உள்ளடக்கத்துக்குச் செல்

மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வகை மீநாயகன்
மூலம்மார்வெல் காமிக்ஸ்
நடிப்பு
  • மார்வெல் தொலைக்காட்சி தொடர் நடிகர்கள்
  • மார்வெல் ஸ்டுடியோஸ் தொடர் நடிகர்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்
அத்தியாயங்கள்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசை
ஒளிபரப்பான காலம்
  • மார்வெல் தொலைக்காட்சி
(செப்டம்பர் 24, 2013 - அக்டோபர் 16, 2020)
வெளியிணைப்புகள்
இணையதளம்

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் தொடர்கள் (ஆங்கில மொழி: Marvel Cinematic Universe television series) என்பது மார்வெல் காமிக்ஸ் வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க நாட்டு மீநாயகன் தொலைக்காட்சி தொடர் ஆகும். அவை மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் மார்வெல் தொலைக்காட்சியை உருவாக்கிய பின்னர் மார்வெல் திரைப் பிரபஞ்சம் முதன்முதலில் தொலைக்காட்சிக்கு விரிவடைந்தது. அத்துடன் ஏபிசி நிறுவனத்துடன் கையொப்பம் செய்யப்பட்டு ஏபிசி ஸ்டுடியோஸ் மூலம் செப்டம்பர் 2013 முதல் அக்டோபர் 2020 வரை 12 தொடர்களை உருவாக்கியது. இவை ஏபிசி மற்றும் ஃப்ரீஃபார்ம் போன்ற தொலைக்காட்சியிலும் நெற்ஃபிளிக்சு மற்றும் ஹுலு போன்ற இணையதளத்திலும் ஒளிபரப்பப்பட்டது. முக்கிய ஏபிசி தொலைக்காட்சி தொடர்கள் திரைப்படங்களில் தோன்றிய கதாபாத்திரைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டடுள்ளது. அவை 'மார்வெல் ஹீரோஸ்' தொடர் என குறிப்பிடப்பட்டன. நெற்ஃபிளிக்சு இணையத்துக்காக தயாரிக்கப்பட்ட தொடர் குழுவை "மார்வெல் நைட்ஸ்" தொடர் என்று அழைக்கப்பட்டது. ஃப்ரீஃபார்ம் மற்றும் ஹுலுவுக்காக இளம் வயதுவந்தோரை கவனம் செலுத்தி தொடர்கள் தயாரிக்கப்பட்டன. இது 2019 டிசம்பரில் மார்வெல் தொலைக்காட்சி மூடப்படுவதற்கு முன்னர் 'அட்வென்ச்சர் இன் ஃபியர்' தொடர் குழு என்று அழைக்கப்பட்டது.

திரைப்படங்களுக்குப் பின்னால் உள்ள தயாரிப்பு ஸ்டுடியோவான மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் டிஸ்னி+ என்ற கோரிய நேரத்து ஒளிதம் சேவைக்காக தங்கள் சொந்தத் தொடரைத் தயாரிக்கத் தொடங்கியது, இதில் முதலாவது தொடர் ஜனவரி 2021 இல் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து குறைந்தது பதினொரு தொடர்கள் தயாரிக்கப்படுகின்றது. இவை படங்களிலிருந்து வரும் துணைக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுகின்றது. இவை மார்வெல் தொலைக்காட்சித் தொடர்களைக் காட்டிலும் மிகப் பெரிய பொருள் செலவை கொண்டுள்ளன, மேலும் மார்வெல் தொலைக்காட்சித் தொடர்கள் என்று இல்லாத வகையில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களுடன் ஒன்றோடொன்று இணைகின்றன.

வளர்ச்சி

[தொகு]

ஜூன் 2010 இல் ஜெப் லோப் என்பவரை தலைவராக நியமிக்கப்பட்டு மார்வெல் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. பின்னர் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் திரைப்பட உரிமையினால் ஈர்க்கப்பட்ட பல தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2015 இல் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்டது.[1]

இது மார்வெல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பிரிவுகளுக்கு இடையே இருக்கும் பிளவுகளை விரிவுபடுத்துவதாகக் காணப்பட்டது, மேலும் இந்தத் தொடரின் நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரங்கள் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் திரைப்படங்களுடன் ஒத்துப்போகாதவாறு எடுக்கப்பட்டதுள்ளது. அதே நேரத்தில் மார்வெல் ஸ்டுடியோவின் குறிப்பிடத்தக்க ஈடுபாட்டைக் கொண்டிருந்த ஒரே மார்வெல் தொலைக்காட்சித் தொடர் ஏஜென்ட் கார்ட்டர் ஆகும். இது கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்த பெக்கி கார்ட்டர் என்பவரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2018 வாக்கில் மார்வெல் ஸ்டுடியோஸ் டிஸ்னியின் புதிய ஓடிடி தளமான டிஸ்னி+ க்காக பல வரையறுக்கப்பட்ட தொடர்களை உருவாக்கி வருகிறது.

மார்வெல் தொலைக்காட்சி

[தொகு]

ஏபிசி தொடர்கள்

[தொகு]

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக மார்வெல் தொலைக்காட்சி உருவாக்கிய முதல் தொலைக்காட்சித் தொடர் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[2] ஆகும். இது ஆகஸ்ட் 2012 இல் ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சனவரி 2014 இல் ஏஜென்ட் கார்ட்டர் தொடர் அறிவிக்கப்பட்டு, இரண்டு பருவங்களாக ஒளிபரப்பானது.

தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு அலைவரிசை
முதலில் ஒளிபரப்பப்பட்டது கடைசியாக ஒளிபரப்பப்பட்டது
ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்[3] 1 22 24 செப்டம்பர் 2013 13 மே 2014 ஏபிசி
2 23 செப்டம்பர் 2014 14 மே 2015
3 29 செப்டம்பர் 2015 17 மே 2016
4 20 செப்டம்பர் 2016 16 மே 2017
5 1 டிசம்பர் 2017 18 மே 2018
6 13 10 மே 2019 2 ஆகஸ்ட் 2019
7 27 மே 2020 12 ஆகஸ்ட் 2020
ஏஜென்ட் கார்ட்டர்[4] 1 8 6 ஜனவரி 2015 24 பிப்ரவரி 2015
2 10 19 ஜனவரி 2016 1 மார்ச் 2016
இன்கியுமன்சு[5][6] 1 8 29 செப்டம்பர் 2017 10 நவம்பர் 2017

நெற்ஃபிளிக்சு தொடர்கள்

[தொகு]

அக்டோபர் 2013 வாக்கில், மார்வெல் நிறுவனம் நெற்ஃபிளிக்சு மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடித் தளத்திற்கு தொடர்களை தயாரிக்க தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் நான்கு நாடகத் தொடர்களும் மற்றும் குறும்தொடர்களும் கோரிய நேரத்து ஒளித சேவைகள் கீழ் தயாரிக்க முன் வந்தது. அதை தொடர்ந்து டேர்டெவில், ஜெசிகா ஜோன்சு, அயன் பிஸ்ட் மற்றும் லூக் கேஜ் ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி தொடர்களை நெற்ஃபிளிக்சு வழங்குவதாக டிஸ்னி அடுத்த மாதம் அறிவித்தது.

வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மார்வெல் தொடர்கள் ஒளிபரப்பிய பின்னர், நெற்ஃபிளிக்சு அனைத்து தொடர்களையும் பிப்ரவரி 2019 இறுதிக்குள் ரத்து செய்தது, ஆனால் தற்போதுள்ள பருவங்களை தொடர்ந்தும் பார்க்க முடியும். இந்த தொடர்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு நெற்ஃபிளிக்சு அல்லாத தொடர்கள் அல்லது திரைப்படங்களில் இந்த கதாபாத்திரங்கள் தோன்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு அலைவரிசை
டேர்டெவில்[7] 1 13 10 ஏப்ரல் 2015 நெற்ஃபிளிக்சு
2 18 மார்ச் 2016
3 19 அக்டோபர் 2018
ஜெசிகா ஜோன்சு[8] 1 13 20 நவம்பர் 2015
2 8 மார்ச் 2018
3 14 ஜூன் 2019
லூக் கேஜ் 1 13 30 செப்டம்பர் 2016
2 22 ஜூன் 2018
அயன் பிஸ்ட் 1 13 17 மார்ச் 2017
2 7 செப்டம்பர் 2018
தி டிபென்டெர்சு[9] 1 8 18 ஆகஸ்ட் 2017
தி பனிஷர்[10] 1 13 17 நவம்பர் 2017
2 18 ஜனவரி 2019

இளம் வயதுவந்தோருக்கான தொடர்கள்

[தொகு]
தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு அலைவரிசை
முதலில் ஒளிபரப்பப்பட்டது கடைசியாக ஒளிபரப்பப்பட்டது
ரன்வேஸ்[11] 1 10 21 நவம்பர் 2017 9 ஜனவரி 2018 குலு
2 13 21 டிசம்பர் 2018
3 10 13 டிசம்பர் 2019
கிலோங்க் & டக்ஜ்ர் 1 10 7 ஜூன் 2018 2 ஆகஸ்ட் 2018 ஃப்ரீஃபார்ம்
1 4 ஏப்ரல் 2019 30 மே 2019

பயம் நிறைந்த சாகசத் தொடர்கள்

[தொகு]
தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு அலைவரிசை
ஹெல்ஸ்ட்ராம் 1 10 16 அக்டோபர் 2020 ஹுலு

மார்வெல் ஸ்டுடியோஸ்

[தொகு]

நான்காம் கட்டம்

[தொகு]

நான்காம் கட்டத்தில் உள்ள அனைத்து தொடர்களும் டிஸ்னி+ இல் வெளியிடப்படுகின்றன.

தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு திரைக்கதை இயக்குனர்
முதலில் ஒளிபரப்பப்பட்டது கடைசியாக ஒளிபரப்பப்பட்டது
வாண்டாவிஷன் 1 9 சனவரி 15, 2021 (2021-01-15) மார்ச்சு 5, 2021 (2021-03-05) ஜாக் ஷாஃபர்[12] மாட் ஷக்மேன்[13]
பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் 1 6 மார்ச்சு 19, 2021 (2021-03-19) ஏப்ரல் 23, 2021 (2021-04-23) மால்கம் சுபெல்மேன்[14] காரி சுகோக்லாண்ட்[15]
லோகி 1 6 சூன் 9, 2021 (2021-06-09) சூலை 14, 2021 (2021-07-14) மைக்கேல் வால்ட்ரான்[16] கேட் ஹெரான்[17]
வாட் இப்...? 1 9 ஆகத்து 11, 2021 (2021-08-11) அக்டோபர் 6, 2021 (2021-10-06) ஏ.சி. பிராட்லி[18] பிரையன் ஆண்ட்ரூஸ்
ஹாக்ஐ 1 6[19] நவம்பர் 24, 2021 (2021-11-24)[20] திசம்பர் 22, 2021 (2021-12-22)[21] ஜொனாதன் இக்லா[22] ரைஸ் தாமஸ், பெர்ட் மற்றும் பெர்டி[23]
மூன் நைட் 1 6[24] மார்ச்சு 30, 2022 (2022-03-30)[25] மே 4, 2022 (2022-05-04) ஜெர்மி ஸ்லேட்டர்[26] முகமது தியாப், ஜஸ்டின் பென்சன், ஆரோன் மூர்ஹெட்[27]
மிஸ். மார்வெல் 1 6[28] சூன் 8, 2022 (2022-06-08) சூலை 13, 2022 (2022-07-13)[29] பிஷா கே. அலி அடில் எல் அர்பி மற்றும் பிலால் ஃபல்லாஹ், ஷர்மீன் ஒபைட்-சினாய், மீரா மேனன்[30]
சீ-ஹல்க் 1 9 ஆகத்து 17, 2022 (2022-08-17) அக்டோபர் 12, 2022 (2022-10-12)[31] ஜெசிக்கா காவோ[32] கேட் கொய்ரோ, அனு வாலியா[33]
பெயரிடப்படாத மார்வெல் ஹாலோவீன் சிபெஷல் சிறப்பு அக்டோபர் 2022 (2022-10) மைக்கேல் ஜெய்சினோ[34]
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி ஹாலிடே சிபெஷல் சிறப்பு திசம்பர் 2022 (2022-12) ஜேம்ஸ் கன்

ஐந்தாம் கட்டம்

[தொகு]
தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு திரைக்கதை இயக்குனர்
முதலில் ஒளிபரப்பப்பட்டது கடைசியாக ஒளிபரப்பப்பட்டது
வாட் இப்...? 2 2 9 2023 (2023) ஏ.சி. பிராட்லி பிரையன் ஆண்ட்ரூஸ்
சீக்ரெட் இன்வேசன் 1 6 2023 (2023) கயில் பிராட்ஸ்ட்ரீட்டு அலி செலிம் & தாமஸ் பெசுச்சா
எக்கோ 1 6 2023 (2023) மரியன் டேயர் சிட்னி பிரீலாண்ட் & கத்ரியோனா மெக்கென்சி
லோகி 2 2 6 2023 (2023) எரிக் மார்டின் ஜஸ்டின் பென்சன் & ஆரோன் மூர்ஹெட்
அயன்ஹார்டு 1 6 2023 (2023) சினக்க கோட்ஜ் சாம் பெய்லி & ஏஞ்சலா பார்ன்ஸ்

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Andreeva, Natalie (June 28, 2010). "Marvel Entertainment Launches TV Division". Deadline Hollywood. Archived from the original on January 9, 2016. பார்க்கப்பட்ட நாள் January 9, 2016.
  2. Goldberg, Lesley (April 1, 2014). "'Agents of SHIELD' EPs Respond to Critics: Don't Expect a Marvel Movie Every Week". The Hollywood Reporter. Archived from the original on September 27, 2014. பார்க்கப்பட்ட நாள் September 27, 2014.
  3. Andreeva, Nellie (August 28, 2012). "ABC Greenlights 'S.H.I.E.L.D' Marvel Pilot, Joss Whedon To Co-Write & Possibly Direct". Deadline Hollywood. Archived from the original on August 29, 2012. பார்க்கப்பட்ட நாள் August 28, 2012.
  4. Goldberg, Lesley (January 17, 2014). "Marvel's 'Agent Carter': Hayley Atwell, Writers, Showrunners Confirmed for ABC Drama". The Hollywood Reporter. Archived from the original on May 10, 2014. பார்க்கப்பட்ட நாள் January 18, 2014.
  5. "'Marvel's The Inhumans' Coming To IMAX & ABC in 2017". Marvel.com. November 14, 2016. Archived from the original on November 15, 2016. பார்க்கப்பட்ட நாள் November 14, 2016.
  6. Goldberg, Lesley (November 14, 2016). "Marvel, ABC Set 'The Inhumans' TV Series". The Hollywood Reporter. Archived from the original on November 15, 2016. பார்க்கப்பட்ட நாள் November 14, 2016.
  7. "Steven S. DeKnight Joins 'Marvel's Daredevil'". Marvel.com. May 24, 2014. Archived from the original on May 24, 2014. பார்க்கப்பட்ட நாள் May 24, 2014.
  8. "Marvel TV head: 'Daredevil' starts shooting in July, 'Jessica Jones' next up". HitFix. March 24, 2014. Archived from the original on March 25, 2014. பார்க்கப்பட்ட நாள் March 25, 2014.
  9. Otterson, Joe (December 12, 2018). "Don't Expect 'The Defenders' on Disney Streaming Service Any Time Soon (Exclusive)". Variety. Archived from the original on December 12, 2018. பார்க்கப்பட்ட நாள் December 13, 2018.
  10. Patten, Dominic (February 18, 2019). "'The Punisher' & 'Jessica Jones' Canceled By Netflix; Latter's 3rd Season Still To Air". Deadline Hollywood. Archived from the original on February 18, 2019. பார்க்கப்பட்ட நாள் February 18, 2019.
  11. Goldberg, Lesley (July 27, 2017). "Hulu's 'Runaways' "Lives in the Same World" as Other Marvel Fare". The Hollywood Reporter. Archived from the original on July 28, 2017. பார்க்கப்பட்ட நாள் July 28, 2017.
  12. Kit, Borys (January 9, 2019). "Marvel's 'Vision and Scarlet Witch' Series Lands 'Captain Marvel' Writer (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on January 10, 2019. பார்க்கப்பட்ட நாள் January 10, 2019.
  13. Couch, Aaron (August 23, 2019). "Marvel Unveils 3 New Disney+ Shows Including 'She-Hulk' and 'Moon Knight'". The Hollywood Reporter. Archived from the original on August 23, 2019. பார்க்கப்பட்ட நாள் August 23, 2019.
  14. Kroll, Justin; Otterson, Joe (October 30, 2018). "Falcon-Winter Soldier Limited Series in the Works With 'Empire' Writer (Exclusive)". Variety. Archived from the original on October 31, 2018. பார்க்கப்பட்ட நாள் October 31, 2018.
  15. Fleming, Mike Jr. (May 20, 2019). "Kari Skogland To Direct 6-Part 'The Falcon And The Winter Soldier' Miniseries With Anthony Mackie, Sebastian Stan, Daniel Bruhl & Emily Van Camp". Deadline Hollywood. Archived from the original on May 21, 2019. பார்க்கப்பட்ட நாள் May 20, 2019.
  16. Kit, Borys (February 15, 2019). "Marvel's 'Loki' Series Lands 'Rick and Morty' Writer (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on February 18, 2019. பார்க்கப்பட்ட நாள் February 18, 2019.
  17. Vejvoda, Jim (August 24, 2019). "Loki Will Take Character "to an Entirely New Part of the MCU"". IGN. Archived from the original on August 24, 2019. பார்க்கப்பட்ட நாள் August 24, 2019.
  18. Radulovic, Petrana (August 24, 2019). "Everything we learned at D23's Disney Plus presentation". Polygon. Archived from the original on August 24, 2019. பார்க்கப்பட்ட நாள் August 24, 2019.
  19. Hussaini, Syed Fahadullah (August 31, 2021). "Hawkeye Show Episode Count Revealed". Screen Rant. Archived from the original on September 1, 2021. பார்க்கப்பட்ட நாள் September 2, 2021.
  20. Holub, Christian (July 29, 2021). "Clint Barton finally meets Kate Bishop in Hawkeye first look". Entertainment Weekly. Archived from the original on July 29, 2021. பார்க்கப்பட்ட நாள் July 29, 2021.
  21. Oddo, Marco Vito (October 20, 2021). "New 'Hawkeye' TV Spot Reveals the Comic Book Mercenary Kazi, a.k.a. Clown". Collider. Archived from the original on October 20, 2021. பார்க்கப்பட்ட நாள் October 20, 2021.
  22. Kit, Borys (September 6, 2019). "Marvel's 'Hawkeye' Series Finds Its Writer With 'Mad Men' Scribe (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on September 6, 2019. பார்க்கப்பட்ட நாள் September 6, 2019.
  23. Kit, Borys (July 17, 2020). "Marvel's 'Hawkeye' Disney+ Series Lands 'Troop Zero,' 'Comrade Detective' Directors (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 17, 2020. பார்க்கப்பட்ட நாள் July 18, 2020.
  24. Goldberg, Matt (January 11, 2021). "How Long Are Marvel's Disney+ Shows? Kevin Feige Talks 'Loki', 'Falcon and the Winter Soldier', and 'She-Hulk'". Collider. Archived from the original on January 11, 2021. பார்க்கப்பட்ட நாள் January 11, 2021.
  25. Hipes, Patrick (November 12, 2021). "Disney+ Day: All The Streamer's Film & TV News From Premiere Dates To Series Orders". Deadline Hollywood. Archived from the original on November 12, 2021. பார்க்கப்பட்ட நாள் November 12, 2021.
  26. Kit, Borys; Goldberg, Lesley (November 8, 2019). "Marvel's 'Moon Knight' Series Finds Its Head Writer With 'Umbrella Academy' Series Creator (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on November 8, 2019. பார்க்கப்பட்ட நாள் November 8, 2019.
  27. Kit, Borys (January 8, 2021). "Marvel's 'Moon Knight': Indie Auteurs Justin Benson and Aaron Moorhead Board as Directors (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on January 8, 2021. பார்க்கப்பட்ட நாள் January 8, 2021.
  28. Frater, Patrick (May 11, 2021). "'Ms. Marvel' Series Completes Production in Thailand Despite Virus Resurgence (Exclusive)". Variety. Archived from the original on May 11, 2021. பார்க்கப்பட்ட நாள் May 11, 2021.
  29. Roberts, Kayleigh (May 16, 2022). "Here's When Every Episode of 'Ms. Marvel' Comes Out". Cosmopolitan. Archived from the original on May 17, 2022. பார்க்கப்பட்ட நாள் May 16, 2022.
  30. Couch, Aaron (September 18, 2020). "'Ms. Marvel' Finds Directors in Pakistani Oscar Winner, 'Bad Boys For Life' Filmmakers (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on September 18, 2020. பார்க்கப்பட்ட நாள் September 18, 2020.
  31. Spencer, Samuel (May 18, 2022). "'She-Hulk: Attorney at Law' Disney+ Release Date, Cast, Trailer, Plot". Newsweek. Archived from the original on May 18, 2022. பார்க்கப்பட்ட நாள் May 18, 2022.
  32. Kit, Borys (November 8, 2019). "Marvel's 'She-Hulk' Finds Its Head Writer With 'Rick and Morty' Scribe (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on November 8, 2019. பார்க்கப்பட்ட நாள் November 8, 2019.
  33. Paige, Rachel (December 10, 2020). "Tatiana Maslany Stars in new 'She-Hulk' Comedy Series Coming to Disney+". Marvel.com. Archived from the original on December 11, 2020. பார்க்கப்பட்ட நாள் December 10, 2020.
  34. Kit, Borys (March 11, 2022). "Composer Michael Giacchino to Direct Marvel's Halloween Special". The Hollywood Reporter. Archived from the original on March 11, 2022. பார்க்கப்பட்ட நாள் March 11, 2022.