உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் மிண்டோ பிரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் மிண்டோ பிரபு
மிண்டோ பிரபு
இந்தியத் தலைமை ஆளுநர், வில்லியம் கோட்டை
பதவியில்
31 சூலை 1807 – 4 அக்டோபர் 1813
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் ஜார்ஜ்
முன்னையவர்சர் ஜார்ஜ் பார்லோ
தற்காலிக தலைமை ஆளுநர்
பின்னவர்மொய்ரா பிரபு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1751-04-23)23 ஏப்ரல் 1751
எடின்பர்க்
இறப்பு21 சூன் 1814(1814-06-21) (அகவை 63)
ஸ்டீவனேஜ், ஹெர்ட்போர்டுசயர்
தேசியம்ஸ்காட்லாந்து
துணைவர்அன்னா மரியா (d. 1829)
முன்னாள் கல்லூரிஎடின்பர்க் பல்கலைக்கழகம்
கிறிஸ்ட் சர்ச், ஆக்ஸ்போர்டு

முதலாம் மிண்டோ பிரபு, கில்பர்ட்-எலியட்-முறே-கினின்மௌன்டு (Gilbert Elliot-Murray-Kynynmound, 1st Earl of Minto, 23 ஏப்ரல் 1751 – 21 சூன் 1814) ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்தவரான இவர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜதந்திரியும் ஆவார். இவர் பிரிவி கௌன்சில் உறுப்பினராகவும், பின்னர் பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராக 31 சூலை 1807 முதல் 4 அக்டோபர் 1813 முடிய பணியாற்றியவர். [1]

மிண்டோ-மார்லே சீர்திருத்தங்கள்

[தொகு]

காலனிய மாகாண நிருவாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்க மிண்டோ பிரபுவும், ஜான் மார்லேவும் இணைந்து சில பரிந்துரைகளை ஐக்கிய இராச்சியத்தின் மன்னருக்கு அனுப்பி வைத்தனர்.[2] இச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த பிரித்தானியப் பேரரசு 1909ஆம் ஆண்டில் இந்திய அரசுச் சட்டம், 1909 இயற்றியது. இதன் சிறப்புகள்:

  • இந்திய மாகாண சட்டமன்றங்களுக்குத் இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னர் இந்திய உறுப்பினர்கள் மாகாண ஆளுநர்களால் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்தனர். மேலும் சட்டமன்றங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
  • சட்டமன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் முசுலிம்களுக்கு தனி இடங்கள் (25%) ஒதுக்கப்பட்டன. முசுலிம் உறுப்பினர்களை முசுலிம்களே தேர்ந்தெடுக்க தனித்தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.
  • தலைமை ஆளுனர் மற்றும் மாநில ஆளுனர்களின் நிருவாகக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு அதில் சில இந்தியர்களுக்கும் இடமளிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_மிண்டோ_பிரபு&oldid=4059589" இலிருந்து மீள்விக்கப்பட்டது