இந்திய அரசு அதன் வரையறுக்கப்பட்ட சட்டத்தின்படியான, கூட்டாட்சி, நாடாளுமன்றம் மற்றும் அதன் மக்களாட்சி குடியரசுப் பிரதிநிதிகளுடன், இந்தியப் பிரதமரின் தலைமையில் நடைபெறுகின்றது. இது இந்திய அரசியலமைப்பின் படி ஜனவரி 26, 1950 இல் கட்டமைக்கப்பட்டது மற்றும் இதன் ஒன்றிணைந்த கூட்டாட்சித் தத்துவத்தின்படி 28 மாநிலங்களும், 6 ஆட்சிப் பகுதிகளும் மற்றும் 1 ஆட்சிப் பகுதி தேசிய தலைநகரமும் நிர்மானிக்கப்பட்டு அரசின் ஆட்சி நடைபெறுகின்றது. பொதுவாக இந்தியாவின் ஒன்றிணைந்த கூட்டாட்சி இந்தியக் குடியரசு என அழைக்கப்படுகின்றது. இந்திய அரசு சட்டமியற்றுமிடம், செயலாட்சியர்கள் மற்றும் நீதிமுறைமைகளை கிளைகளாக கொண்டு இயங்குகின்றது. சட்டமியற்றும் கிளையாக இந்தியாவின் ஈரவையாகக் கொண்ட நாடாளுமன்றம் மேலவை எனும் மாநலங்களவையாகவும், கீழவை எனும் மக்களவையாகக் கொண்டு செயல்படுகின்றது. செயலாட்சியர்களாக இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையின் குழுவினர்கள் செயல்படுகின்றனர். நீதிமுறைமைகள், சட்டமியற்றாளர் மற்றும் செயலாட்சியர்களிடமிருந்து தனித்து தன்னாட்சி பெற்றனவாக விளங்குகின்றன. உச்ச நீதிமன்றம்- உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் அவரின் துணை கொண்டு இயங்குபவர்களாக 25 நீதிபதிகளும் செயல்படுகின்றனர். இத்ன சட்ட முறைகள் கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு பொருந்துவனவாக பொதுச் சட்ட முறை மற்றும் நடைமுறைச் சட்டங்களாகவும் கொண்டுள்ளன. இந்தியா பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிமுறைமைகளை கட்டாயமாக பின்பற்றுவனவாகவும் அவற்றை நடைமுறை படுத்துவனவாகவும் உள்ளது.
...இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளாக,வகுக்கப்பட்டுள்ளவைகள் அதன் அரசு மற்றும் சட்டங்களை இயற்ற வழிகோளுகின்றன, மற்றும் இக்கொள்கைகள் அயர்லாந்து நாடுகளின் தேசியவாத இயக்கத்தின் தாக்கத்தை கொண்டனவாக உள்ளனவா?
...இளவரசின் பேரரசான ஜம்மு காஷ்மீர் மாநிலம், உருவாகக் காரணமானவரான மகாராஜா குலாப் சிங், கல்வியறிவு அற்றவரா?
...1674 இல் அஷ்ட பிரதான் என்ற மன்றத்தை உருவாக்கிய சிவாஜிதான் இந்தியாவின் ஆட்சியியலுக்கு உதவி புரிந்த முதல் முன்னோடி என் கூறப்படுகிறதே?
...நானாவதியின் தலைமையில் ஏற்படுத்தப்பெற்ற ஒருநபர் ஆணையமான நானாவதி ஆணையம் தான் 1984 இல் சீக்கியர்களுக்கெதிரான வன்முறைகளை விசாரணை செய்ததா?
...1984 இல் இந்தியாவில் மெகதூத் செயலின் மூலம் சியாச்சின் பனிமலையில் புரிந்த தாக்குதல்தான் இந்தியா சந்தித்த முதல் மிகப்பெரியத் தாக்குதல் எனப்படுகின்றதே?
ஜூலை 21: பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக, 13 வது குடியரசுத் தலைவர் தேர்தல், 2007, இல் வெற்றிபெற்று ஐந்தாண்டுகள் பதவி வகித்தார்.
டிசம்பர் 24: குடியிருப்பு வெப்பப்பகுதித் தீவான லொகாகாரா தீவு கடல் மட்ட உயர்வினால் கடல்கொள்ளப்பட்டது.
டிசம்பர் 19: அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த்தத்தில் கையொப்பமிட்டார்.
டிசம்பர் 17: இந்திய இராணுவம் பங்களாதேஷின் விடுதலைக்க்காக இந்திய பாக்கிஸ்தான் போரில் போராடியதினால் வெற்றி கிடைக்கபெற்று 35 ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூறும் வெற்றி நாளை, தனது 35 வது ஆண்டு வெற்றி நாளாக கொண்டாடியது.
டிசம்பர் 9: ஐ.அ.நா பிரதிநிதிகள் பேரவையில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
நவம்பர் 30: இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9.2% என்று கியூ 2 அறிவித்தது.
நவம்பர் 28: நிலக்கரித் துறை இணை அமைச்சர் சிபு சோரன் கொலை வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத்தால் தண்டைணை பெற்றார்.