ராஜ்பூர் சோனார்பூர்
ராஜ்பூர் சோனர்பூர் | |
---|---|
நகரம் | |
Interactive Map Outlining Rajpur Sonarpur | |
ஆள்கூறுகள்: 22°26′18″N 88°25′55″E / 22.4382026°N 88.4320450°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
கோட்டம் | இராஜதானி |
மாவட்டம் | தெற்கு 24 பர்கானா மாவட்டம் |
பகுதி | பெருநகர கொல்கத்தா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ராஜ்பூர் சோனாபூர் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 49.26 km2 (19.02 sq mi) |
ஏற்றம் | 9 m (30 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,24,368 |
• அடர்த்தி | 8,600/km2 (22,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி[1][2] |
• கூடுதல் மொழி | ஆங்கிலம்[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 700070, 700084, 700094, 700096, 700103, 700145, 700146, 700147, 700148, 700149, 700150, 700151, 700152, 700153, 700154 |
தொலைபேசி குறியீடு எண் | +91 33 |
வாகனப் பதிவு | WB-19 |
மக்களவைத் தொகுதி | ஜாதவ்பூர் |
சட்டமன்றத் தொகுதி | சோனார்பூர் வடக்கு & சோனார்பூர் தெற்கு |
இணையதளம் | www |
ராஜ்பூர் சோனார்பூர் (Rajpur Sonarpur), இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்திலுள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இந்நகரம் பெருநகர கொல்கத்தா பகுதியின் அங்கமாக உள்ளது.[3] இது ராஜ்பூர் மற்றும் சோனார்பூர் எனும் இரட்டை நகரங்கள் ஆகும். ராஜ்பூர் சோனார்பூர் நகராட்சி இவ்விரு நகரங்களை இணைக்கிறது. இந்நகரம் கொல்கத்தாவிற்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகில் நரேந்திரபூர் நகரம் உள்ளது.
போக்குவரத்து
[தொகு]ராஜ்பூர் சோனர்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்[4] மாவட்டத் தலைமையிடமான ஆலிப்பூர் நகரத்தையும் மற்றும் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவையும் மின்சார புறநகர இரயில்வே இணைக்கிறது.[5]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 35 வார்டுகளும், 1,06,604 வீடுகளும் கொண்ட ராஜ்பூர் சோனார்பூர் நகரத்தின் மக்கள் தொகை 4,24,368 ஆகும். அதில் ஆண்கள் 215405 மற்றும் பெண்கள் 208963 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 35274 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 90.14% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 78, 655 மற்றும் 1143 ஆகவுள்ளனர்.[6]
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.34%, இசுலாமியர் 9.25%, சீக்கியர்கள் 0.10%, கிறித்தவர்கள் 0.40% மற்றும் பிறர் 0.91% ஆகவுள்ளனர்.[7]
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், ராஜ்பூர் சோனார்பூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 25.4 (77.7) |
27.7 (81.9) |
31.4 (88.5) |
33.1 (91.6) |
33.4 (92.1) |
32.3 (90.1) |
30.7 (87.3) |
30.8 (87.4) |
31.2 (88.2) |
30.8 (87.4) |
28.1 (82.6) |
25.1 (77.2) |
30 (86) |
தினசரி சராசரி °C (°F) | 19.9 (67.8) |
22.7 (72.9) |
27 (81) |
29.3 (84.7) |
30 (86) |
29.5 (85.1) |
28.5 (83.3) |
28.6 (83.5) |
28.5 (83.3) |
27.5 (81.5) |
23.5 (74.3) |
20 (68) |
26.25 (79.25) |
தாழ் சராசரி °C (°F) | 14.5 (58.1) |
17.7 (63.9) |
22.6 (72.7) |
25.6 (78.1) |
26.7 (80.1) |
26.8 (80.2) |
26.4 (79.5) |
26.4 (79.5) |
25.9 (78.6) |
24.2 (75.6) |
19 (66) |
14.6 (58.3) |
22.53 (72.56) |
பொழிவு mm (inches) | 14 (0.55) |
17 (0.67) |
20 (0.79) |
34 (1.34) |
96 (3.78) |
244 (9.61) |
323 (12.72) |
322 (12.68) |
321 (12.64) |
172 (6.77) |
30 (1.18) |
1 (0.04) |
1,594 (62.76) |
ஆதாரம்: Climate-Data.org (altitude: 9m)[8] |
கல்வி
[தொகு]- சோனார்பூர் கல்லூரி [9]
- ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர்[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Fact and Figures". Wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
- ↑ "Base Map of Kolkata Metropolitan Area". Kolkata Metropolitan Development Authority. Archived from the original on 28 September 2007. பார்க்கப்பட்ட நாள் 3 September 2007.
- ↑ Sonarpur Junction railway station
- ↑ "34792 Sealdah-Namkhana Local". Time Table. India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 15 December 2019.
- ↑ Rajpur Sonarpur City Population Census 2011 Data- WEST BENGAL
- ↑ Rajpur Sonarpur Town Population Census 2011
- ↑ "Climate: Rajpur Sonarpur". Climate Data. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
- ↑ "Sonarpur Mahavidyalaya". SM. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
- ↑ "Ramakrishna Mission Residential College". RKMRC. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.