விக்கிப்பீடியா:மே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
சென்னை விக்கிப்பீடியர்கள் சந்திப்பு ஒன்று மே 26, 2013 அன்று நடைபெற்றது உள்ளது. மொசில்லா நிறுவனம், சென்னை லினக்ஸ் பயனர் குழு, விக்கிமீடியா இந்தியா இணைந்து நடத்தும் “திறந்த வார இறுதிகள்” (Open Weekends) நிகழ்வின் பகுதியாக நடைபெற உள்ளது.
புதியவர்களுக்கான விக்கித் திட்டங்கள் அறிமுகத்துடன் அனுபவமுள்ள பயனர்களுக்கு பின்வரும் தலைப்புகளில் வழங்கல்கள் நடைபெற்றன.
- விக்கிதரவு மற்றும் மொழிபெயர்ப்பு விக்கிப் பயன்பாடு (சூர்யா)
- விக்கிகளில் தானியங்கிகள் (யுவராஜ் பாண்டியன்)
- விக்கிதானுலாவி பயன்பாடு (சண்முகம்)
- புகைப்படக்கலை அடிப்படைகள் பற்றிய பயிற்சி (இரவீந்திர பூபதி, பிரதீப் குமார்).
இவை தவிர மே 25, 26 இல் பிற திறமூல தொழில்நுட்ப அறிமுக வழங்கல்களும் நடைபெற்றன
இடமும் நேரமும்
[தொகு]- இடம் : Railsfactory, Sedin Technologies Private Limited # 38/39, 3rd Floor, White's Road, Royapettah, Chennai (சத்யம் திரையரங்கின் வண்டி நிறுத்துமிடம் பின்புற வாசலுக்கு எதிரில் கார்ப்பரேசன் வங்கி கட்டடத்தின் மூன்றாவது மாடியில்)
- நேரம் : 26 மே, 2013, ஞாயிற்றுக்கிழமை காலை 10-1 மணி
- முகநூல் பக்கம் - https://www.facebook.com/events/152064334973643/?ref=25.
கலந்துகொண்டவர்கள்
[தொகு]- ரெயில்ஸ்ஃபேக்டரி அலுவலகத்தில் நுழைய முன் அனுமதி பெறுவதற்காக இங்கு தங்கள் பெயரையும் தகவல்களையும் அருள் கூர்ந்து பதிவு செய்ய வேண்டுகிறோம்.
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
- சோடாபாட்டில்உரையாடுக
- சூர்யபிரகாஷ் உரையாடுக
- தமிழ்க்குரிசில் (பேச்சு)
- இரவி (பேச்சு)
- Sengai Podhuvan (பேச்சு)
- இரவீந்திர பூபதி
- பிரதீப் குமார்
- சண்முகம்
- அருண்தாணுமாலயன்
- செங்கைச் செல்வி
பங்கேற்றோர் கருத்துகள்
[தொகு]கற்றுக் கொண்ட நுணுக்கங்கள் ஒருபுறம் இருக்க, மொழியின்மீதும் குமுகாயத்தின்மீதும் இருக்கும் அக்கறையின் (அல்லது ஆர்வத்தின்) காரணமாக தங்களின் சொந்த நேரத்தைச் செலவிடும் நண்பர்களை சந்தித்தது பெரும் உவகையைத் தந்தது! நல்ல ஊக்குவிப்பாகவும் அமைந்தது. இம்மாதிரியான சந்திப்புகளை அடிக்கடி நடத்த வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:22, 26 மே 2013 (UTC)
- நிழற்படக் கலை குறித்த அறிமுகம் சிறப்பு. ஆட்டோவிக்கிபிரவுசர் குறித்தது பயனுள்ளதாய் அமைந்தது. இன்றைய சந்திப்பு விவாதங்களுடன் இனிதே நிறைவுற்றது. அடுத்த முறை, விக்கியர் சந்திப்பில் நான் அறிமுகவுரை வழங்க வேண்டும் என்று பாலாவும், கண்களை கவனித்துக் கொள்ளுமாறு சிவகுருவும் கூறினர். இரவிக்கு போட்டியாக சந்தித்த விக்கிப்பீடியர் எண்ணிக்கையையும் அதிகரித்துவிட்டேன். நிறைய கற்றுத் தந்தார். தமிழ் 99 எளிமையாக இருந்தது. மேற்கொண்டு சந்திப்புகளை நிகழ்த்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. :-P
- விருப்பம் தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:35, 26 மே 2013 (UTC)
விக்கியர்களை சந்தித்தால் விளைந்த மனநிறைவு மட்டுமல்லாது, விக்கி முதற் பக்க பராமரிப்பு பணிகளை எளிதாக்க ஒரு வழி உருவானதும் எனக்கு மகிழ்ச்சியினை அளிக்கின்றது. யுவராஜ பாண்டியனின் வழிகாட்டலுடன் உருவாக்கிய சூர்யாவுக்கு பாராட்டுகள்.--சோடாபாட்டில்உரையாடுக 02:49, 27 மே 2013 (UTC)
- பல தமிழ் விக்கிப்பீடியர்களை ஒரே இடத்தில் காண முடிந்தது மகிழ்ச்சி. வழக்கமாக புதிய பயனர்களுக்கு எளிய விக்கி அறிமுகம் தருவதோடு நிகழ்ச்சி முடிந்து விடும். இந்த முறை வந்திருந்தோர் அனைவரும் நெடுநாள் பங்களிப்பாளர்கள் என்பதால் ஒருவருக்கு ஒருவர் வேண்டிய ஆலோசனைகள், நுட்ப உதவியை வழங்குமாறு நேரம் அமைந்தது சிறப்பு. வருங்கால நிகழ்வுகளில் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னை திற மூல நண்பர்கள் சிறப்பான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள். அவர்களுக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்த சோடாபாட்டிலுக்கும் சிறப்பு நன்றி :) --இரவி (பேச்சு) 18:36, 29 மே 2013 (UTC)