முசாபர்நகர் மாவட்டம்
முசாபர்நகர் மாவட்டம் मुज़फ़्फ़रनगर ज़िला مُظفٌر نگر ضلع | |
---|---|
முசாபர்நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | சகாரன்பூர் கோட்டம் |
தலைமையகம் | முசாபர்நகர் |
பரப்பு | 2,991 km2 (1,155 sq mi) |
மக்கட்தொகை | 4143512 (2011) |
படிப்பறிவு | 69.12% |
பாலின விகிதம் | 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் |
வட்டங்கள் | 4 |
மக்களவைத்தொகுதிகள் | முசாபர்நகர், கைரானா |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | கைரானா, தானா பவன், ஷாம்லி, புடானா, சர்தாவல், முசாபர்நகர், கதவுலி, புர்காசி, மீராப்பூர் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
முசாபர்நகர் மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தின் தலைமையிடம் முசாபர்நகர் ஆகும்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]2991 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் முசாபர்நகர், புதானா, ஜன்சத் மற்றும் கதௌலி என நான்கு வருவாய் வட்டங்களும், 704 வருவாய் கிராமங்கள், 10 உள்ளாட்சி அமைப்புகள், 9 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 21 காவல் நிலையங்கள் கொண்டுள்ளது.
அரசியல்
[தொகு]இந்த மாவட்டத்தில் கைரானா, தானா பவன், ஷாம்லி, புடானா, சர்தாவல், முசாபர்நகர், கதவுலி, புர்காசி, மீராப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.[1] இந்த மாவட்டத்தின் பகுதிகள் முசாபர்நகர், கைரானா ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2991 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முசாபர்நகர் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 41,43,512 ஆகும். அதில் ஆண்கள் 21,93,434; பெண்கள் 19,50,078 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 69.12% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6,46,062 ஆகவுள்ளனர்.
மக்கள்தொகையில் இந்துக்கள் 57.51 %, இசுலாமியர்கள் 41.30 %, சீக்கியர்கள் 0.45 %, கிறித்தவர்கள் 0.16 %, சமணர்கள் 0.39 %, மற்றவர்கள் 0.19% ஆகவுள்ளனர்.[2] இம்மாவட்டத்தில் இந்தி மொழி 87.02% மற்றும் உருது மொழி 12.58% மக்களால் முதல் மொழியாகப் பேசப்படுகிறது.
மேலும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.
- ↑ Muzaffarnagar District : Census 2011
இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- உத்தரப் பிரதேசம் மாநில அரசின் இணயதளம் [1] பரணிடப்பட்டது 2007-02-02 at the வந்தவழி இயந்திரம்