உள்ளடக்கத்துக்குச் செல்

யோகான்னசு வான் டெர் வால்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகான்னசு வான் டெர் வால்சு
Johannes van der Waals
பிறப்பு(1837-11-23)23 நவம்பர் 1837
லைடன், நெதர்லாந்து
இறப்பு8 மார்ச்சு 1923(1923-03-08) (அகவை 85)
ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து
தேசியம்டச்சு
துறைஇயற்பியல்
பணியிடங்கள்ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்லைடன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பீட்டர் ரிச்கி
அறியப்படுவதுநிலைச் சமன்பாடு, மூலக்கூற்றிடை விசைகள்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1910)

யோகான்னசு வான் டெர் வால்சு (Johannes Diderik van der Waals; 23 நவம்பர் 1837 – 8 மார்ச் 1923) என்பவர் டச்சு கோட்பாட்டுவாத இயற்பியலாளரும், வெப்பவியக்கவியலாளரும், ஆவார். வளிமங்கள் மற்றும் நீர்மங்களின் நிலை சமன்பாடு பற்றிய இவரது ஆய்வுகள் புகழ் பெற்றவையாகும். இவருக்கு 1910 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரது பெயர் முக்கியமாக வளிமங்களின் நடத்தைகளைப் பற்றியும், அவற்றின் திரவ நிலை ஒடுக்கம்[1] பற்றியும் கூறும் வான் டெர் வால்சு நிலைச் சமன்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் நிலையான மூலக்கூறுகளுக்கிடையேயான வான் டெர் வால்ஸ் விசை உடனும்[2], இவ்விசைகளால் கட்டுப்பட்ட சிறிய மூலக்கூற்றுக் கொத்துகள் வான் டெர் வால்சு மூலக்கூறுகளுடனும், வான் டெர் வால்சு ஆரைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. van der Waals, JD (1873) Over de Continuiteit van den Gas- en Vloeistoftoestand (on the continuity of the gas and liquid state). PhD thesis (excerpt), Leiden, The Netherlands.
  2. Tang, K.-T. and Toennies, J. P. (2010), Johannes Diderik van der Waals: A Pioneer in the Molecular Sciences and Nobel Prize Winner in 1910. Angewandte Chemie International Edition, 49: 9574–9579. எஆசு:10.1002/anie.201002332

வெளி இணைப்புகள்

[தொகு]