சு) 16:28, 7 சனவரி 2014 (UTC)- துருவ ஒளி (Aurora அல்லது northern/southern polar lights) என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றம் உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒளித்தோற்றத்துக்குரிய விஞ்ஞானப் பெயர்கள் Aurora Borealis - வடதுருவ ஒளி, aurora australis - தென்துருவ ஒளி என்பவையாகும்.
இப்படி எழுதினால் தகவல் சரியாக இருக்கும் என்பது என் எண்ணம். Kanags கருத்துப்படி துருவம் என்பதற்கு வேறு சொல் பயன்படுத்தினால் துருவ என்று வரும் இடங்களில் அந்தச் சொல்லை பயனபடுத்தலாம். Uksharma3 (பேச்சு) 17:08, 7 சனவரி 2014 (UTC)
- துருவ ஒளி (Aurora அல்லது northern/southern polar lights) என்பது வட, தென் துருவங்களை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒரு அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றம் உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒளித்தோற்றத்துக்குரிய விஞ்ஞானப் பெயர்கள் Aurora Borealis - வடதுருவ ஒளி, aurora australis - தென்துருவ ஒளி என்பவையாகும்.
இந்தக் கட்டுரையை நான் ஆரம்பித்தபோது Northern light என்ற ஆங்கிலத் தலைப்பிற்குப் பொருத்தமாகவே, வடமுனை ஒளியை மட்டுமே கருத்தில் கொண்டு எழுத ஆரம்பித்தேன். அதனால்தான் கட்டுரைக்கு அந்தப் பெயரை வைத்தோம். பின்னர், கட்டுரை விரிவாக்கத்தின்போது, அது தென்முனை ஒளியையும் சேர்த்துக்கொண்டது. அதனால் தற்போது கட்டுரையின் தலைப்பை மாற்ற வேண்டி உள்ளது. என்ன தலைப்பை வைக்கலாம் என்பதை முடிவு செய்த பின்னர், அதற்கேற்ப கட்டுரையில் முறையான திருத்தங்கள் செய்து மாற்றியமைக்கலாம் என்பதாலேயே தற்போதைக்கு மாற்றம் எதையும் செய்யவில்லை. தலைப்பைச் சரியாகத் தீர்மானித்ததும், கட்டுரையில் அதற்கேற்ப பெயர் மாற்றங்களைச் செய்யலாம்.
துருவம் என்பதையே பயன்படுத்தலாமா, அல்லது அதற்கு ஈடான வேறு நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ளனவா என்பதை யாரும் அறிந்தவர்கள் கூறினால், அதன்படி மாற்றலாம். வடதுருவம், தென்துருவம் என்பவையும் பரவலான பயன்பாட்டிலுள்ள சொற்களே என நினைக்கின்றேன். துருவம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டால், துருவ ஒளி / துருவ ஒளிக்கோலம் என்பவற்றையும் யோசிக்கலாம்.
Uksharma! நீங்களே கட்டுரையில் மாற்றங்களைச் செய்யலாம். தவறாக இருப்பவற்றைத் திருத்தி எழுதலாம். கட்டுரையை விரிவாக்கினாலும் மகிழ்ச்சிதான். நன்றி.--கலை (பேச்சு) 22:22, 7 சனவரி 2014 (UTC)
- உரையாடலில் உள்ளபடி கட்டுரையின் தலைப்பையும், உள்ளடக்கத்தையும் மாற்றியிருக்கின்றேன்.--கலை (பேச்சு) 14:22, 20 மே 2014 (UTC)
துருவம் என்பது வடமுனை, தென் முனைக்குப் பொதுவான சொல் என முன்னர்க் கூறப்பட்டது. துருவம் என்பது முனைதான். நிலமுனை என்பதும் துருவம் என்பதும் ஒன்றெனக் கொள்ளலாம் (துருவ என்பது வடமீன் எனக்குறிப்பிடும் norhtern pole star ஐக் குறிக்கவும் பயன்படும் சொல்). வடமுனை ஒளிக்கோலத்தைத் தமிழில் வடந்தைத்தீ எனக் குறிப்பிட்டதாக நூற்சுட்டுடன் காட்டுகின்றது செந்தமிழ்ப் பேரகரமுதலி. [காண்க: http://www.tamilvu.org/library/ldpam/ldpam08/ldpam081/images/ldpam081155.gif ] (சுடர்ந்தெரி வடந்தைத் தீ)ஆனால் அதுபோல் தென்தீ என்னும் சொல்வரலாறு இருப்பதாகத் தெரியவில்லை. வடந்தைத்தீ, தென்முனைத்தீ, முனைத்தீ என வழங்கலாம் அல்லது வடந்தையொளி, தென்முனை ஒளி, முனையொளி என்றும் வழங்கலாம். --செல்வா (பேச்சு) 23:36, 20 மே 2015 (UTC)
வடந்தைத்தீ எனப் பெயர் மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 03:20, 7 நவம்பர் 2023 (UTC)