மக்னீசியம் குரோமேட்டு
பண்புகள் | |
---|---|
MgCrO4 | |
வாய்ப்பாட்டு எடை | 280.597 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மக்னீசியம் குரோமேட்டு (Magnesium chromate) என்பது MgCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். வெண்மை அல்லது பழுப்பு நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் நெடியற்ற திண்மமாக உள்ளது. தண்ணீரில் கரையக்கூடிய இச்சேர்மம் பல்வேறு வகையான முக்கிய தொழிற்சாலைப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இயற்கையில் மக்னீசியம் குரோமேட்டு சிபினல் படிக அமைப்புடன் தோன்றுகிறது அல்லது பெருமளவில் துகளாகத் தயாரிக்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]1940 ஆம் ஆண்டுக்கு முன், மக்னீசியம் குரோமேட்டு மற்றும் அதன் நீரேற்றுகள் பற்றிய கருத்துகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஆனால் இந்த வருடத்திலிருந்து தொடங்கப்பட்ட ஆய்வுகள் அதன் பண்புகள் மற்றும் கரையும் தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தின[1]
பயன்கள்
[தொகு]நீரற்ற அல்லது நீரேற்று வடிவ மக்னீசியம் குரோமேட்டுகள் வணிகரீதியாக நுண்ணிய மைக்ரான் அளவில் இருந்து மீநுண்ணிய அளவுகள் வரை பலவகைகளில் கிடைக்கிறது[2][3].
ஒரு நீரேற்றாக இது அரிமாணத் தடுப்பி மற்றும் சாயமாகவும்[4] அல்லது அழகுசாதனப் பொருட்களில் [5]பகுதிப்பொருளாகவும் பயன்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் 11 நீர் மூலக்கூறுகள் கொண்ட இச்சேர்மத்தின் பதினொருநீரேற்று பல்கலைக்கழகக் கல்லூரி இலண்டனில் கண்டறியப்பட்டது[6].
தீங்குகள்
[தொகு]நோய் தீர்க்கும் பயன்கள் ஏதுமில்லாததால் மக்னீசியம் குரோமேட்டு நீரேற்று அறை வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்[7]. இதுவொரு புற்றுநோய் ஊக்கியாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. கடுமையான தோலழற்சியும் உடலுக்குள் ஈர்க்கப்பட்டால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் சேதம் ஏற்படுத்தும் சாத்தியங்கள் கொண்டுள்ளது. எனவே இதை ஒரு அபாயகரமான கழிவு எனக் கருத வேண்டும்[8].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hill, Arthur E.; Soth, Glenn C.; Ricci, John E. (1940). Journal of the American Chemical Society 62 (8): 2131. doi:10.1021/ja01865a059.
- ↑ "Magnesium Chromate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
- ↑ Li, Su Ping; Jia, Xiao Lin; Qi, Ya Fang (2011). "Synthesis of Nano-Crystalline Magnesium Chromate Spinel by Citrate Sol-Gel Method". Advanced Materials Research 284-286: 730. doi:10.4028/www.scientific.net/AMR.284-286.730.
- ↑ "Magnesium chromate hydrate, 99.8% (metals basis)". Us.vwr.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
- ↑ "Item # MG-401, Heavy Magnesium Chromate Powder On Atlantic Equipment Engineers, A Division Of Micron Metals, Inc". Metal-powders-compounds.micronmetals.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
- ↑ Fortes, A. Dominic; Wood, Ian G. (March 2012). "X-ray powder diffraction analysis of a new magnesium chromate hydrate, MgCrO4·11H2O". Powder Diffraction 27 (1): 8–11. doi:10.1017/S088571561200005X.
- ↑ "Magnesium chromate hydrate | CAS 23371-94-0 | Santa Cruz Biotech". Scbt.com. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.
- ↑ "Material Data Sheet" (PDF). McGean-Rohco, Inc. Archived from the original (PDF) on 2013-07-09. பார்க்கப்பட்ட நாள் 2013-07-16.