உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழிபெயற்ப்பு

[தொகு]

நான் அச்சில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கில புனைக்கதை அற்ற(non-fiction) புத்தகக்ங்கலை மொழிபெயர்ப்பு செய்ய விரும்புகிரேன் இதை விக்கிநூல்களில் செய்யலாமா? 203.199.205.25 08:44, 7 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விக்கி நூல்

[தொகு]

விக்கி நூல்கள் என்றால் என்ன? யாரானாலும் நூல் எழுதலாமா? அவை எப்படி இருக்க வேண்டும்.தென்காசி சுப்பிரமணியன்

விக்கி நூல், தனியாகவோ,கூட்டாகவோ விக்கி போல் ஒரு தளத்தை(http://ta.wikibooks.org) பயன்படுத்தி பொது காப்புரிமை(en:Creative Commons உரிமத்தில் வெளியிடுவதற்கான திட்டம்.இவை எந்த துறையிலும் இருக்கலாம், சொந்த கருத்துக்கள் கூட இருக்கலாம்(விக்கிப்பீடியாவை போல் அன்று) இந்த ஆங்கில விக்கி நூல்கள் பக்கத்தில் மேலும் தகவல்கள் உள்ளன. பி.கு : ஒரு உதவி பக்கத்தில் தொகுக்கும் பொழுது, புதிய தலைப்புகளை பக்கத்தின் கீழே எழுதுவதே வழக்கம். ஸ்ரீகாந்த் 09:08, 19 சூலை 2011 (UTC)[பதிலளி]

கட்டுரை

[தொகு]

எனது கட்டுரைகளை விக்க்ப்பீடியாவில் பதிக்க என்ன செய்யவேண்டும் ? == எனது பெயர் மணி பாலா.., எனது சில கட்டுரைகளை விக்கிபிடியாவில் பதிக்க விரும்புகிறேன்..atharku என்ன seivathu?--−முன்நிற்கும் கருத்து 122.178.159.17 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. கட்டுரை எழுதுவது எளிது. மேலே வலது பக்கம் உள்ள தேடுதல் பெட்டியில் உங்களை கட்டுரைத் தலைப்பை இட்டுத் தேடிப்பாருங்கள். அத்தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இல்லையெனில் ஒரு சிவப்பு நிற இணைப்பும் “இத்தலைப்பில் கட்டுரை உருவாக்கவும்” என்று பதில் வரும். அந்த சிவப்பு இணைப்பை சொடுக்கி புதிய கட்டுரையை உருவாக்கலாம். பதிப்புரிமைக் காரணங்களால், பிற தளங்களில் வெளியானவற்றை பதிவிரக்கம் செய்து விக்கிக்கு சமர்ப்பிக்க இயலாது. சொந்த கட்டுரைகளை மட்டுமே எழுத முடியும். பயனர் கணக்கு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டால் உங்களுடன் உரையாடுவது எளிதாக இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 09:30, 10 மார்ச் 2011 (UTC)

உதவி

[தொகு]

நான் (தொழில்முறை பங்களிப்பின் பகுதியாக இல்லாமல் தனிப்பட்ட முறையில்) ஒரு சிறு கட்டுரையை (கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியைக் கொண்டு) மொழிபெயர்த்துள்ளேன். அதை கருவியின் மூலம் பதிவேற்ற வேண்டாம் என்பது விக்கியர்களின் பரிந்துரை. மொழிபெயர்ப்பு முடிந்துவிட்டது. இப்போது நான் அதை எப்படி விக்கியில் பதிவேற்றுவது என யாராவது உதவினால் நன்றாக இருக்கும். எனது மின்னஞ்சல் முகவரி: shaanthakumar@gmail.com நன்றி அன்புடன்.--சாந்த குமார் 07:32, 5 சனவரி 2011 (UTC)[பதிலளி]

வணக்கம். கூகுள் திட்டத்தில் அடங்காத கட்டுரைகளை நீங்கள் வழமையாக ஏனைய பயனர்கள் போல் கட்டுரைத் தலைப்பிலேயே கட்டுரைகளைப் பதிவேற்றுங்கள்.--Kanags \உரையாடுக 04:11, 8 சனவரி 2011 (UTC)[பதிலளி]

எம்.ஜி.ஆருக்கென தனி பகுப்பு

[தொகு]

நான் எம்.ஜி.ஆர் குறித்தான சில கட்டுரைகளை விக்கியில் பங்காற்றியுள்ளேன். எம்.ஜி.ஆருக்கென http://lordmgr.wordpress.com/ தனி வலைதளம் அமைத்துள்ளேன். அதிலிருக்கும் சில முக்கிய கட்டுரைகளை இங்கே தருகின்ற போது, எம்.ஜி.ஆருக்கென தனி பகுப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.

http://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்

http://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்._கொலை_முயற்சி_வழக்கு,_1967

http://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்._நடித்த_திரைப்படங்கள்.

என இவைகளை ஒரு பகுப்பின் கீழ் வகை படுத்த முடியவில்லை. எம்.ஜி.ஆர்._நடித்த_திரைப்படங்கள் பகுதியை தமிழ்த் திரைப்பட நடிகர்கள் | தமிழ்த் திரைப்படங்கள் | திரைப்படங்கள் பகுப்பிற்குள் இணைத்துள்ளர்கள். அதை எம்.ஜி.ஆர் பகுப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது ஆசை. உதவுங்களேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன்

-பகுப்பினை உருவாக்கியுள்ளேன். உங்கள் பேச்சுப் பக்கத்தில் விவரம் தந்துள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:26, 6 சனவரி 2011 (UTC)[பதிலளி]

குலதெய்வம் குலதெய்வம் (திரைப்படம்) தலைப்பை நகர்த்தலில் சிக்கல்

[தொகு]

நான் குலதெய்வம் என்ற தலைப்பிட்ட கட்டுரையை குலதெய்வம் (திரைப்படம்)-க்கு நகர்த்தினேன் (குலதெய்வ வழிபாட்டுக்கு இணைப்பாக சில கட்டுரைகளில் இருப்பதால்). அதன் பிறகும் குலதெய்வ வழிபாட்டுக்கு உள்ள இணைப்பு (உதாரணம் ->ஹம்பி, மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி, வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி) குலதெய்வம் திரைப்படத்தின் பக்கத்திற்கே மீண்டும் செல்கிறது. இதை எப்படி சரி செய்வது..? பயனர்:கி. கார்த்திகேயன்

வழிமாற்றை நீக்கி சிவப்பிணைப்பாக்கியுள்ளேன். இப்போது உங்கள் கட்டுரையைத் தொடங்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 14:15, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]
நீங்கள் நகர்த்தும்போது ஓர் வழிமாற்றை விட்டுச்செல் என்ற பெட்டியில் டிக் மார்க் செய்திருக்கக்கூடாது. அவ்வாறு செய்திருந்தால் நீங்கள் குறிப்பிட்டுள்ள பக்கங்களில் குலதெய்வம் சிவப்பு இணைப்பாகி யிருக்கும். இப்போது குலதெய்வம் பக்கத்திற்கான வழிமாற்றத்தை நீக்க வேண்டும்.--மணியன் 14:20, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]
மணியன், redirect suppression தெரிவு நிர்வாகிகளுக்கு மட்டுமே உள்ளது. பிற பயனர்களுக்கு ஓர் வழிமாற்றை விட்டுச்செல் பெட்டி தோன்றுவதில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 14:24, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]
நன்றி சோடாபாட்டில்.--மணியன் 08:32, 12 சனவரி 2011 (UTC)[பதிலளி]

பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. விரைவில் குலதெய்வ(ம்) வழிபாடு குறித்த கட்டுரையை எழுத முயற்சி செய்கிறேன். நன்றி. பயனர்:கி. கார்த்திகேயன்உரையாடுக

வார்ப்புரு உதவி

[தொகு]

சில வார்ப்புருக்கள் படிவதாக இல்லை. எவ்வாறு அதனை படியவைக்கலாம்?

[1]

--HK Arun 12:22, 28 சனவரி 2011 (UTC)[பதிலளி]

”படிவது” என்றால் என்ன என்று புரியவில்லை. சிக்கலை சற்றே விளக்குங்களேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:46, 28 சனவரி 2011 (UTC)[பதிலளி]
state=autocollapse என்ற தெரிவினைச் செய்துள்ளீர்கள். இத்தெரிவு இருந்தால், ஒரே கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட அடி வார்ப்புருக்கள் இட்டால் தான் அவை அனைத்தும் படியும். ஒரே ஒரு வார்ப்புரு இட்டு அது படியும்படி செய்ய state=collapsed என்று பயன்படுத்த வேண்டும். --சோடாபாட்டில்உரையாடுக 13:15, 28 சனவரி 2011 (UTC)[பதிலளி]

அதிகாரப்பூர்வ இணையதளம்

[தொகு]

தினமலர் வலைமனையிலிருந்த சில கட்டுரைகள் விக்கயில் ஏற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. தினமலர் போன்ற செய்திதாள் வலைமனைகளில் இருக்கும் கட்டுரைகளை விக்கியில் பதியலாமா.

முத்துகமலம் போன்ற பதிப்புரிமை ஆக்கங்களுக்கு உட்படாத வலைதளங்கள் தெரிந்தால் பயனர்கள் வழிகாட்டவும். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

தினமலரிலிருந்து அப்படியே ஏற்றம் செய்யக் கூடாது. அவ்வாறு ஏற்றப்பட்டிருந்தால் எனது பேச்சுப்பக்கத்தில் எவை என்று குறிப்பிடுங்கள் நீக்கி விடுகிறேன். பொதுவாக வெளிப்படையாக பதிப்புரிமை இல்லை என்று குறிப்பிடாத அனைத்து தளங்களுக்கும் பதிப்புரிமை உண்டு (இந்திய பதிப்புரிமச் சட்டப்படி). தள ஆக்குனர் வெளிப்படையாகச் முன்னரே பதிப்புரிமை இல்லையெனச் சொல்வது தமிழ்ப் பதிவுலகில் குறைவு என்பதால், அவரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி வாங்கி, விக்கியாக்கம் செய்து இங்கு சேர்க்கலாம். பொதுவாக விக்கி போன்ற தளங்களில் பிறர் மாற்றக்கூடும் என்பதால் நிறைய பேர் அனுமதி தருவதில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 17:50, 3 பெப்ரவரி 2011 (UTC)

template help

[தொகு]

கல்வி நிறுவனங்கள் தகவல்சட்டம் template எங்கு கிடைக்கும் mm_nmc

வார்ப்புரு:கல்வி நிறுவனங்கள் தகவல்சட்டம்
வார்ப்புரு பேச்சு:கல்வி நிறுவனங்கள் தகவல்சட்டம்--சோடாபாட்டில்உரையாடுக 05:44, 9 மார்ச் 2011 (UTC)

நன்றி

world cup

[தொகு]

தடுப்பாட்ட உலககிண்ணம் என்பது சரியா அல்லது மட்டைப் பந்து உலகக்கோப்பை என்பது சரியா - தெளிவு படுத்தவும் - mm_nmc

மட்டைப்பந்து என்பது raquet sport என்பதற்கு ஈடான வார்த்தை. துடுப்பாட்டம் என்பது more specific. விக்கிப்பீடியாவில் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் என்பதையே பயன்படுத்துகிறோம்--சோடாபாட்டில்உரையாடுக 10:10, 9 மார்ச் 2011 (UTC)

உதவி

[தொகு]

அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கம்..,விக்கிபிடியாவில் கட்டுரை சமர்ப்பிக்க அல்லது பதிவிரக்கம் செஇது அனுப்ப என்ன செய்வது?

கட்டுரை எழுதுவது எளிது. மேலே வலது பக்கம் உள்ள தேடுதல் பெட்டியில் உங்களை கட்டுரைத் தலைப்பை இட்டுத் தேடிப்பாருங்கள். அத்தலைப்பில் ஏற்கனவே கட்டுரை இல்லையெனில் ஒரு சிவப்பு நிற இணைப்பும் “இத்தலைப்பில் கட்டுரை உருவாக்கவும்” என்று பதில் வரும். அந்த சிவப்பு இணைப்பை சொடுக்கி புதிய கட்டுரையை உருவாக்கலாம்
பதிப்புரிமைக் காரணங்களால், பிற தளங்களில் வெளியானவற்றை பதிவிரக்கம் செய்து விக்கிக்கு சமர்ப்பிக்க இயலாது. சொந்த கட்டுரைகளை மட்டுமே எழுத முடியும்.--சோடாபாட்டில்உரையாடுக 09:30, 10 மார்ச் 2011 (UTC)

அய்யா , நான் இசுலாம் தொடர்புடைய பல்வேறு செய்திளை விக்கீ பீடியா வழியாக எழுதலாம் மறறும் தொகுக்கலாம் என விரும்புகின்றேன். நான் தொகுக்க விரும்பும் செய்திகள் மூல நூற்களில் இருந்தே எடுக்கப்படுவதால் இவை பதிப்புரிமை பெற்றவையாக கருதலாமா அல்லது அப்படியே பயன்படுத்தலாமா? முழுமையான விளக்கம் தரவும்.--Ilynazeerahmed 06:52, 15 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

அட்டவணை வரிசைகளை center align பண்ணுவது எப்படி -- முரளி

இரண்டு மூன்று வழிகள் உள்ளன. காண்க en:Help:Table. --சோடாபாட்டில்உரையாடுக 16:30, 16 மார்ச் 2011 (UTC)
ஒரு எளிய வழி...மற்ற கட்டுரைகளில் உள்ள அட்டவணை (table)களில் நாம் விரும்பும் வடிவமைப்பு உள்ளதை cut & paste செய்து தரவுகளை நம்முடையதாக்கி விடலாம் ;) HTML, CSS போன்றவற்றில் பழக்கமில்லாதவர்களுக்கு இது ஒரு நல்ல வழி. --மணியன் 17:05, 16 மார்ச் 2011 (UTC)

தமிழ் வார்ப்புரு

[தொகு]

http://en.wikipedia.org/wiki/Template:Userbox-level - இவ்வார்ப்புருவுக்கு இணையான தமிழ் வார்ப்புரு எது? --சிவகோசரன் 14:24, 9 ஏப்ரல் 2011 (UTC)

இது த.விக்கியில் உருவாக்கப்பட இல்லை.--சோடாபாட்டில்உரையாடுக 14:28, 9 ஏப்ரல் 2011 (UTC)

ஆங்கில - தமிழ் விக்கி கட்டுரை இணைப்புக்கள்

[தொகு]

இந்த தமிழ் கட்டுரையில் இதன் ஆங்கில இணைப்பாக இது இணைக்கப்பட்டுள்ளது. இது சரியானதே. ஆனால் இந்த ஆங்கிலக் கட்டுரையில் தமிழிற்கான இணைப்பு இல்லை. தானியங்கிகள் மூலம் இடப்படுகின்ற இவ்விணைப்புகளில் இது தவறியது எதனால்? --சிவகோசரன் 10:54, 19 மே 2011 (UTC)[பதிலளி]

இப்படியான பல கட்டுரைகள் அங்கும் இங்கும் இணைப்புக் கொடுக்கப்படாமல் உள்ளன. அப்படியானவற்றைக் காணும் போது நீங்களே இரண்டு பக்கங்களிலும் இணைப்புகளை ஏற்படுத்தலாம். தானியங்கிகள் எப்படி இயங்குகின்றன என்று தெரியாது. தமிழ்ப் பயனர்கள் யாரேனும் விக்கியிடை இணைப்புகளுக்கு தானியங்கிகளைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை. முன்னர் சுந்தர் செய்து வந்தார்.--Kanags \உரையாடுக 11:03, 19 மே 2011 (UTC)[பதிலளி]
தரவுதள அதீத பயன்பாடோ தானியங்கியின் அதிக பணிச்சுமையோ காரணமாக இருக்கக்கூடும் சிவகோசரன். ஆராய வேண்டும். கனக்சு சொல்வது சரியே! இவ்வாறு காணும்போது நாமே இணைப்பது நலம். நான் அதுபோல் பல ஆங்கிலக் கட்டுரைகளுக்கு இணைத்ததுண்டு.

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:08, 19 மே 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையில் தலைப்பு மாற்றப்பட்ட போது வேறு ஒரு தானியங்கி அதனை முற்றாக ஆங்கில விக்கியில் இருந்து நீக்கியிருக்கிறது. இது அந்த தானியங்கி நிரலில் உள்ள தவறென்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:12, 19 மே 2011 (UTC)[பதிலளி]
நன்றி. இனிமேல் இவ்வாறான கட்டுரைகளைக் கண்டால் இணைப்பை ஏற்படுத்துகிறேன். --சிவகோசரன் 11:23, 19 மே 2011 (UTC)[பதிலளி]


மிகப்பெரும்பாலும் தானியங்கிகள் பிடித்து இணைத்துவிடுகின்றன. luckasbot, . EmausBot, kamikazebot, Xqbot என ஏழெட்டு தானியங்கிகள் இவ்வேலையை செய்து வருகின்றன. ஆனால் இது 100% பிழையில்லாப் பணியில்லை. சில நேரங்களில் தானியங்கி பணிச்சுமை, விக்கிமீடியா வழங்கிகளில் சேவைத்தடை போன்ற காரணங்களால் சில கட்டுரைகள் விட்டுப்போகின்றன. எனவே பத்தில் ஒன்றிரண்டு விட்டுப்போகிறது. சில நேரங்களில் விடுபட்டவை சில வாரங்கள் கழித்து சேர்க்கப்படுவதுமுண்டு, சில நேரங்களில் அப்படியே விடுபட்டுப்போவதுமுண்டு. கன்க்சும் சூரியாவும் சொல்வது போல நாமே செய்துவிடுவதும் நல்லது--சோடாபாட்டில்உரையாடுக 12:06, 19 மே 2011 (UTC)[பதிலளி]
கனக்ஸ், redirect suppressed நகர்த்தல்களின் போது இதுபோன்று தானியங்கிகள் தவறு செய்வதுண்டு--சோடாபாட்டில்உரையாடுக 12:06, 19 மே 2011 (UTC)[பதிலளி]

அட்டவணை

[தொகு]

விக்கியில் அட்டவணைகளை உருவாக்கும் போது class="wikitable" யை பயன்படுத்தும் போது cellpadding யை கூட்டுவதற்கான வழி என்ன என்பதைக்குறிப்பிட்டு உதவவும். நன்றி. --Sasitharagurukkal 16:59, 20 மே 2011 (UTC)[பதிலளி]

பதிவேற்றிய படிமத்தினை நீக்குவது எப்படி?

[தொகு]

நான் பதிவேற்றிய படிமத்தினை நீக்குவது எப்படி..(அதற்கு பதில் வேறு புதிய படிமத்தை பதிவேற்ற விரும்பவில்லை )? எனக்கு நீக்கும் உரிமை உண்டா? இது சந்தேகம் மட்டுமே.. படிமத்தினை தமிழ் பெயருடன் பதிவேற்றலாமா?-கி. கார்த்திகேயன் 13:31, 27 மே 2011 (UTC)[பதிலளி]

நிர்வாக அனுமதி உள்ளவரே நீக்க முடியும். எந்தப் படிமத்தை நீக்க வேண்டுமோ அதன் பேச்சுப் பக்கத்தில் ஒரு குறிப்புப் போட்டு விடுங்கள். நிர்வாகிகள் கவனித்து நீக்குவார்கள். தமிழ்ப் பெயருடன் பதிவேற்றலாம். தப்பில்லை. இவை உங்களது ஆக்கம் என்றால், அவற்றைப் பொதுவில் தர விரும்புகிறீர்கள் என்றால், அவற்றை விக்கிமீடியா காமன்சில் பதிவேற்றினால் உங்கள் படிமங்களை வேறு மொழி விக்கிப்பீடியரும் தமது மொழிக் கட்டுரைகளில் பயன்படுத்த முடியும். அங்கு பதிவேற்றுவதாய் இருந்தால் ஆங்கிலத்தில் பெயரிடுவது நல்லது.--Kanags \உரையாடுக 13:38, 27 மே 2011 (UTC)[பதிலளி]

ஊடக நடுவத்தில் பதிவேற்றிய படத்தை நீக்க {{speedy|reason for deletion}}என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தவும். அங்குள்ள நிர்வாகிகள் நீக்கிவிடுவர். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:47, 27 மே 2011 (UTC)[பதிலளி]

பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. கி. கார்த்திகேயன் 11:56, 3 சூன் 2011 (UTC)[பதிலளி]

ஆன்ட்ராஐட்2.1 ஐ பட்ரி விவரம் தெவை

தள அறிவிப்பில் சுழலும் அறிவிப்புகளை இடுவது எப்படி?

[தொகு]

பங்களிப்புகளை ஈர்க்க, தள அறிவிப்பில் ஏற்கனவே உள்ள பங்களிப்பாளர்களை அறிமுகப்படுத்தலாம் என்று விக்கிப்பீடியா பேச்சு:தள அறிவிப்பு பக்கத்தில் பேசி இருந்தோம். நன்கொடை கோரி சுழலும் அறிவிப்புகள் ( rotating banners ) வருவது போல் இதைச் செய்யலாம். இதற்கான நிரல், வழிமுறை தெரிவித்தால் தேவைப்படும் அறிவிப்புகளை உருவாக்கலாம்--இரவி 08:51, 30 சூன் 2011 (UTC)[பதிலளி]

இதற்காகப் பல மணிநேரம் செலவிட்டு உதவிய சிறீக்காந்துக்கு நன்றி. தற்போது தள மேல் பகுதியில் சுழலும் அறிவிப்புகளைக் காணலாம். ஒரு சில மணித்துளி / மணி நேர இடைவெளியில் இவை மாறி மாறி வரும்--இரவி 11:34, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]

எனது கவிதைகளை பகிர்ந்து கொள்ள ஒப்புதல் தருவீரகளா? பயனர்:kvananda@gmail.com;

விக்கிப்பீடியாவில் படைப்புகளை (சொந்தக் கட்டுரை, கவிதை, கதை போன்றவற்றை) இடுவதில்லை. தகவல் கட்டுரைகளை மட்டுமே சேர்க்கும் கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா உள்ளது. உங்கள் படைப்புகளை சிலவற்றை உங்கள் பயனர் பக்கத்தில் - பயனர்:Kvananda இடலாம் --சோடாபாட்டில்உரையாடுக 14:20, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]
பொது உரிமத்தில் தருவதானால், விக்கி நூற்களில் பகிர்ந்து கொள்ளலாம். --Natkeeran 13:09, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]

அறிவிப்புப் பெட்டி நிற மாற்றம்

[தொகு]

class="messagebox standard-talk" குறிக்கும் அறிவிப்புப் பெட்டி நிறத்தை எப்படி மாற்றுவது? அல்லது, இதே போன்ற இன்னொரு புதிய வகையை உருவாக்குவது எப்படி? நன்றி--இரவி 11:32, 8 சூலை 2011 (UTC)[பதிலளி]

விக்கி யோகா கட்டுரையில் ஒரு சிறிய தவறு

[தொகு]

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE#.E0.AE.87.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.AE.E0.AF.8D இந்த லிங்கில், ஒரு கோட்சில் மிக நீண்ட வாக்கியம்(மிக நீலமான லைனை) ஒன்றை சேர்த்துள்ளனர். அதை எப்படி இரண்டாக உடைப்பது ? அதை உடைத்தால்தான் படிபதற்கு எளிதாக இருக்கும். அதை எப்படி உடைப்பது ? --Ramusethu 20:14, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]

சரி செய்துள்ளேன். வரியின் ஆரம்பத்தில் வெற்றிடம் (space அல்லது indent) இருப்பின் இது போன்று தெரியும். அதனை நீக்கி விட்டால் வரிகள் ஒன்றாகி விடும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:01, 1 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
நன்றி. நான் கேள்வி கேட்டேன் நீங்கள் செய்தே விட்டீர்கள் :-) .--Ramusethu 09:05, 2 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கட்டுரை பட்டியல்

[தொகு]

நான் தொடங்கிய கட்டுரைகளின் பட்டியலை என் பயனர் பக்கத்தில் எவ்வாறு கொடுப்பது.--தென்காசி சுப்பிரமணியன் 15:09, 4 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

பின்வரும் வார்ப்புருவை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கவும்/ஒட்டவும்(இரட்டை மேற்கோள் குறிகள் ஏதும் இல்லாமல்). {{பங்களிப்புப் புள்ளிவிவரம்‎}} கி. கார்த்திகேயன் 12:17, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

அன்னா ஹசாரே கட்டுரை

[தொகு]

அன்னா ஹசாரே குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். எனக்கு முன்னரே அதை சிலர் எழுதி இருக்கிறார்கள். அதை திருத்த முயன்றும் முடியவில்லை என்ன செய்வது.....

திருத்தும் போது முன் உள்ளவற்றுடன் உங்கள் வரிகளை இணையுங்கள். தற்போது நீங்கள் இருக்கும் வரிகளை அழித்து உங்கள் வரிகளை மட்டும் சேர்த்து வருகிறீர்கள். இவ்வாறு செய்வதற்கு பதில் முன்னர் உள்ளதோடு சேருங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 08:55, 20 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கட்டுரையில் பொருளடக்க பெட்டி

[தொகு]

விக்கிப்பீடியாவில் உள்ள ஒரு கட்டுரையில் பொருளடக்கம் பெட்டி எவ்வாறு சேர்ப்பது?

இரண்டிற்கு மேற்பட்ட பகுதிகள் உள்ள கட்டுரைகளில் default ஆக வரவேண்டுமே. மறைப்பதற்குத் தான் வேறு நிரல் துண்டு சேர்க்க வேண்டும். என்க்கட்டுரையில் இச்சிக்கல்?--சோடாபாட்டில்உரையாடுக 11:33, 28 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

ஏர்ஷிப் (Airship) க்கு இணையான தமிழ்ச் சொல் எது?

[தொகு]

ஆங்கிலத்தில் உள்ள ஏர்ஷிப் (en:Airship) கட்டுரையை தமிழாக்கம் செய்யலாம் என் நினைக்கிறேன். ஏர்ஷிப் என்றே தமிழில் கட்டுரையை எழுதலாமா, அல்லது வேறு தலைப்பில் எழுத வேண்டுமா? கிருஷ்ணபிரசாத் 07:32, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் பெயர் ஏற்பட்ட காரணத்தைக் கருத்தில் கொண்டால் அப்படியே “வான்கப்பல்” என்று மொழிபெயர்க்கலாம். வான்கப்பல் என்ற தலைப்பில் தொடங்குங்கள், “ஏர்ஷிப்” என்றொரு வழிமாற்றும் இட்டு விடுங்கள். பின் இதைவிடப் பொருத்தமான பெயர் கிடைத்தால் மாற்றிக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 07:35, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
வான்கப்பல் நல்ல சொல்.--Kanags \உரையாடுக 07:36, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி. அந்த பெயரிலேயே கட்டுரையை மொழிபெயர்கிறேன். --கிருஷ்ணபிரசாத்உரையாடுக 07:41, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
ஆகாயக் கப்பல் என்ற சொல் கூகுள் மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்டள்ளது. அதுவும் பொருத்தமாகவே அமையும் என நினைக்கின்றேன்... --மதனாஹரன் 10:58, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
கூகுள் மொழிபெயர்ப்பை பின்பற்ற வேண்டாம். பாதிக்கு மேல் தரம் குறைந்த அகராதிகளில் இருந்து அப்படியே மூலம் சுட்டாமல் போட்டு வைத்துள்ளார்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 11:15, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

அப்படியானால் தமிழ்க் கலைச் சொற்கள், ஆங்கில - தமிழ் அகராதி என்பனவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு விக்கிப்பீடியாவால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய தரமான இணையத்தளங்களின் முகவரிகளைத் தந்து உதவுகின்றீர்களா? --மதனாஹரன் 04:35, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

மதனாஹரன், இங்கு கலைச்சொல்லாக்கங்கள் உரையாடல்கள் நடத்தியும் பல்வேறு அகராதிகளை ஒப்பு நோக்கியுமே எடுத்தாளப்படுகின்றன. விக்கிப்பீடியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகராதிகள் என்றில்லை--சில சமுதாய வலைவாசலில் பட்டியலிடப்பட்டுள்ளன--விக்சனரி ஓர் பரிந்துரை. கூகுள் மொழிபெயர்ப்பு பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்துள்ள உரையாடல்களை நீங்கள் கூகுள் மொழிபெயர்ப்பு என்று தேடி அறிந்து கொள்ளவும்.--மணியன் 04:47, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
நமது விக்சனரியும் அதில் தரப்பட்டுள்ள அகரமுதலிகள் பட்டியலும் பயன்படக்கூடியவை--சோடாபாட்டில்உரையாடுக 04:44, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றிகள்! --மதனாஹரன் 05:06, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

திருக்குறள் உதவி

[தொகு]

இணையதள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என் பெயர் பி.ஜெயராமன். கோயமுத்தூரில் வசித்து வருகிறேன். பி.காம் பட்டம் பெற்று ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறேன். நான், திருக்குறளில் உள்ள, இலக்கண அம்சங்களைப் பற்றி அறிய முற்பட்டு வருகிறேன். இதன் முதற்படியாக, 1330 குறட்பாக்களுக்கும் அலகீட்டு வாய்ப்பாடு எழுதிவருகிறேன். அலகீட்டு வாய்ப்பாட்டின் இலக்கணப்படி எவ்விதத் தவறுமின்றி இந்த 1330 குறட்பாக்களும் அமைந்துள்ளதை அறியும்போது, திருவள்ளுவரின் புலமையை நினைத்து மிகவும் வியப்பாக உள்ளது. அடுத்த கட்டமாக, இந்த 1330 குறட்பாக்களில் உள்ள இதர இலக்கண அம்சங்களை அறிய முற்பட்டு வருகிறேன். உதாரணத்திற்கு, ஒரு திருக்குறளில் அமைந்துள்ள அணி (உவமை அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, சொற்பொருள் பின்வரு நிலையணி, இன்னபிற.,), உவம உருபு, வினைத்தொகை, ஆகுபெயர், ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம், வியங்கோள் வினைமுற்று இதுபோல தமிழ் இலக்கணத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளனவோ, அவை இந்த 1330 குறட்பாக்களில் எங்கெங்கு வருகின்றன என்பதை விளக்கமாக அறிய முற்பட்டு வருகிறேன். அப்படி அறியத் தேவையான அடிப்படை அறிவுக்கு, என்னிடத்தில் சிறிது பஞ்சம்(!)உள்ளது. எனவே, விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் உலாவரும் தமிழாசிரிய நண்பர்கள் உதவி எனக்குத் தேவைப் படுகிறது. என்னுடைய இந்த இடுகையைப் பார்வையிடும் நண்பர்கள் எவரேனும் எனக்கு உதவிட வேண்டுகிறேன். எந்தப் புத்தகத்தை/புத்தகங்களைப் படித்தால் என்னுடைய இலக்கணப் பார்வை விரிவடையும் என்பதற்கான மார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறேன். என்னுடைய மின்னஞ்சல் vyshupjr@gmail.com

நண்பர்களாகிய உங்களது உதவி எனக்கு விரைந்து கிடைத்தால், நானும் என்னுடைய இந்த task-ஐ வெற்றிகரமாக பூர்த்திசெய்துவிடுவேன். ஆதலால், என் அன்புக்குரிய இணையதள நண்பர்களே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.

நன்றி, தங்கள் அனைவருடய மேலான ஆதரவை நாடும், தங்கள் நண்பன், பி.ஜெயராமன்.

Tree diagram

[தொகு]

விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் பொழுது, கட்டங்கள் உருவாக்கத் தெரியும். Tree diagram எப்படி வரைவது ? --இராஜ்குமார் 10:57, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

Motilal NehruSwaruprani
Kamala NehruJawaharlal NehruVijaya Lakshmi PanditRanjit Sitaram PanditKrishna HutheesingGunottam Hutheesing
Indira GandhiFeroze GandhiNayantara SahgalHarsha HutheesingAjit HutheesingHelen Armstrong
Rajiv GandhiSonia GandhiSanjay GandhiManeka Gandhi
Rahul GandhiPriyanka VadraRobert VadraVarun Gandhi

மாதிரி நிரல் (ஆ.வியிலிருந்து சுட்டது). இது போதுமானதா?--சோடாபாட்டில்உரையாடுக 11:02, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தற்போதைக்கு போதுமென்று எண்ணுகிறேன். மிக்க நன்றி சோடாபாட்டில். --இராஜ்குமார் 12:13, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

How to crop pictures for display ?

[தொகு]

இன்றைய (08/11/2011) ஆங்கில முகப்புப் பக்கத்தில் ஜோ பிரேசியர் குறித்த செய்தியில் அவரது குழுப்படமொன்றிலிருந்து அவரது பகுதி மட்டும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதன் மூலப்பக்கத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. முகப்புப் பக்கங்கள் பல வார்ப்புருக்களால் வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்னால் அதற்கான நிரலை இனங்காண முடியவில்லை. எவரேனும் உதவ முடியுமா ?--மணியன் 08:07, 9 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

trick linking - காட்டுவது ஒரு படம், தொடுப்பு செல்வது இன்னொரு படம். பெரிய படத்தை வெட்டி இன்னொரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் [2]. அதை in the news வார்ப்புருவில் போட்டு விட்டு தொடுப்பு மட்டும் பெரிய படத்துக்கு போவது போல ஒரு வார்ப்புரு உருவாக்கி இணைத்துள்ளார்கள். அப்பக்க நிரல் - [3]--சோடாபாட்டில்உரையாடுக 08:18, 9 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சோ.பா.--மணியன் 10:12, 9 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பயனர் பக்கத்தை பிறர் தொகுக்கமுடியாதபடி எப்படி மாற்றுவது?

[தொகு]

எனது பயனர் பக்கத்தை பிறர் தொகுக்கமுடியாதபடி எப்படி மாற்றுவது. கி. கார்த்திகேயன் 12:09, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்கு மட்டும் மாற்றும் அனுமதி தர இயலாது (தர வழியில்லை). எந்த ஒரு பக்கத்தையும் ஐபி பயனர்கள், புதுப்பயனர்கள் தொகுக்க முடியாத வண்ணமும் அல்லது நிருவாகிகள் மட்டும் தொகுக்கும் படி செய்யவும் மட்டும் தெரிவுகள் உள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 12:27, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
விக்கியின் தத்துவமே எந்தப் பக்கத்தையும் எவரும் தொகுக்கக்கூடுயதாக இருப்பதே. பயனர் பக்கத்தை பிறர் தொகுக்காமல் இருப்பது ஒரு மரபே. சிறு பிழைகளை (எழுத்துப்பிழை.இலக்கணப்பிழை) இவற்றை பிறர் தொகுக்கக்கூடும். ஏதாவது விசமத்தனமான தொகுப்புகள் நேர்ந்தால் உங்கள் முறையீட்டின்படி உங்கள் பயனர் பக்கத்தை பூட்டி வைக்கலாம். அப்போது நிர்வாக அணுக்கம் இல்லையென்றால் நீங்களும் தொகுக்க முடியாது. நீங்கள் விரும்பினால், வேண்டிய மாற்றங்கள் செய்து நிலைபெற்றபின், நிர்வாகிகள் மூலம் பூட்டச் சொல்லலாம்.--மணியன் 13:19, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி புரிந்துகொண்டேன்.. கி. கார்த்திகேயன் 05:07, 28 நவம்பர் 201

Thiagarajar College of Engineering, Madurai

[தொகு]

Today a professor from University of Waterloo came to TCE. From his speech i know about the tamil wikipedia where we can also share our thoughts with World tamil people. how can i type in Tamil fonts. help me in this regard

I forget the Professor name, (sorry sir) Thanks for his lecture.

He told tamil people who are outside their motherland only contributing to this site. I also felt ashamed about my ignorance,

I heard his lecture which is in pure tamil, which is not in the form that we are using today in tamil nadu.

Thanks for your comments. நீங்கள் குறிப்பிடும் பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார். தமிழ் விக்கியில் பங்களிப்பது பற்றி ஏதேனும் ஐயமிருப்பின் இங்கோ அல்லது என் உரையாடல் பக்கத்திலோ தயங்காமல் கேளுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 11:59, 9 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

புதிய கட்டுரைகள்

[தொகு]

புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளை எவ்வாறு பார்ப்பது?--ஏர்னஸ்டோ பாலாஜி 06:36, 16 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த இணைப்பின் மூலம். இது முதற்பக்கத்தில் கட்டுரைகள் - “புதியன” என்று தரப்பட்டுள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 06:56, 16 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக HTML தெரிந்தால் மட்டும் தான் தொகுக்கவோ புது கட்டுரைகளை எழுதவோ இயலுமா?

[தொகு]

HTML தெரியாத என்னை போன்றவர்கள் ஏதும் செய்ய இயலாதா?

HTML தெரிய வேண்டும் என அவசியமே இல்லை. தொகு பொத்தானை அழுத்தி தொகுங்கள். ஸ்ரீகாந்த் 10:02, 17 பெப்ரவரி 2012 (UTC)

ஆங்கிலத்தில் உள்ள பல கட்டுரைகளை எனக்கு நேரம் கிடைக்கும் போது தமிழில் மொழிப்படுத்த விரும்புகிறேன். இங்கு அதை எவ்வாறு செய்வது? நன்றி ஆனால் அங்கே ஏற்கனவே HTML பயன்படுத்தி இருக்கிறார்களே நான் தமிழில் தட்டச்சு செய்ததை அங்கே பதிவிட்டால் போதுமா? தலைப்புகள் குடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?