உள்ளடக்கத்துக்குச் செல்

வலையபூக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலையபூக்குளம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல். இந்த ஊரை சேர்ந்த மக்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் குடியேறி அங்கு அவர்கள் பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னை, மதுரை, தஞ்சாவூர் மற்றும் காஞ்சிபுரம் மற்றும் பல பகுதிகளை கூறாலாம். இங்குள்ள நடுநிலை பள்ளி நாடார்கள் உறவின்முறையால் பற்பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. பெரிய முத்தம்மன் கோயில், பத்ரகாளி அம்மன் கோயில் மற்றும் பெரியாண்டவர் கோயில் ஆகியவை முக்கியமான கோவில்கள் ஆகும். இங்கு வைகாசி பொங்கல் விழா மிக முக்கியமான விழாவாகும். இங்குள்ள மக்கள் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்தாலும் இத்திருவிழாவின்போது ஒன்றுகூடுவது வழக்கம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலையபூக்குளம்&oldid=882940" இலிருந்து மீள்விக்கப்பட்டது