உள்ளடக்கத்துக்குச் செல்

முச்சோடியம் போரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முச்சோடியம் போரேட்டு (ஐயுபிஏசி)
பெயர்கள்
வேறு பெயர்கள்
முச்சோடியம் ஆர்த்தோபோரேட்டு; சோடியம் ஆர்த்தோபோரேட்டு; சோடியம் போரேட்டு
இனங்காட்டிகள்
1333-73-9 N
EC number 215-604-1
InChI
  • InChI=1S/BO3.3Na/c2-1(3)4;;;/q-3;3*+1 N
    Key: BSVBQGMMJUBVOD-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159383
  • B([O-])([O-])[O-].[Na+].[Na+].[Na+]
பண்புகள்
வாய்ப்பாட்டு எடை 127.78
அடர்த்தி 1.73 கி/செ.மீ3[1]
உருகுநிலை 75 °C (167 °F; 348 K) [1]
கொதிநிலை 320 °C (608 °F; 593 K) [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

முச்சோடியம் போரேட்டு (Trisodium borate) என்பது சோடியம், போரான் மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு வேதியியல் சேர்மம் ஆகும். இது Na3BO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. (Na+)3[BO3]3− என்றும் இவ்வய்ப்பாட்டை எழுதலாம்.[2] ஆர்த்தோபோரேட்டு அயனியை [BO3]3− கொண்ட உப்பு வகையாக முச்சோடியம் போரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.

முச்சோடியம் ஆர்த்தோபோரேட்டு, சோடியம் ஆர்த்தோபோரேட்டு அல்லது சோடியம் போரேட்டு என்று பல பெயர்களில் முச்சோடியம் போரேட்டு அழைக்கப்படுகிறது. இருப்பினும், "சோடியம் ஆர்த்தோபோரேட்டு" (Na4B2O5) என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு சேர்மத்திற்காகவும் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் மெட்டாபோரேட்டும் (NaBO2) முச்சோடியம் போரேட்டும் சமமாக கலந்திருப்பதை சோடியம் ஆர்த்தோபோரேட்டு சேர்மம் ஒத்திருக்கும்.[3] பல போரேட் அயனிகளுடன் சோடியம் சேர்ந்து உருவாகும் உப்புக்கு சோடியம் போரேட்டு என சில சமயங்களில் பொதுவான பொருளிலும் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

சோடியம் கார்பனேட்டு (Na2CO3) சோடியம் மெட்டாபோரேட்டு அல்லது (NaBO2) அல்லது போரிக் ஆக்சைடு (B2O3) உடன் சேர்க்கப்பட்டு 600 மற்றும் 850 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்பட்டால் ஆர்த்தோ போரேட்டும் கார்பனீராக்சைடும் உருவாகின்றன:[2]

NaBO2 + Na2CO3Na3BO3 + CO2

உருகலில் இருந்து தூய வடிவில் பெறுவது கடினமாகும்.[4]

வினைகள்

[தொகு]

நீரில் கரைக்கப்படும் போது, ஆர்த்தோபோரேட்டு எதிர்மின் அயனியானது பகுதியளவு நீராற்பகுப்பு அடைந்து மெட்டா போரேட்டு [BO2]] மற்றும் ஐதராக்சைடாக (HO) ஆக மாற்றமடைகிறது.[2]

[BO3]3− +  H2O is in equilibrium with [BO2] + 3HO

சோடியம் ஆர்த்தோபோரேட்டு கரைசலை மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் நேர்மின்முனையில் சோடியம் பெர்போரேட்டு உருவாகிறது.[5] [6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Trisodium borate"[தொடர்பிழந்த இணைப்பு] Product page in the World Of Chemicals website. Accessed on 2022-06-27.
  2. 2.0 2.1 2.2 Pasupathy Rajan Subbaiyan (2003): "Study of Trisodium Borate Formation and Its Reaction with Green Liquor in Partial Autocausticizing". Masters Thesis, Western Michigan University.
  3. Daniel L. Calabretta and Boyd R. Davis (2007) "Investigation of the anhydrous molten Na–B–O–H system and the concept: Electrolytic hydriding of sodium boron oxide species". Journal of Power Sources, volume 164, issue 2, pages 782-791. எஆசு:10.1016/j.jpowsour.2006.11.023
  4. G. W. Morey and H. E. Merwin (1936): "Phase Equilibrium Relationships in the Binary System, Sodium Oxide-Boric Oxide, with Some Measurements of the Optical Properties of the Glasses". Journal of the American Chemical Society, volume 58, issue 11, pages 2248–2254. எஆசு:10.1021/ja01302a04
  5. Wilfrid Gustav Polack (1915): "The anodic behaviour of alkaline borate and perborate solutions". Transactions of the Faraday Society, volume 10, pages 177-196. எஆசு:10.1039/TF9151000177
  6. Tanatar (1898): Zh. Pys. Chem., volume 26, page 132.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முச்சோடியம்_போரேட்டு&oldid=3629547" இலிருந்து மீள்விக்கப்பட்டது