மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்
Ketua Pembangkang Leader of the Opposition (Malaysia) | |
---|---|
தற்போது அம்சா சைனுடின் (Hamzah Zainudin) 10 டிசம்பர் 2022 முதல் | |
உறுப்பினர் | மக்களவை நிகராளி |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
நியமிப்பவர் | மலேசிய மக்களவை |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள்; அல்லது அதற்கும் குறைவானது; ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | புர்கானுடின் அல் எல்மி Burhanuddin al-Helmy |
உருவாக்கம் | 1959 |
மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
மலேசிய அரசியல் |
---|
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் (மலாய்: Ketua Pembangkang; ஆங்கிலம்: Leader of the Opposition; சீனம்: 马来西亚国会反对党领袖) என்பவர் மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையான மலேசிய மக்களவையில் உள்ள எதிர்க்கட்சி அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவர் ஆவார். அதாவது ஆளும் கட்சி அல்லது ஆளும் கூட்டணிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒருமித்த தலைவரும் ஆவார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அரசாங்கத்தில் எந்தப் பொறுப்புகளையும் வகிக்காத ஒருவராகவும்; மலேசிய மக்களவையில் பெரிய ஓர் எதிர்க்கட்சி அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராகவும் பொறுப்பில் இருக்க வேண்டும். மலேசிய மக்களவை அமர்வில் இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர் மத்திய மக்களவை மேசையின் இடது புறத்திலும், பிரதமருக்கு எதிரேயும் அமர்ந்திருப்பார்.
பொது
[தொகு]எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற விதிகளின்படி மக்களவையின் சிறுபான்மைக் கட்சிகளினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மக்களவை அமர்வில் இருக்கும் போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மரணம் அடைந்தால்; அல்லது பதிவித் துறப்பு செய்தால்; அல்லது அவரின் தலைமைப் பதவிக்குச் சவால் விடப்பட்டால்; ஒரு புதிய எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.
மலேசிய நாடாளுமன்றம், மலேசியாவின் அரசமைப்பு அவையாகும். இந்த நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. எதிர்க்கட்சியானது வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி
[தொகு]அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அரசாங்கத் திட்டங்களை விமர்சிப்பது; மாற்று வரவு செலவுத் திட்டங்கள் அல்லது மாற்றுச் சட்டங்களை முன்வைப்பது; முன்மொழியப்படும் அனைத்துச் சட்டங்கள் குறித்தும் விவாதிப்பது; மற்றும் நடப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கவனம் செலுத்துகிறது.
எனவே எதிர்க்கட்சியானது 'காத்திருக்கும் அரசாங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சி முறைமை என்பது மக்களாட்சி அமைப்பின் முறையான ஒரு பகுதியாகும்.
நவம்பர் 2022 முதல், பெரிக்காத்தான் கூட்டணி, மலேசிய நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய எதிரணிக் கூட்டணியாக உள்ளது. இதற்கு முன்பு, எதிர்க்கட்சித் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் லிம் கிட் சியாங் ஆவார். இவர் 28 ஆண்டுகள் (1975-1999 மற்றும் 2004-2008 வரை) எதிர்க்கட்சிகளின் தலைவராகப் பணியாற்றினார்.
மலேசிய நாடாளுமன்றம்
[தொகு]மலேசிய நாடாளுமன்றம் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மக்களவை மற்றும் மேலவை என ஈரவை முறைமையைக் கொண்டது. மலேசிய மாமன்னர் நாட்டின் தலைவர் எனும் வகையில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அங்கமாகக் கருதப்படுகிறார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாடாளுமன்றம் கூடுகிறது. மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், கோலாலம்பூர், பெர்தானா தாவரவியல் பூங்காவிற்கு அருகில் உள்ளது.
1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மலேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு RM 18 மில்லியன் செலவானது. 18 மாடிகள் கொண்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில், இரு அவைகளுக்கும் மூன்று மாடிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மற்ற மாடிகளில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன.[1]
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல்
[தொகு]மலேசிய அரசியல் கட்சிகள் / கூட்டணிகள்:
மலேசிய கூட்டணி கட்சி
மலேசிய இசுலாமிய கட்சி
மலாயா தொழிலாளர் கட்சி
ஜனநாயக செயல் கட்சி
சரவாக் தேசியக் கட்சி
மக்கள் நீதிக் கட்சி
பாக்காத்தான் அரப்பான்
பாரிசான் நேசனல்
பெரிக்காத்தான் நேசனல்
# | தோற்றம் | எதிரணித் தலைவர் (பிறப்பு-இறப்பு) |
அரசியல் கட்சி | பதவி காலம் | சான்றுகள் | ||
---|---|---|---|---|---|---|---|
பதவியேற்பு | பதவி விலகல் | ||||||
1 | புர்கானுடின் அல் எல்மி (Burhanuddin al-Helmy) (1911–1969) பெசுட் மக்களவைத் தொகுதி |
மலேசிய இசுலாமிய கட்சி | 1959 | 1964 | |||
2 | டான் சி கூன் (Tan Chee Khoon) (1919–1996) பத்து மக்களவைத் தொகுதி |
மலாயா மக்கள் சோசலிச முன்னணி (மலாயா தொழிலாளர் கட்சி) |
18 மே 1964 | 10 சனவரி 1966 | |||
மலாயா தொழிலாளர் கட்சி | 10 சனவரி 1966 | 28 மே 1968 | |||||
கெராக்கான் | 28 மே 1968 | 20 மார்ச் 1969 | |||||
- | நாடாளுமன்றம் ஒத்திவைப்பு | 1969 | 1971 | ||||
3 | அசுரி மூடா (Mohamed Asri Muda) (1923–1992) பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி |
மலேசிய இசுலாமிய கட்சி | 1971 | 1973 | |||
4 | லிம் கிட் சியாங் (Lim Kit Siang) (பிறப்பு: 1941) பண்டார் மலாக்கா மக்களவைத் தொகுதி |
ஜனநாயக செயல் கட்சி | 30 சனவரி 1973 | 31 சூலை 1974 | [2] | ||
5 | ஜேம்ஸ் வோங் கிம் மின் (James Wong Kim Min) (1922–2011) மிரி மக்களவைத் தொகுதி |
சரவாக் தேசியக் கட்சி | 24 ஆகஸ்டு 1974 | 30 அக்டோபர் 1974 | |||
6 | எட்மண்ட் லாங்கு அனாக் சாகா (Edmund Langgu Anak Saga) (பிறப்பு: 1936) சரதோக் மக்களவைத் தொகுதி |
4 நவம்பர் 1974 | 4 நவம்பர் 1975 | [3] | |||
7 | லிம் கிட் சியாங் (Lim Kit Siang) (பிறப்பு: 1941) கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி (1975-1978) பெட்டாலிங் மக்களவைத் தொகுதி (1978–1982) கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி (1982-1986) தஞ்சோங் மக்களவைத் தொகுதி (1986–1999) |
ஜனநாயக செயல் கட்சி | 4 நவம்பர் 1975 | 12 சூன் 1978 | [4] | ||
31 சூலை 1978 | 29 மார்ச் 1982 | [5] | |||||
10 சூலை 1982 | 19 சூலை 1986 | [6] | |||||
8 அக்டோபர் 1986 | 4 அக்டோபர் 1990 | [7] | |||||
10 டிசம்பர் 1990 | 6 ஏப்ரல் 1995 | [8] | |||||
15 சூன் 1995 | 10 நவம்பர் 1999 | [9] | |||||
8 | பாட்சில் நூர் (Fadzil Noor) (1937–2002) பெண்டாங் மக்களவைத் தொகுதி |
மலேசிய இசுலாமிய கட்சி | 20 டிசம்பர் 1999 | 23 சூன் 2002 | [10] | ||
9 | அடி அவாங் (Abdul Hadi Awang) (பிறப்பு: 1947) மாராங் மக்களவைத் தொகுதி |
9 செப்டம்பர் 2002 | 4 மார்ச் 2004 | [11] | |||
10 | லிம் கிட் சியாங் (Lim Kit Siang) (பிறப்பு: 1941) ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி |
ஜனநாயக செயல் கட்சி | 10 மார்ச் 2004 | 13 பிப்ரவரி 2008 | [12] | ||
11 | வான் அசிசா வான் இசுமாயில் (Wan Azizah Wan Ismail) (பிறப்பு: 1952) பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி |
மக்கள் நீதிக் கட்சி (பி.கே.ஆர்) |
30 ஏப்ரல் 2008 | 28 ஆகஸ்டு 2008 | [13][14] | ||
12 | அன்வர் இப்ராகீம் (Anwar Ibrahim) (பிறப்பு: 1947) பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி |
28 ஆகஸ்டு 2008 | 3 ஏப்ரல் 2013 | [15] | |||
26 சூன்2013 | 16 மார்ச் 2015 | [16][17] | |||||
13 | வான் அசிசா வான் இசுமாயில் (Wan Azizah Wan Ismail) (பிறப்பு: 1952) பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி |
18 மே 2015 | 7 ஏப்ரல் 2018 | [18] | |||
14 | அகமத் சாகித் அமிடி (Ahmad Zahid Hamidi) (பிறப்பு: 1953) பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
18 சூலை 2018 | 12 மார்ச் 2019 | [19] | ||
15 | இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) (பிறப்பு: 1960) பெரா மக்களவைத் தொகுதி |
12 மார்ச் 2019 | 24 பிப்ரவரி 2020 | [20] | |||
16 | அன்வர் இப்ராகீம் (Anwar Ibrahim) (பிறப்பு: 1947) போர்டிக்சன் மக்களவைத் தொகுதி |
பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) |
18 மே 2020 | 24 நவம்பர் 2022 | [21] | ||
17 | அம்சா சைனுடின் (Hamzah Zainudin) (பிறப்பு: 1957) லாருட் மக்களவைத் தொகுதி |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
10 டிசம்பர் 2022 | பதவியில் உள்ளார் | [22] |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Straits Times: The big step forward, 2 November 1963, page 1; accessed 23 February 2014
- ↑ Hansard - 30 January 1973
- ↑ Hansard - 4 November 1974
- ↑ Hansard - 5 November 1975
- ↑ Hansard - 10 October 1978
- ↑ Hansard - 12 October 1982
- ↑ Hansard - 8 October 1986
- ↑ Hansard - 10 December 1990
- ↑ Hansard - 15 June 1995
- ↑ Hansard - 20 December 1999
- ↑ Hansard - 9 September 2002
- ↑ Hansard - 19 May 2004
- ↑ Hansard - 30 April 2008
- ↑ "PKR president poised to make history as first woman Opposition Leader". The Star. 20 March 2008 இம் மூலத்தில் இருந்து 21 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110521101825/http://thestar.com.my/news/story.asp?file=%2F2008%2F3%2F20%2Fnation%2F20702955&sec=nation.
- ↑ Hansard - 28 August 2008
- ↑ Hansard - 26 June 2013
- ↑ "Anwar disqualified as MP since Mar 16, says speaker". The Malaysian Times. 1 April 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015.
- ↑ Hansard - 18 May 2015
- ↑ Hansard - 18 July 2018
- ↑ Hansard - 12 March 2019
- ↑ Hansard - 13 July 2020
- ↑ Hansard - 19 December 2022
வெளி இணைப்புகள்
[தொகு]- Parliament of Malaysia (Official site)