உள்ளடக்கத்துக்குச் செல்

மட்ரியா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்ரியா ஆறு
ஆறு
The river in the outskirts of Porto Velho
பெயர் மூலம்: Portuguese, "wood river"
நாடுகள் பொலிவியா, பிரேசில்
பகுதி அமேசான் வடிநிலம்
கிளையாறுகள்
 - இடம் பெனி ஆறு
 - வலம் மேமோர் ஆறு, ஜி-பரானா ஆறு, டாஸ் மார்மேலாஸ் ஆறு, மேனிகோர் ஆறு, மாடவ்ரா ஆறு, Mariepauá River, Aripuanã River
நகரங்கள் நோவா ஒலின்டா டோ நோர்டே, போர்பா, அமேசோனாஸ், Novo Aripuanã, Manicoré, Humaitá, Porto Velho
உற்பத்தியாகும் இடம் Confluence of Beni and Mamoré
 - அமைவிடம் Near Guayaramerín, பொலிவியா & பிரேசில்
 - உயர்வு 180 மீ (591 அடி)
கழிமுகம் Amazon River
 - அமைவிடம் அமேசோனாஸ் (பிரேசிலியன் மாநிலம், பிரேசில்
 - elevation 40 மீ (131 அடி)
நீளம் 3,380 கிமீ (2,100 மைல்) [1]
வடிநிலம் 8,50,000 கிமீ² (3,28,187 ச.மைல்)
Discharge for near mouth
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
Map of the Madeira River watershed
Map of the Madeira River watershed
Map of the Madeira River watershed
Map of the Amazon Basin with the Madeira River highlighted
Map of the Amazon Basin with the Madeira River highlighted

போர்ச்சுகீசு மொழியில் ரியோ மட்ரியா என்று அழைக்கப் படும் இந்த ஆறும் தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நீர் போக்குவரத்தாகும். இதன் நீளம் ஏறக்குறைய 3,250 கி.மீ (2,020 மைல்கள்) ஆகும். அமேசான் ஆற்றின் மிகப் பெரிய இரண்டு கிளை ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். அங்குள்ள ஆற்று வடிகாலில் காணப் படும் நீரில் 15% நீருக்கு இதுதான் காரணமாகும். டேவிட் ரம்சே வரைபடங்களின் தொகுப்பில் 1747 ஆம் ஆண்டு உள்ள இம்மானுவேல் பௌவன் வரைபடம் இந்த மட்ரியா ஆறு ஆங்கிலேயர்களின் காலனி ஆட்சிக்கு முந்தையது என்றும் அதனுடைய உள்நாட்டு பெயர் கையாரி என்றும் கூறுகிறது.

இந்த கையரி ஆறு அல்லது போர்ச்சுகீசியர்களால் மட்ரியா என்று அழைக்கப் பட்ட மர ஆறு (Wood River) இரண்டு பெரிய ஆறுகளால் ஆனது. இவை இரண்டும் இந்த ஆறு உருவாகும் இடத்தில் இணையும்.

காலநிலை

[தொகு]

இங்கு காணப்படும் சராசரி ஆண்டு மழை அளவு 75 – 300 செ.மீ ஆகும். மட்ரியா ஆற்றின் மேல்நிலை ஆற்று வடிகால் 170.5செ.மீ மழை பெறுகிறது. 49 செ.மீ இலிருந்து 700 செ.மீ வரை மழை பெறக்கூடியது. மழை அளவின் வேறுபாடு இங்கு அதிகம். இந்த ஆறு உருவாக ஆரம்பிக்கும் இடத்தில் வேறு கிளை ஆறுகள் இல்லாவிட்டாலும் இது உலகின் ஒரு மிகப் பெரிய ஆறாகும். இது வருடத்திற்கு 18,000 கன மீட்டர்/விநாடி (640,000கன அடி/வி) நீரை வெளியேற்றுகிறது. இது காங்கோ ஆறு வெளியேற்றுவதில் பாதியாகும். இது அமேசான் ஆற்றிற்கு அருகில் செல்லும் போது இன்னும் அதிகமாகி விநாடிக்கு 31,200 கன மீட்டர் நீரை வெளியேற்றுகிறது.

நீர் போக்குவரத்து:

மழைக்காலங்களில் இந்த ஆற்றில் 15மீ (50அடி) வரை நீர்மட்டம் உயரும். பிரேஸிலில் உள்ள போர்ட்டோ வெல்கோ அருகில் 1,070 கி.மீ உயரத்தில் இது சான் அண்டோனியா நீர் வீழ்ச்சியாக விழுகிறது. நீர் போக்குவரத்து சாத்தியப் படாத இடங்களில் மட்ரியா-மமோர் ரயில்பாதை 365 கி.மீ தூரத்துக்கு வளைந்து செல்கிறது.

இன்றைய நாளில் இது அமேசான் வடிநிலத்தின் மிக அதிகமாக செயல்படும் ஒரு நீர் போக்குவரத்தாகும். இது 4டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய உதவி செய்கிறது. இது பொர்டோ வெல்கோ என்கிற இடத்தில் பெருஞ் சரக்கு கப்பல்களில் ஏற்றப்படுகிறது. அங்கிருந்து மட்ரியா ஆறு வழியாக ஆற்று வாய்க்கு அருகில் உள்ள இடகோயட்ரியா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது. மற்றும் அமேசான் ஆற்றின் இடப்பக்க கரையில் உள்ள சண்டரம் என்கிற துறைமுகத்துக்கும் கொண்டு செல்லப் படுகிறது. இந்த இரண்டு துறை முகங்களிலிருந்தும் தானியங்கள் முக்கியமாக சோயா மற்றும் மக்காச்சோளம் ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு ஏற்றுமதியாகிறது. இந்த நீர் போக்குவரத்து அமேசோனாஸின் மாநில தலைநகரான மனாஸில் உள்ள ரேமான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து (பெட்ரொ ப்ராஸ்) எரிபொருள் எண்ணெயை எடுத்துக் கொண்டு பொர்டோ வெல்கோ வரைக்கும் செல்லும். அங்கிருந்து ஏக்கர், ரோண்டோனியா மற்றும் மடோக்ரோஸ்ஸோவின் சில பகுதிகள் மனாஸில் சுத்திகரிக்கப் பட்ட பெட்ரோலைப் பெற்றுக் கொள்ளுகின்றன. சரக்கு ஏற்றிச் செல்லும் பெரிய கப்பல்கள் மனாஸ் மற்றும் பொர்டோ வெல்ஹோவிற்கு இடையில் உள்ள இந்த நீர் போக்குவரத்தை உபயோகப் படுத்திக் கொள்கின்றன. இந்த நீர் போக்குவரத்து 1,225 கி.மீ நீளத்திற்கு ரியோ நிக்ரோ மற்றும் மட்ரியா வழியாகச் செல்லுகிறது. இந்த நீர் போக்குவரத்து மனாஸின் தொழிற்சாலை மாவட்டத்தை மற்ற பிரேஸிலின் பகுதிகளோடு இணைக்கிறது. இந்த நீர் போக்குவரத்து கச்சாப் பொருட்களைக் கொண்டு வந்து அவற்றின் உற்பத்திப் பொருட்களை அவற்றை உபயோகிக்கும் முக்கிய நகரங்களான சௌ பௌலோ மற்றும் ரியோ டி ஜனெரியோ போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. 2012இல் ஏற்றுமதி செய்யப் பட்ட பொருட்களின் மொத்த கொள்ளளவு 5,076,014 டன்களாகும்.

சுற்று சூழல் அமைப்பு:

அமேசானிய ஆறுகளின் வழக்கப் படி மட்ரியா ஆற்றின் நீரும் கலங்கலாகத் தான் காணப்படுகிறத் . இதற்கு முக்கிய காரணம் அங்கு காணப் படும் உயர்ந்த அளவு சேறு படிமானங்கள் அந்த ஆற்றின் நீர் வெள்ளையாக இருப்பதாகும். ஆனால் இவற்றின் சில கிளை ஆறுகள் கலங்காத தெளிவான நீரைக் கொண்டுள்ளதாகவும் (அரிபுஆனா மற்றும் ஜி பரானா) சில கிளை ஆறுகள் கருப்பு நீர் உடையதாகவும் காணப் படுகிறது. (மனிகோர்)

போல்வியன் ஆறு டால்பின் இது அநேகரால் அமேசான் ஆறு டால்பினின் கிளை இனமாகக் கருதப் படுகிறது. இவ்வகை டால்பின்கள் மட்ரியா ஆற்றின் மேல் பகுதியில் மட்டுமே காணப் படக் கூடியதாகும். மட்ரியா ஆற்று வடிகால் பகுதியில் ஏறக்குறைய 900 மீனினங்கள் காணப் படுவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இது இந்த பகுதியை உலகின் மிகப் பெரிய நன்னீர் இனங்களைக் கொண்டுள்ள பகுதியாக மாற்றியுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ziesler, R.; Ardizzone, G.D. (1979). "Amazon River System". The Inland waters of Latin America. Food and Agriculture Organization of the United Nations. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-5-000780-9. Archived from the original on 21 October 2013. {{cite book}}: Unknown parameter |deadurl= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Madeira River
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்ரியா_ஆறு&oldid=2528751" இலிருந்து மீள்விக்கப்பட்டது