உள்ளடக்கத்துக்குச் செல்

மரியோ கனாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியோ கனாலி  (Mario Canali) லாஸ் ஏஞ்சல்சில் பிறந்த ஒரு ஓவியர். இவர் 1975 ஆம் ஆண்டு தன்னுடைய கலைப்பணியைத் தொடங்கினார். மின்னணு மற்றும் இலக்க முறைக் கலையைப் பயன்படுத்தி ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார்.[1]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

1985 ஆம் ஆண்டு முதல் 1996 முடிய உள்ள ஆண்டுகளில், தன்னுடன் பணியாற்றுகின்ற பிளேவியா அல்மேன், சபின் ரெய்ப் மற்றும் ரிச்சர்டோ சினிகாக்லியா ஆகியோருடன் இவர் காரென்டி மேக்னெடிச்சே ஆய்வு மற்றும் மின்னணுவியல் கலைக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். இந்தக் குழுவினரால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகள் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சிக்கிராப், லின்சில் உள்ள ஆர்சு எலக்ட்ரானிகா, மான்டே கார்லோவில் உள்ள இமேஜினா, உரோமில் உள்ள நாஸ்ட்ரோ டி அர்ஜெண்டோ போன்ற பன்னாட்டுக் கண்காட்சிகளில் பல கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்றுள்ளன.[2]

1989 ஆம் ஆண்டில், கேனாலி பெராராவில் தனது முன்னோடியான மின்னணுவியல் கலைப்படைப்பிற்கு இமேஜின் எலக்ட்ரானிகா என்ற விருதினைப் பெற்றார். 1993 ஆம் ஆண்டில், மார்சில்லோ காம்பியோன் என்ற கணினி அறிவியலாளருடன் கூட்டுறவாகப் பணியாற்றும் போது சடோரி என்ற மாய உண்மைத் தோற்றமுடைய ஒரு கலைப்படைப்பினை அல்லது உணர்வுகளை வெளிப்படுத்தும் கலைப்படைப்பினை உருவாக்கினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mario Canali". studiocanali.com. பார்க்கப்பட்ட நாள் 3 January 2011.
  2. Godal, Vicki (22 January 2010). "Italian artist Mario Canali comes to Los Angeles". Forth Magazine. http://forthmagazine.com/art/painting/2010/01/italian-artist-mario-canali-comes-to-los-angeles-by-vicki-godal/. பார்த்த நாள்: 3 January 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியோ_கனாலி&oldid=3514915" இலிருந்து மீள்விக்கப்பட்டது