மட்டி (வாழை)
மட்டி என்பது வாழையின் ஓர் இனம். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. இது மற்ற வாழைப்பழங்களை விட இனிப்பு சுவை மிகுந்து காணப்படுகிறது. [1] இது இந்த மாவட்ட பேச்சிப்பாறை உள்பட்ட மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இதற்கு இப்போது புவிசார் குறீயீடு வழங்ஙகப்பபட்டுள்ளது. [2]
பயிரிடல்
[தொகு]வாழை பத்து மாதங்ககளில் பலன் தரும். இந்த மட்டி வாழை பலன் தர 12 மாதங்கள் ஆகும். இந்த வாழையின் தாரில் காய்கள் அதிகமாகவும், நெருக்கமாகவும் இருக்கும்.
மஞ்சள் மட்டி, செம்மட்டி, நெய்மட்டி, கருமட்டி, வால்மட்டி என்று இந்த மட்டி வாழையில் பல வகைகள் உண்டு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்து ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் வாழை பயிரிடப்படுகிறது. [3] இதில் 5 சதவீதம் நிலப்பரப்பில் மட்டுமே மட்டி வாழை பயிரிடப்படுகிறது.
பயன்கள்
[தொகு]இதில் மாவுத்தன்மை மிகுதியாக காணப்படுவதால் சிறுகுழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கப்படுகிறது.
ஆதாரங்கள்
[தொகு]- வாழைப்பழ வகைகள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- மட்டி
- மட்டிப் பழம்