தங்கம்
பொன் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
79Au
| ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
உலோக மஞ்சள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | பொன், Au, 79 | |||||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | தாண்டல் உலோகங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 11, 6, d | |||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
196.966569(4) | |||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Xe] 4f14 5d10 6s1 2, 8, 18, 32, 18, 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 19.30 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 17.31 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 1337.33 K, 1064.18 °C, 1947.52 °F | |||||||||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 3129 K, 2856 °C, 5173 °F | |||||||||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 12.55 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 324 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 25.418 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | -1, 1, 2, 3, 4, 5 (அம்போடெரிக் ஒக்சைட்) | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 2.54 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் | 1வது: 890.1 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
2வது: 1980 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 144 பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 136±6 pm | |||||||||||||||||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 166 பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | lattice face centered cubic | |||||||||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | diamagnetic | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) 22.14 nΩ·m | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 318 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (25 °C) 14.2 µm·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (அ.வெ.) 2030 மீ.செ−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
இழு வலிமை | 120 MPa | |||||||||||||||||||||||||||||||||||||||
நழுவு தகைமை | 27 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||
பரும தகைமை | 180 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் | 0.44 | |||||||||||||||||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
2.5 | |||||||||||||||||||||||||||||||||||||||
விக்கெர் கெட்டிமை | 216 MPa | |||||||||||||||||||||||||||||||||||||||
பிரிநெல் கெட்டிமை | 25 HB MPa | |||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7440-57-5 | |||||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: பொன் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ள பார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும். தங்கம் Au என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 79. இதன் அடர்த்தி 19.3 ஆகும். அதாவது நீரைப்போல் ஏறத்தாழ 19 மடங்கு எடையுள்ளது. இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.
தங்கத்தின் தன்மை
[தொகு]தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்;[1] வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். ஒருபங்கு நைத்திரிக் அமிலமும் மூன்று பங்கு ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும்.[2] தங்கம் சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களை வெகுவாகத் தெறிக்கவிடும் தன்மையைக் கொண்டுள்ளது.[3] அத்துடன் இது செங்கீழ்க்கதிர்களைத் தெறிக்கவிடும் ஆற்றலையும் கொண்டுள்ளது. இத்தன்மையின் காரணமாக வெப்பத் தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகளில் இது பயன்படுத்தப்படுகின்றது.[4]
தங்கத்தின் வேதியியல்
[தொகு]உயர் உலோகங்களில் தங்கம் ஒர் உன்னதமான உலோகமாக இருந்தாலும், அது பல வேறுபட்ட சேர்மங்களை உருவாக்குகிறது. தங்கத்தின் சேர்மங்களில் தங்கமானது -1 முதல் +5 வரையிலான ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. ஆனால் Au(I) மற்றும் Au(III) சேர்மங்கள் தங்கத்தின் வேதியியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. Au(I) ஆரசு அயனி என்று அழைக்கப்படுகிறது. இதுவே தயோ ஈதர்கள், தயோலேட்டுகள், மூவிணைய பாசுபீன்கள் போன்ற மென்மையான ஈந்தணைவிகள் உடன் பொதுவாக காணப்படும் ஆக்சிசனேற்ற நிலையாகும். Au(I) சேர்மங்கள் குறிப்பாக நேர்கோட்டு அமைப்பில் உள்ள சேர்மங்களாகும். Au(CN)2− இதற்கு சரியான உதாரணமாகும். சுரங்கங்களில் காணப்படும் கரையும் நிலையில் உள்ள தங்கத்தின் சேர்மம் இதுவாகும். AuCl போன்ற தங்க ஆலைடுகள் கோணல் மாணலான பலபடி சங்கிலிகளாக உருவாகின்றன. இவையும் தங்கத்துடன் நேர்கோட்டு ஒருங்கிணைப்பை கொண்டுள்ளன. தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான மருந்துகள் Au(I) அயனியின் வழிப்பொருள்களாகும். Au(III) என்ற குறியீடு குறிக்கும் ஆரிக் என்பது பொதுவான ஒரு ஆக்சிசனேற்ற நிலையாகும். தங்கம்(III) குளோரைடைக் கொண்டு இது விவரிக்கப்படுகிறது. (Au2Cl6). Au(III) அணைவுச் சேர்மங்களில் மற்ற d8 சேர்மங்கள் போல தங்க அணு மையமாக இருக்கிறது. குறிப்பாக இவை சகப்பிணைப்புத் தன்மையும் அயனித் தன்மையும் கொண்ட சதுரதள கட்டமைப்பில் காணப்படுகின்றன. எந்த வெப்பநிலையிலும் தங்கம் ஆக்சிசனுடன் வினைபுரியாது. மற்றும் 100 ° செல்சியசு வெப்பநிலை வரை ஓசோன் தாக்குதலை இது எதிர்க்கும். சில தனி ஆலசன்கள் தங்கத்துடன் வினைபுரிகின்ரன. இளம் சிவப்பு வெப்பநிலையில் தங்கம் புளோரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு தங்கம்(III) புளோரைடு உருவாகிறது. .
- 180° செல்சியசு வெப்பநிலையில் தூளாக்கப்பட்ட தங்கம் குளோரினுடன் வினைபுரிந்து AuCl3 சேர்மத்தை உருவாக்குகிறது.
- 140° செல்சியசு வெப்பநிலையில் தங்கம் புரோமினுடன் வினைபுரிந்து தங்கம் (III) சேர்மத்தை உருவாக்குகிறது.
ஆனால் அயோடினுடன் மிக மெதுவாக வினைபுரிந்து ஒற்றை அயோடைடை உருவாக்குகிறது. தங்கம் நேரடியாக கந்தகத்துடன் வினைபுரிவதில்லை. ஆனால் குளோரோ ஆரிக் அமிலத்தின் வழியாக அல்லது நீர்த்த தங்கம்(III) குளோரைடு வழியாக ஐதரசன் சல்பைடு வாயுவை செலுத்தினால் தங்கம்(III) சல்பைடு உருவாகிறது. அறை வெப்பநிலையில் தங்கம் உடனடியாக கரைந்து இரசக் கலவையையும், உயர் வெப்பநிலைகளில் பல உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகங்களையும் தருகிறது. இக்கலப்புலோகங்கள் கடினத்தன்மையை திருத்தவும், உலோகவியல் பண்புகளை மாற்றவும் உருவாக்கப்படுகின்றன. மேலும் இவை உருகுநிலையை கட்டுபடுத்தவும், கவர்ச்சிகரமான நிறங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. தங்கம் பொட்டாசியம், ருபிடியம், சிசியம், அல்லது டெட்ராமெத்திலமோனியம் போன்றவற்றுடன் வினைபுரிந்து அவற்றுடன் தொடர்புடைய ஆரைடு உப்புகளைக் கொடுக்கிறது. இவ்வுப்புகளில் Au−அயனி இடம்பெற்றுள்ளது. சீசியம் ஆரைடு அநேகமாய் ஒரு பிரபலமான ஆரைடு உப்பு ஆகும். பல அமிலங்களால் தங்கம் பாதிக்கப்படுவதில்லை. கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம், ஐதரோபுரோமிக் அமிலம், ஐதரோகுளோரிக் அமிலம், ஐதரோபுளோரிக் அமிலம், ஐதரோ அயோடிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் தங்கம் வினைபுரிவதில்லை.செலீனிக் அமிலத்துடனும் தங்கம் வினைபுரிவதில்லை. நைட்ரிக் அமிலமும், ஐதரோகுளோரிக் அமிலமும் 1:3 என்ற விகிதத்தில் கலந்து உருவாகும் இராச திராவகத்தில் இது கரைகிறது. நைட்ரிக் அமிலம் மிகக் குறைவான அளவில் தங்கத்தை ஆக்சிசனேற்றம் செய்து +3 அயனியாக மாற்றுகிறது. வினையின் வேதிச்சமநிலை காரணமாக தூய அமிலத்தில் இதைக் கண்டறிய முடியாது. எனினும் சமநிலையிலிருந்து அயனிகள் ஐதரோ குளோரிக் அமிலத்தால் நீக்கப்படுகின்றன. AuCl4−அயனிகள் அல்லது குளோரோ ஆரிக் அமிலம் உருவாகி வினையை மேலும் தொடர்ந்து நடக்கத் துணைபுரிகிறது. பலவகையான காரங்களாலும் தங்கம் பாதிக்கப்படுவதில்லை. நீரிய, திண்ம அல்லது உருகிய சோடியம் அல்லது பொட்டாசியம் ஐதராக்சைடுகளுடன் இது வினைபுரிவதில்லை. இருப்பினும், கார நிபந்தனைகளுடன் ஆக்சிசனின் முன்னிலையில் சோடியம் அல்லது பொட்டாசியம் சயனைடுடன் வினைபுரிந்து கரையக்கூடிய அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது. நன்கு வரையறுக்கப்பட்ட எண்ணற்ற தொகுதிச் சேர்மங்கள் அறியப்படுகின்றன. இது போன்ற இனங்களில் தங்கம் பின்ன ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. எண்முக இனமான {Au(P(C6H5)3)}62+இதற்கு சரியான எடுத்துக் காட்டாகும். தங்க சல்பைடு போன்ற தங்க சால்கோசனைட்டுகள் சம அளவில் Au(I) மற்றும் Au(III) அயனிகளைக் கொண்டுள்ளன.
நச்சுத்தன்மை
[தொகு]தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும். ஆதலாலேயே தங்கம் தங்க இலை போன்ற உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[5] and is sometimes used as a food decoration in the form of gold leaf.[6] அதுமட்டுமன்றி கோல்ட்ச்லாஜர்., கோல்ட் ஸ்ரைக், கோல்ட் வாஜர் போன்ற மதுசாரங்களிலும் உலோக நிலைத் தங்கம் பயன்படுகின்றது.அத்தோடு, உலோகத் தங்கம் உணவு சேர்பொருளாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் தங்கத்தின் அயன் நச்சுத்தன்மை கொண்டதாகும். தங்க உப்புகள் மற்றும் தங்கக் குளோரைட் ஆகியவையும் ஈரலுக்கும், சிறுநீரகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.
தங்கத்தின் மதிப்பு
[தொகு]தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது.[7] தங்கத்தின் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். 2015 ஆம் ஆண்டளவில் நிலத்தின் கீழ் 186,700 தொன் எடையான தங்கம் காணப்படுகின்றது.[8] ஐக்கிய அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் "இவ்வருடத்தின் ஒவ்வாமையை ஏற்படுத்துவான்" எனும் தேர்தலில் தங்கமானது அதிக வாக்குகள் பெற்றது.[9] தூய தங்கம் பெண்களையே அதிகம் ஒவ்வாமையால் பாதித்தது. எனினும் நிக்கல் போன்றவற்றுடன் கலந்து செய்யும் தங்கம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.[10]
தங்கம் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
தங்கச் சுரங்கம்
[தொகு]தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்கா வில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா விலும், இந்தியா வில் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகொடை என்னுமிடத்திற் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.
விலை
[தொகு]2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருந்தபோதிலும், 2013-ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு முதல் கால் இறுதியில் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது.[11] 2015 ஆம் ஆண்டளவில் ஒரு கிராம் தங்கத்தின் பெறுமதி 39 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
தங்கத்தை இறக்குமதி செய்வது குறைத்து இந்தியாவிற்குள்ளே இருக்கும் தங்கம் சுழற்சி செய்யப்பட்டால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையவும், குறிப்பாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையவும் வழி உருவாக்கும். ( தங்கத்தின் விலை ஏறுகிறதா, ஏமாற்றுகிறதா, க. மாரிக்கனி, ஓருலகம் பதிப்பகம், புதிய எண் 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33 )
நாணயச் செலாவணி
[தொகு]ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.
பயன்பாடு
[தொகு]தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், போன்றவற்றைச் செய்வர். தங்கம் மென்மையான உலோகம் ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி யைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா[சான்று தேவை].
-
நியூயார்க் பெடரல்வங்கி தங்கபெட்டகம்
-
ஜப்பான் தாய் தங்கம் அருங்காட்சியகத்திலுள்ள உலகிலேயே மிகப்பெரிய 250 கிலோ எடையுள்ள தங்ககட்டி
-
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் பொற்கோயில்
உற்பத்தி
[தொகு]உலகத் தங்கச் சபையின் கூற்றுக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டளவில் பூமிக்குக் கீழே 183,600 தொன் எடையுள்ள தங்கம் காணப்படுகின்றது. இது 21 மீற்றர் நீளமுள்ள சதுரமுகி ஒன்றின் கனவளவிற்குச் சமமானதாகும்.[13] இதன் மதிப்பு 6.3 ரில்லியன் அமெரிக்க் டொலர்கள் ஆகும்.
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடாக சீனா விளங்குகிறது.[14] சீனா 430 தொன் தங்கத்தை உற்பத்தி செய்தது. சீனாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும், உருசியாவும் அதிக தங்கத்தை உற்பத்தி செய்த நாடுகளாக விளங்குகின்றன. இவை முறையே 274 மற்றும் 247 தொன் எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்துள்ளன. எனினும் தங்க உற்பத்தி மூலம் பாரிய ஆபத்தான மாசு சூழலில் இடம்பெறுகின்றது.[15][16]
அகழ்தல்
[தொகு]1880களிலிருந்து தென்னாபிரிக்காவே உலகின் தங்க விநியோகத்தின் முக்கிய நாடாகவும் வளமாகவும் விளங்குகின்றது. இன்றுள்ள 50 விழுக்காடு தங்கம் இந்நாட்டிலிருந்தே அகழப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் 1,480 தொன் எடையுள்ள தங்கத்தை இந்நாடு உற்பத்தி செய்ததுடன் இது உலகின் அவ்வாண்டின் 79%ஆன உற்பத்தி ஆகும். எனினும், 1905 ஆம் ஆண்டிலிருந்து முதன்மை வகித்த தென்னாபிரிக்காவை, சீனா 2007 ஆம் ஆண்டில் 276 தொன் தங்கத்தை அகழ்ந்து பின்தள்ளியது.[17]
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக சீனாவும் அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க அகழ்வில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது.[14] இந்நாடுகளுடன் கானா, மாலி, புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும்.
நுகர்வு
[தொகு]நாடு | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 |
---|---|---|---|---|---|
இந்தியா | 442.37 | 745.70 | 986.3 | 864 | 974 |
சீனா | 376.96 | 428.00 | 921.5 | 817.5 | 1120.1 |
ஐக்கிய அமெரிக்கா | 150.28 | 128.61 | 199.5 | 161 | 190 |
துருக்கி | 75.16 | 74.07 | 143 | 118 | 175.2 |
சவூதி அரேபியா | 77.75 | 72.95 | 69.1 | 58.5 | 72.2 |
உருசியா | 60.12 | 67.50 | 76.7 | 81.9 | 73.3 |
ஐக்கிய அரபு அமீரகம் | 67.60 | 63.37 | 60.9 | 58.1 | 77.1 |
எகிப்து | 56.68 | 53.43 | 36 | 47.8 | 57.3 |
இந்தோனேசியா | 41.00 | 32.75 | 55 | 52.3 | 68 |
ஐக்கிய இராச்சியம் | 31.75 | 27.35 | 22.6 | 21.1 | 23.4 |
Other Persian Gulf Countries | 24.10 | 21.97 | 22 | 19.9 | 24.6 |
சப்பான் | 21.85 | 18.50 | −30.1 | 7.6 | 21.3 |
தென் கொரியா | 18.83 | 15.87 | 15.5 | 12.1 | 17.5 |
வியட்நாம் | 15.08 | 14.36 | 100.8 | 77 | 92.2 |
தாய்லாந்து | 7.33 | 6.28 | 107.4 | 80.9 | 140.1 |
மொத்தம் | 1508.70 | 1805.60 | |||
வேறு நாடுகள் | 251.6 | 254.0 | 390.4 | 393.5 | 450.7 |
உலக மொத்தம் | 1760.3 | 2059.6 | 3487.5 | 3163.6 | 3863.5 |
முக்கியத்துவம்
[தொகு]தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இஃது ஓர் ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. தமிழர்கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவதும் வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Masuda, Hideki (2016). "Combined Transmission Electron Microscopy – In situ Observation of the Formation Process and Measurement of Physical Properties for Single Atomic-Sized Metallic Wires". In Janecek, Milos; Kral, Robert (eds.). Modern Electron Microscopy in Physical and Life Sciences. InTech. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5772/62288. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-953-51-2252-4.
- ↑ Polk, Patti (2016-12-29). The Crystal Guide: Identification, Purpose and Values (in ஆங்கிலம்). "F+W Media, Inc.". பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781440247187.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Gold: causes of color". Archived from the original on 5 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 6 June 2009.
- ↑ Mallan, Lloyd (1971). Suiting up for space: the evolution of the space suit. John Day Co. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-381-98150-1.
- ↑ Dierks, S. (May 2005). "Gold MSDS". Electronic Space Products International. Archived from the original on 2006-11-10. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
- ↑ Louis, Catherine; Pluchery, Olivier (2012-01-01). Gold Nanoparticles for Physics, Chemistry and Biology (in ஆங்கிலம்). World Scientific. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781848168077.
- ↑ Anderson, Dale (2009-08-11). Murder, Drugs, and Engineering (in ஆங்கிலம்). Lulu.com. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780557077861.
- ↑ "Supply". பார்க்கப்பட்ட நாள் December 26, 2016.
- ↑ MacNeil, Jane Salodof (3 January 2006) Henna tattoo ingredient is Allergen of the Year. (Clinical Rounds) பரணிடப்பட்டது 2017-05-25 at the வந்தவழி இயந்திரம். Skin & Allergy News.
- ↑ Brunk, Doug (15 February 2008). "Ubiquitous nickel wins skin contact allergy award for 2008" இம் மூலத்தில் இருந்து 24 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110624033428/http://www.highbeam.com/doc/1G1-176478357.html.
- ↑ தங்கத்தின் விலை குறைவது ஏன்
- ↑ Who exported Gold in 2014?. Harvard Atlas of Economic Complexity.
- ↑ "Gold Supply – Mining & Recycling". World Gold Council.
- ↑ 14.0 14.1 "U.S. Geological Survey, Mineral Commodity Summaries, January 2016" (PDF). ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.
- ↑ Abdul-Wahab, Sabah Ahmed; Ameer, Marikar, Fouzul (24 October 2011). "The environmental impact of gold mines: pollution by heavy metals". Central European Journal of Engineering 2 (2): 304–313. doi:10.2478/s13531-011-0052-3. Bibcode: 2012CEJE....2..304A.
- ↑ Summit declaration, Peoples' Gold summit, San Juan Ridge, California in June 1999. Scribd.com (22 February 2012). Retrieved on 4 May 2012.
- ↑ Mandaro, Laura (17 January 2008). "China now world's largest gold producer; foreign miners at door". MarketWatch. பார்க்கப்பட்ட நாள் 5 April 2009.
- ↑ "Gold Demand Trends | Investment | World Gold Council". Gold.org. பார்க்கப்பட்ட நாள் 12 September 2013.
- ↑ "Gold Demand Trends". 12 November 2015.
உசாத்துணை
[தொகு]- குழந்தைகள் கலைக் களஞ்சியம்- தொகுதி ஐந்து. - தமிழ் வளர்ச்சிக் கழகம் - 1986
- இளையர் அறிவியல் களஞ்சியம் -.மணவை பப்ளிகேஷன் வெளியீடு -1995