மலாயா வங்கி நிறுவனம்
வகை | பொது நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 31 மே 1960 |
நிறுவனர்(கள்) | கூ டெக் புவாத் |
தலைமையகம் | மெனாரா மே பேங்க் கோலாலம்பூர், மலேசியா |
சேவை வழங்கும் பகுதி | தென்கிழக்காசியா ஆங்காங், சீனா, பகுரைன் ஐ.இரா, ஐ.அ, பாக்கித்தான் |
முதன்மை நபர்கள் | தாதுக் அப்துல் பரீது அலையசு (தலைவர்; மு.செ.அதிகாரி) மொகமது சுகைல் அமர் (குழு ம.தொ.அதிகாரி) ஜெரோம் ஹோன் கா சூ (குழு மு.இ.அதிகாரி) |
தொழில்துறை | நிதிச் சேவைகள் |
வருமானம் | MYR51.03 பில்லியன் ($11.59 பில்லியன்) (2021)[1] |
இயக்க வருமானம் | MYR25.45 பில்லியன் ($5.78 பில்லியன்) (2021) |
நிகர வருமானம் | MYR8.20 பில்லியன் ($1.98 பில்லியன்) (2019)[1] |
மொத்தச் சொத்துகள் | MYR888.00 பில்லியன் ($201.84 பில்லியன்) (2021)[1] |
பணியாளர் | 43,000 |
இணையத்தளம் | www |
மலாயா வங்கி நிறுவனம் (Malayan Banking Berhad, பங்கு வர்த்தகத்தில் மே பேங்க்) மலேசியாவைச் சேர்ந்த அனைத்துச் சேவைளையும் வழங்கும் தனியார் வங்கி நிறுவனமாகும். இது முதன்மையாக மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா பகுதிகளில் இயங்குகின்றது.
பின்னணி
[தொகு]மேபாங்க்கின் மொத்த பங்குகளின் மதிப்பின்படியும் மொத்த சொத்துக்களின் அடிப்படையிலும், இது மலேசியாவின் மிகப் பெரும் வங்கியாக விளங்குகின்றது. 2021ஆம் ஆண்டில் $201.84 பில்லியன் மொத்தச் சொத்துக்களையும் நிகர இலாபமாக $1.98 பில்லியன் கொண்டுள்ள இந்த வங்கி தெற்காசியாவில் உள்ள மிகப் பெரும் வங்கிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
உலகளவில் முதல் 1000 வங்கிகளில் 103வது நிலையிலும் (2014) போர்ப்சு குளோபலின் 2000 வங்கிகளின் பட்டியலில் 371வது இடத்திலும் (2015) உள்ளது.
மலேசியப் பங்குச் சந்தையில் (புர்சா மலேசியா) பட்டியலிடப்பட்டுள்ள பெரிய நிறுவனமாகவும் உள்ளது. இதன் மொத்தப் பங்குகளின் மதிப்பு திசம்பர் 31, 2014இல் அமெரிக்க$ 24.4 பில்லியனாக இருந்தது. புளூம்பெர்கு நிறுவனம் இதனை முதல் 20 வலிமையான வங்கிகளில் ஒன்றாக மதிப்பிட்டுள்ளது.[2]
மேபாங்கின் இசுலாமியத் துணை நிறுவனம், மேபாங்க் இசுலாமிக்கு, ஆசியா பசிபிக் மண்டலத்தில் உள்ள இசுலாமிய வங்கிகளில் முதலிடத்தில் மதிப்பிடப்படுகின்றது.[3] [4]
இந்த வங்கியின் கிளைகள் 10 தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளிலும் முக்கிய ஆசிய நாடுகளிலும் பரந்துபட்டுள்ளது. இந்த வங்கி 2400 உலகளாவிய அலுவலகங்களுடனும் 47,000க்கும் கூடுதலான ஊழியர்களுடனும் இயங்கி வருகின்றது.
மலாயா வங்கியின் கிளைகள் உள்ள நாடுகள்
[தொகு]விவரங்களுடனான முழுமையான பட்டியல்:அனைத்து நாடுகள் பரணிடப்பட்டது 2016-02-16 at the வந்தவழி இயந்திரம்
ஆசியா
[தொகு]- மலேசியா
- சிங்கப்பூர்
- பிலிப்பீன்சு
- இந்தோனேசியா
- கம்போடியா
- வியட்நாம்
- லாவோஸ்
- மியான்மர்
- ஆங்காங்
- சீனா
- புரூணை
- பகுரைன்
- பப்புவா நியூ கினி
- பாக்கித்தான்
ஆசியாவிற்கு வெளியே
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Malaysia, Agenda. "Welcome to Maybank". Maybank Malaysia.
- ↑ World’s Strongest Banks – Bloomberg Markets
- ↑ "Islamic Bank of the Year – The Banker". Archived from the original on 2015-10-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.
- ↑ RAM Ratings reaffirms Maybank Islamic’s AAA/Stable/P1 ratings – RAM Ratings